புழுங்கல் அரிசி கொழுகட்டை

image

வழங்கியவர் : senthamizh selvi

தேதி : திங்கள், 09/02/2009 - 21:03

ஆயத்த நேரம் : 2 மணி நேரம்,

சமைக்கும் நேரம் : 45 நிமிடங்கள்.

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • புழுங்கல் அரிசி - 500 கிராம்,
  • உப்பு - தேவையான அளவு,
  • நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
  • பூரணத்திற்கு:-
  • ------------------
  • தேங்காய் - 1,
  • வெல்லம் - 200 கிராம்,
  • பொட்டுக்கடலை - 100 கிராம்,
  • எள் - 1 மேசைக்கரண்டி,
  • ஏலக்காய் - 4.

 

  • அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு கெட்டியாக, நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • வெல்லத்தை நன்கு தூள் செய்து வைக்கவும்.
  • தேங்காயை துருவி வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைக்கவும்.
  • பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து அத்துடன் சேர்க்கவும்.
  • எள்ளை கல் அரித்து, கழுவி வாணலியில் போட்டு வறுத்து தேங்காயுடன் சேர்க்கவும்.
  • ஏலக்காயை தூளாக்கி, வெல்லம் சேர்த்து தேங்காயுடன் நன்கு கலக்கவும். பூரணம் தயார்.
  • அரைத்த மாவை வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கட்டி பிடிக்காமல் நன்கு வதக்கி இறக்கவும்.
  • மாவில் எலுமிச்சை அளவு உருணடை எடுத்து உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி, இரண்டு கையின் நுனி விரல்காளாலும் சொப்பு போல் செய்து கொள்ளவும்.
  • அதற்குள் செய்து வைத்த பூரணத்தை நிரப்பி, மூடி ஓரங்களை பூரணம் வெளியே வராமல் ஒட்டவும்.
  • இதே போல் 15 அல்லது 20 செய்ததும் இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.
  • தொட்டு பார்த்தால் ஒட்டாமல், பளபளப்பாக வெந்ததும் எடுக்கவும்.

Note:

15 அல்லது 20 செய்ததும் வேக வைக்க வேண்டும். ரொம்ப நேரம் ஆனால் ஒட்டிய இடம் வெடித்து, பூரணம் வெளி வரும்.