கிட்ஸ் துவரம்பருப்பு புட்டு

தேதி: February 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

துவரம் பருப்பு - ஒரு கப்
பூண்டு – 4 பல்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் – 2
கடுகு – தாளிக்க
கறிவேப்பிலை – 3 இலை
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி – 1/4 தேக்கரண்டி


 

பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துவரம் பருப்பை போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்துள்ள துவரம்பருப்பை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பின்னர் பொடியாக நறுக்கின பூண்டினை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்திருக்கும் துவரம்பருப்பை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு வேக விடவும்.
வேகும் நேர இடைவெளியில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
20 – 25 நிமிடம் நன்கு வேகவிட்டு புட்டை போல உதிரி உதிரியாக வந்த பிறகு கொத்தமல்லி தழை, பெருங்காயம், பொடியாக நறுக்கின இஞ்சி சேர்த்து கிளறி விடவும்.
புட்டை நன்கு கிளறிய பின்னர் 2 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்னர் பரிமாறவும்.
சுவையான கிட்ஸ் துவரம்பருப்பு புட்டு ரெடி. இதனை சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

HAI
GEETHA U R RECEIPE LOOKS GREAT
THANK YOU SANDHYA

BE GOOD TOO GOOD

மஞ்சுளா,
எப்படி இருக்கிங்க? மிகவும் நன்றி.
கீதா ஆச்சல்

ஆஹா...!மிக எளிமையான குறிப்பு.செய்துப் பார்த்தேன்.குழ்ந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.
நன்றி அக்கா.

மிகவும் நன்றி. குழந்தைக்கு மிகவும் பிடித்தது என்று கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா,

இன்று கிட்ஸ் துவரம்பருப்பு புட்டு செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது . மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி,
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா ஆச்சல் இன்று உங்கள் துவரம் பருப்பு பிட்டு செய்தேன் ரொம்ப அருமையாக இருந்தது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள் உங்களுக்கு
ரொம்ப நன்றி தொடரட்டும் உங்கள் புதுபுது recipes

அன்புடன்
ஈசன்

மிகவும் நன்றி ஈசன்.
குழந்தைகளுக்கு பிடித்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாச்சல் நீங்களும், அக்க்ஷதா குட்டியும் நலமா?உங்கள் சமையலின் போது துவரம் பருப்பு புட்டு செய்திருந்தேன் மிகவும் நன்றாகயிருந்தது, கிட்டத்தட்ட பருப்பு உசிலி டேஸ்ட்டில் இருந்தது. நன்றி:-) நெட் பிரச்சினையால் ஏற்பட்ட தாமதமான பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும்.

அன்புடன் :-).........
உத்தமி :-)

மிகவும் நன்றி உத்தமி அக்கா.
எதற்காக மன்னிப்பு எல்லாம்..எல்லோருக்கும் இப்படி தான் பாருங்கள்..நீங்கள் பின்னுட்டம் கொடுத்து எவ்வளவு நாள் கழித்து நான் உங்களுக்கு பதில் தருகிறேன். மன்னிக்கவும்…லேட்டாக பதில் அனுப்புகிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்