HBF LOW

அறுசுவை தோழிகளுக்கு காலை வணக்கம், எனக்கு இப்போது16வாரம் நடக்கிறது.கடந்த மாதம் blood test எடுத்தபோது HBF மிகவும் குறைவாக உள்ளது என்று கூறினர்.மீண்டும் ஒருமுறை எடுத்தார்கள் அப்போதும் இதையே கூறினர்.folic acid,iron tablet மட்டும் குடுத்தனர்.மீண்டும் இம்மாதம் blood test எடுக்க வேண்டும் என்று கூறினர்.சிலசமயம் வயிற்று வலியும் உள்ளது.doctor கேட்டால் இந்தமாதிரி நேரத்தில் இப்படி தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.என்க்கு மிகவும் பயமாக உள்ளது.எனக்கு ஒன்றும் புரியவில்லை.இதைபற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்.plz...

பிரியா எப்படி இருக்கிங்க. உங்க குழந்தை நல்லா இருக்கா.
முதலில் எதையும் நெனச்சு பயபுடாதிங்க. மைன்டு சிலக்ஸ்சா இருங்க.
எனக்கு இதபத்தி எதுவும் தெரியாது.

மற்ற தோழிகள் பதில் செல்லுவார்கள். "நல்லதே நடக்கும்."
பயப்பிடாமல் இக்ருங்கள். நான் ஆண்டவனை வேண்டிக் கொள்ளுகிரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹீமோக்லோபின் குறைவு என்று தானே சொல்கிறீர்கள்.அதான் மருந்தும் தந்துவிட்டார்கள் ஒனும் பயப்படாதீர்கள்..முறையாக மருத்துவரை கண்டு தரும் மருந்துகளை சரியாக சாப்பிட்டு டெஸ்டும் கரெக்டா செய்யுங்க..வயிற்று வலி ப்ரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்..எனக்கும் இருந்தது.சில சமயும் சுளுக்குவது போல் வலிக்கும்.டோன்ட் வரி

ஹீமோகுளோப்பின் குறைவு என்பது கர்ப்பகாலத்தில் பெரும்பாலனவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைதான். இதில் பயப்பட தேவையில்லை. எனக்கு 7 மாதத்தில் ரொம்ப குறைவாகத்தான் இருந்தது. போலிக் ஆசிட் மாத்திரை 10 மாதமும் சாப்பிட்டேன். வயிற்று வலி அப்பப்பா கன்சீவானதிலிருந்து குழந்தை பெறும் வரை இருந்து கொண்டேதான் இருந்தது. இதுவும் சகஜம்தான். ஆப்பிள் நிறைய சாப்பிடுங்க. ஆட்டு இரல் சாப்பிடுங்க. உங்க டாக்டர் ஆலோசனையுடன். Be happy

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்