உருளைக் கறி & பஃப் பேஸ்ரி

தேதி: February 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கறிக்கு:
உருளைக்கிழங்கு - 3
நறுக்கின வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
நறுக்கின பூண்டு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறித்தூள்/சாம்பார் தூள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
பஃப் செய்ய:
பைலோ ஷீட் - ஒரு பாக்கெட்
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்கவும். கிழங்கு வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடுகு, சீரகம் போட்டு வதக்கவும்.
வெங்காயம், பூண்டு வதங்கியதும் அதில் கறித்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.
கலவையை நன்கு வதக்கிய பின்னர் உப்பு மற்றும் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி விடவும்.
இப்போது உருளைக்கிழங்கு கலவையை அடுப்பிலிருந்து இறக்கி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி வைக்கவும்.
பின்னர் பைலோ பேஸ்ரி ஷீட்டை மாவுத் தூவிய ஒரு தட்டில் போட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் இந்த கலவையை வைக்கவும். உருளைக்கிழங்கு கறி இல்லாவிட்டால் சன்னா மசாலா வைக்கலாம் அல்லது சோயா மீற் (சோயா உருண்டை) கறி வைக்கலாம்.
அதை மூடி, பேக்கிங் தட்டில் வைத்து அடுக்கிக் கொள்ளவும்.
பின்னர் பேக்கிங் தட்டில் அடுக்கி வைத்திருக்கும் பேஸ்ரிகளை அவனில் வைத்து சூடாக்கி எடுக்கவும். எவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டும், எவ்வளவு சூட்டில் வைக்க வேண்டும் போன்றவை பைலோ ஷீட்டின் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதற்கேற்ப செய்யவும்.
சுவையான எளிதில் செய்யக் கூடிய பேஸ்ரி தயார். இதனை கெட்சப் அல்லது சட்னியுடன் அல்லது அப்படியேயும் சாப்பிடலாம். இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சூப்பர் நர்மதா நான் இதை சிக்கன்,முட்டை, மற்றும் மட்டன் கீமாவில் செய்வேன்.
ரொம்ப அருமையாக இருக்கும்.
அருமையான குறிப்பு.
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நல்லாயிருக்கு. பார்த்ததும் சுவைக்க தோணுது வீக்கெண்டில் செய்து பார்ப்பேன். செய்து விட்டு எழுதுகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நன்றி ஜலீலாக்கா & தனிஷா.
-நர்மதா :)