சீத்தலம் (சாளி தெந்தரவு) உதவுங்கள்.

சீத்தலம் (சாளி தெந்தரவு) உதவுங்கள்.

எனக்கு சாளி தெந்தரவு அதிகமாக உள்ளது. தொண்டை வலிக்கிரது. மூக்கு , காதுகள் அடைக்கிரது. எனக்கு சீத்தல உடம்பு. (குளிர்ச்சி உடம்பு).

இரவும் பகல்லும் துங்க முடியாமல் கஷ்டப்படுகிரேன். இருமல் இருப்பதால் நெஞ்சும் வலிக்கிரது. வீட்டு வைதியம் உண்டு. ஆனால் தெரியவில்லை.

இதில் இருந்து விடுபட உதவுங்கள். please..................


இமா சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.நானும் தங்களை போலவே முதலில் தமிழில் டைப் செய்ய தெரியாமல் இருந்தேன்.பிறகு முயற்சி செய்து ஓரளவு தமிழில் டைப் செய்ய பழகிவிட்டேன்.தாங்களும் முயற்சி செய்யுங்களேன்.
முயற்சிகள் தவறலாம்!
முயற்சிக்க தவறலமா?
வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

hai prabha
மிளகும், தேனும் கலந்து சாப்பிட்டால் இருமல் மட்டுப்படும். தண்ணீரில் சீரகத்தை போட்டு கொதிக்கவைத்து அருந்துங்கள். மூக்கடைப்புக்கு Otrivin (available in all medical shop) (சொட்டு மருந்து) 2 சொட்டு படுக்கும்போது மூக்கில் விட்டுக் கொள்ளுங்கள். தொண்டை வலிக்கு ஓரளவுக்கு சூடு உள்ள தண்ணீரில் கல் உப்பை போட்டு நன்றாக கொப்பளியுங்கள். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்