தீப்பெட்டி கோபுரம் செய்வது எப்படி?

தேதி: February 9, 2009

5
Average: 4.3 (4 votes)

இந்த எளிய முறையில் செய்யக்கூடிய தீப்பெட்டி கோபுரத்தை செய்து காட்டியவர் திருமதி. சுபா அவர்கள்.

 

தீப்பெட்டி - 25
சம்கி
பெவிகால்
கண்ணாடி சம்கி
கலர் பேப்பர்(பச்சை)

 

தீப்பெட்டி கோபுரம் செய்வதற்கு தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும்.
கலர் பேப்பரை தீப்பெட்டியை விட சற்று பெரிய அளவில் சதுரமான வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதேப் போல் 25 கலர் பேப்பர்கள் வெட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பேப்பரிலும் பின்புறம் நான்கு ஓரங்கள் முழுவதும் பெவிக்காலை தடவி கொண்டு, நடுவில் தீப்பெட்டியை வைத்து மேல் மற்றும் கீழ் புறத்தில் உள்ள பேப்பரை தீப்பெட்டியுடன் சேர்த்து மடித்து ஒட்டிக் கொள்ளவும்.
பின்னர் வலது மற்றும் இடது ஓரங்களில் இருக்கும் பேப்பரை மடித்து ஒட்டிக் கொள்ளவும். இதே போல் மற்ற 24 தீப்பெட்டிகளிலும் கலர் பேப்பரை ஒட்டி தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொரு தீப்பெட்டியின் நடுவிலும் பெவிக்காலை தடவி அதில் கண்ணாடி சம்கியை வைத்து ஒட்டவும்.
கண்ணாடி சம்கியை சுற்றிலும் சிறிய சிறிய சம்கிகளை வைத்து ஒட்டவும்.
முதலில் ஒரு தீப்பெட்டியின் மேல் புறத்தில் இரண்டு ஓரங்களிலும் பெவிக்காலை தடவிக் கொள்ளவும். அதில் இரண்டு தீப்பெட்டிகளை படத்தில் உள்ளது போல் வைத்து ஒட்டவும்.
அதன் பிறகு இரண்டு தீப்பெட்டிகளின் ஓரங்களிலும் ஒவ்வொரு தீப்பெட்டியை ஒட்டவும். இரண்டு தீப்பெட்டிக்கும் இடையில் ஒரு தீப்பெட்டியை ஒட்டவும்.
இதேப் போல் அதன் மேலே நான்கு தீப்பெட்டிகளை ஒட்டவும். அடுத்த வரிசையில் 5 தீப்பெட்டிகள் ஒட்டவும்.
பின்னர் அதற்கு மேல் ஒவ்வொரு தீப்பெட்டியாக குறைத்து 4, 3, 2 கடைசியாக ஒரு தீப்பெட்டியை வைத்து ஒட்டவும். தேவையற்ற தீப்பெட்டிகளை வைத்து இதைப் போலவே செய்யலாம். நாம் விரும்பியபடி அதை அலங்கரித்து வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுபா மேடம்,
வித்தியாசமாய், அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் :-)

அன்புடன் விசா

வாவ் தீப்பெட்டியை இப்படிகூட அழகாய் ஆக்கலாமா!!!!!!!

ரொம்ப அழகான எளிதில் செய்யக்கூடிய வால் ஹாங்கிங் மேடம்.நானும் நிறைய தீப்பெட்டியை சேர்த்துவைப்பேன் என்ன செய்யரதுன்னு தெரியாமல் தூக்கிபோட்டுடுவேன்.இனிமேல் நானும் இதுபோல செய்துவிடுகிரேன்.

ரொம்ப நன்றி சுபா மேடம்.

arputhamaga Ullathu...Great job akka..

I LOVE SAMAYAL SAMAYAL SAMAYAL...

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு,சிம்பிளாவும் இருக்கு,சீக்கிரம் ட்ரை பண்ணி பார்க்கனும்..

முதலில் 25 தீப்பெட்டி தயார் செய்கிரேன்.பிரகு செய்துபார்க்கிரேன்.இங்கு தீப்பெட்டி கிடைக்குமா என்ரு தான் தெரியவில்லை.இதுப்போன்ர வேலைகல் செய்ய எனக்கு பிடிக்கும்.

alhamdhulillah

மிக அழகாக இருக்கிறது. பெட்டிகள் கிடைத்தால் கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் செய்த தீப்பெட்டி கோபுரத்தின் படம்

<img src="files/pictures/matchbox-tower.jpg" alt="picture" />

இங்கு முன்பு பதிவாகி இருந்த என் கருத்தை மாற்றி விட்டேன் இன்று.
வேறு வழி!!! ;)))))))

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta