பான் கேக் மிக்ஸ்(Pancake Mix)

தேதி: February 9, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 4 கப்
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சக்கரை - 2 மேசைக்கரண்டி


 

அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது பான் கேக் மிக்ஸ் ரெடி.


இதனை குறைந்த்து 2 மாதம் வரை உபயோகிக்கலாம்.
பான் கேக் செய்யும் பொழுது தேவையான அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து ஊற்றவும்.(இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்)

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா பான் கேக் மிக்ஸை தோசைக்கு மாவு கலக்கும் பதத்தில் கலக்கனுமா? அல்ல்து கட்டியாக கலக்கிவைக்கனுமா? மேலும் இதை தோசை வார்ப்பது போல் வார்க்கனுமா? ப்ளீஸ் விளக்கம் தேவை. (ஏனென்றால் பான் கேக்கை பார்த்ததோ ருசித்ததோ இல்லை) இதற்கு சைட்டிஷ் எது? நன்றி அக்கா.

அரசி,
எப்படி இருக்கிங்க? குழந்தைகள் நலமா?
பான்கேக் என்பது குட்டி ஊத்தப்பம்(தோசை) மாதிரி தான் .
இதனை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்(கொடுத்துள்ள அளவினை போல்). பிறகு இதனை சிறிய சிறிய தோசைகளாக ஊற்றவும்(மாவினை தோசை கல்லில் ஊற்றும் பொழுது அதுவே பரவி கொள்ளும்.) நீங்கள் கரண்டியால் அழுத்தி தேய்க்க வேண்டாம்.
இதற்கு தேன், மேப்பில் சிரப் , கீரிம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதனை பெரும்பாலும் வெளிநாட்டவர்களின் காலை உணவு(குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்)
அன்புடன்,
கீதா ஆச்சல்