மருந்து சோறு

தேதி: February 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பாசுமதி அரிசி - 400 கிராம் (நாலு ஆழாக்கு)
நல்லெண்ணெய்( அ)சன்ஃப்ளவர் எண்ணெய் - 125 கிராம்
தேங்காய் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 75 கிராம்
மருந்து பொடி - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
முட்டை - இரண்டு
வெல்லம் - சிறிது
உரித்த முழு பூண்டு - இரண்டு
உப்பு - தேவைக்கு
பட்டை - இரண்டு அங்குலத் துண்டு இரண்டு
கிராம்பு - நான்கு
ஏலம் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு


 

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற வைக்கவும். மருந்து பொடியை கடைசியாக எடுக்கும் தண்ணீர் பாலில் கலந்து வைத்துக் கொள்ளவும். பூண்டை உரித்து வைக்கவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடிக்க விடவும். பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு கலக்கி வைத்திருக்கும் மருந்து பொடியை ஊற்றி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
கெட்டியான பாலுடன் ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அரிசியை போட்டு வெல்லம், உரித்து வைத்துள்ள பூண்டு ஆகியவற்றை போட்டு தீயை மிதமானதாக வைத்து வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் தீயை குறைத்து வைத்து வேக விடவும்.
அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு முறை கலக்கி விட்டு சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும்.
மருந்து சாதத்தை நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் அப்படியே வேக விடவும்.
தம் போடும் கருவியை அடுப்பில் வைத்து தீயை சிம்மில் வைக்கவும். அதன் மேல் சாதத்தை வைத்து மூடி போட்டு அதற்கும் மேல் ஒரு கனமான பாத்திரம் அல்லது சூடான குழம்பு சட்டியை வைக்கவும்.
சாதம் நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான மருந்து சோறு தயார். அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

இந்த மருந்து பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், இதன் பெயர் காயப்பொடி. பனிரெண்டு வகையான மருந்துகள் இதில் சேர்ந்துள்ளது. இதை திருநெல்வேலி பக்கம் தயார் செய்கிறார்கள். இத்துடன் நிறைய பொருட்கள் சேர்த்து லேகியம் போல் செய்வார்கள், இந்த பொடியில் சாப்பாடும் செய்வார்கள். இது பிள்ளை பெற்றவர்களுக்கு செய்து கொடுப்பார்கள். வயிற்று புண்ணை ஆற்றும். மற்றவர்களும் சாப்பிடலாம். இதனுடன் தொட்டு கொள்ள மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, ப்ளையின் தால் சுவையாக இருக்கும். இதற்கு பொன்னி, புழுங்கல் அரிசியும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜாலீலா அக்கா இந்த சமையலில் தேங்காயை குறைத்து உபயேகிக்கலாமா. மருந்து பொடி எப்படி செய்வது செல்லுங்கள்.

பூண்டு பால் தினம் குடிக்கலாமா. நான் வாரத்தில் 3 நாள் குடுக்கிரேன்.
எப்படி குடிக்க வேண்டும்.
உங்கள் சமையல் செய்து அதிக பாராட்டை பெற்று இருக்கிரேன். நன்றி அக்கா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இதே மாதிரிதான் நானும் செய்வேன்,பொருட்களின் அளவும் செய்முறையிலும் சிறிது வித்தியாசம்.மருந்துசோறு ரொம்ப நல்ல பக்குவமாக வந்திருக்கு,சூப்பர்.ஜலீலா நம்ம ஊர் சமையல் கொடுக்கலாம் என்று நினைத்தால் எல்லாம் நீங்கள் கொடுத்து விட்டீர்கள்,மிக்க மகிழ்ச்சி,பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மருந்து சோறு

பிரபா மருந்து பொடி எப்படி என்று தெரியாது நாங்க எல்லாம் (மருந்து பொடி, மாசி) எல்லாம் திருநெல்வேலியில் இருந்து வரும் வாங்கி கொள்வோம்.
சுக்கு மருந்து, அக்காரா,திப்பிலி எல்லாம் வீட்டில் திரிப்போம்,
அரிசி மாவு முன்பெல்லாம் வீட்டில் நிறைய வருத்து ஸ்டோர் பண்ணி கொள்வோம் அதுவும் இப்போது வெளியிலேயே வாங்கி கொள்வோம்.

இது நீங்கள் செய்யும் தீபாவளி லேகியத்துக்கு சேர்க்கும் மருந்துகளும் அடங்கும்.
இதில் லேகியம் போலும் காய்ச்சுவோம்.
பூண்டு பால் நீங்கள் எதுக்கு குடிக்கிறீங்க கொலஸ்டாரயில் குறையவா?ஏனென்றால் கர்பிணி பெண்கள் குடிக்க கூடாது 9 மாதம் தான் குடிக்கனும்.

என் சமையல் நிறைய செய்து பாராட்டையும் பெற்றிருக்கிறேன் என்றீர்கள் மிக்க சந்தோஷம்.

ஜலீலா

Jaleelakamal

ஆசியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

அன்பு ஜலீலாக்கா,
இந்த மருந்து பொடி சென்னை அல்லது மதுரையில் கிடைக்குமா?
குழந்தை பெற்றவர்களுக்கு பால் அதிகமாக வருவதற்கு கொடுக்கும் பொடி இதுதானா?
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

நல்ல ரெசிப்பி. எங்கள் வீட்டிலும் செய்ததுண்டு. எக் சேர்க்காமல் செய்திருக்கிறார்கள். இந்த மருந்து பொடி சென்னையிலும் கிடைக்கிறது. மாமபல்த்தில் தயார் டைரி என்ற கடையிலும் கிடைக்கிறது. நன்றாக தெளிவா இருக்கு ரெசிப்பி & படங்கள்.

ஜலீலாக்கா, உங்கள் ரெஸிப்பியில் மூக்கை நுழைப்பதற்கு மன்னிக்கவும்.

இது மருந்துப் பொடி கிடைக்கவில்லை என்று கவலைப்படும் தோழிகளுக்கு: இதில் மருந்துப் பொடி தவிர மற்ற எல்லாம் சேர்த்து செய்யலாம். அதை 'உளுந்து சோறு' என்று சொல்வார்கள். பெண்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இடுப்பு வலி போன்றவைகளுக்கு நல்ல பயன் தரும். நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

மருந்து சோறு

டியர் கிருத்திக்கா

சென்னையில் கிடைக்கும் ஆனால் மதுரை தெரியல/
இது கர்ப்ப பை வலுவடைய, வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்ற , அபார்ஷன் ஆனவர்களுக்கும் கொடுப்பார்கள்.
இதை நல்லெண்ணையில் தான் செய்வார்கள், புழுங்கல் அரிசியில் செய்வார்கள்.

டியர் விஜி ஓ உங்கள் வீட்டிலும் செய்வார்களா?

மிசஸ் ஹுசேன் தோழியின் சந்தேகத்துக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா அருமையான குறிப்பு.அறுசுவையில் வரும் என்று கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்கவில்லை.இதெல்லாம் யாருக்கும்தெரிந்திருக்காது என்றுதான் நினைத்திருந்தேன்.சின்ன வயதில் உடம்புக்கு நல்லது என்று அம்மா இது செய்யத்தெரிந்த ஆளை வீட்டுக்கு கூப்பிட்டு செய்து தந்து சாப்பிட்டிருக்கிறேன்.மருந்துப்பொடி தேடிக்கொண்டு இருக்கிறேன்.கிடைக்குமா தெரியவில்லை.கிடைத்தால் செய்கிறேன்.நிறைய இந்தியன் கடைகளூக்கு போன் பண்ணிவிட்டேன் என்னென்றுதெரியாது எண்டு சொல்லினம்.யாராச்சும் கனடால எங்க வேண்டலாம் எண்டு தெரிஞ்சா தயவுசெய்து எனக்கு சொல்லுங்கோ.

சுரேஜினி

மருந்து சோறு.

சுரேஜினி இதில் என்ன மருந்து சேர்த்து இருக்கும் எனக்கு தெரியல, அடுத்த முறை ஊருக்கு போனால் கேட்டு வரேன்.
இது சென்னை மற்றும், திருநெல்வேலியில் கிடைக்கும்.
ஆமாம் இது ரொம்ப நல்லது. சில பேர் காலையில் டிபனுக்கு கூட மருந்து சோறு செய்து மாசி துவையல் அரைத்து சாப்பிடுவார்கல், ரொம்ப அருமையா இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

மருந்து சோறு..

மருந்து பட்டை,சாலியா,சதகுப்பை,கசகசா..இதை அரைப்பதுதான் மருந்து...அக்கா விளக்கமா சொல்லுங்க அதிரா பார்த்து எரும்பு பொடியை யூஸ் பண்ணினாலும் பண்ணிடுவாங்க மர்ழி ஓடிக்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அதிரா, மர்லியா

அதிரா மர்லியா இல்லாததால் நீங்கள் மட்டும் மேடையில் ஆடி கொன்டு இருந்தீர்கள், இப்ப சாதுரியம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி என்று பாட்டு சரியா தப்பான்னு தெரியல வந்துள்ளார் இனி நீன்ங்க என்ன பேசினாலும் ஆப்பு தான்.

மர்லியா சதகுப்பை என்றால் நிறைய பேருக்கு தெரியாது. அது தேசிக்காய் குச்சி என்ரு நினக்கிறேன்.

இதற்கு கூடிய விரைவில் யரிடமாவது கேட்டு போடுவேன்.
அதில் உள்ள பொருட்களும் அது எங்கு கிடைக்கும் என்றும்.

ஜலீலா

Jaleelakamal

அதனால்தானக்கா புகைக்கூட்டைத் துப்பரவாக்கிவிட்டேன்:). மர்ழியா இல்லாத நேரம் வனிதா வந்திட்டாரெல்லோ என்னைக் கண்காணிக்க:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

டியர் ஹுசைன் நான் நலமே நேற்ரு வரை என்னை பாடா படுத்திய குளிர் ஜுரம் இப்பதான் விடை பெர்றது அலம்துலில்லாஹ்..நீங்க நலமா?எனக்கு இரண்டாவது ஆண் குழந்தைமா துஆ செய்யவும்

ஹை அஸ்மா எபப்டி இருக்கீங்க?மர்யம் அக்காவா அவன் தூங்கும் போது மட்டும் எழுப்புவது வலக்கமாகிட்டு இன்னும் சில காமடி அவளை வைத்து :)

ஹா ஹா சாய் கீதாலஷ்மி என்ன பயந்துட்டீங்களா?ஆமாம் இப்படி ஏடா கூடமா போட்டதானே பார்க்க வாராங்க..

ஹாய் வனி நலமா?ஆமா எல்லோரோடும் பேசி மாசகணக்கில் ஆயிற்று...முன்பு போல் வர முடியாதுப்பா செமத்தியா பிஸியா இருக்கேன் குழந்தைகளுடன்..ஆனாலும் எப்பவாவது வருகிறேன் என்ன எல்லோரும் பெருமூச்சு விடுவதை போல இருக்கு ம்ம்..புலச்சு பொங்க..வனி நான் அந்த பதிவுகளலாம் இன்னும் படிக்கலமா...அதுக்க் உ எப்ப டைம் கிடைக்குமோ தெரியல எடுத்து பேவரட்டில் போட்டு வைத்து இஉர்க்கேன்..

அட மேஉ குட்டியா குட்டி மேனு நலமா?எல்லோரும் நலம் மேனு..

டியர் ஆஸியா நலமா?நாங்க எல்லோரும் நலம் உங்கள் குறிப்புகளூ என்னுடைய வாழ்த்துகள்...இன்னும் யாருகெல்லாம் பிறந்த,திருமணநாள் வந்ததோ அனைத்து தோழிகளுக்கும் என் வாழ்த்துகள் :)

ஹாய் சீதாலச்மி மேம் நாங்க எல்லோரும் நலமே உங்க விசானைக்கு நன்றி..

அட அதிரா மெயில் போட்டேனே படிக்கலயா?நான் ஊர் போகலன்னு கடைசி டைமில் டிராவல் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்கன்னு இங்கேதான் பெர்ரேன்...உங்க பதிவு பார்த்து எனக்கு சிரிப்பு ஹா ஹா

ஹாய் ஜெயா நாங்கலாம் நலம் நீங்க எப்படி ஒரே அடட்டை போல சரிப்பா இவன் அழுறான் நான் ஓடரேன் யாரெல்லாம் விசாரித்தீங்களோ அனைவருக்கும் என் நன்றிகள் பல பல இன்னொரு நாள் முடியுற[ப்ப இப்படி வருகிறேன்..என் மகனின் பெயர் அப்துல் காதர் அஷ்பாக் (ASHFAQ )

PEYAR WALLAA IRUKKKA PATHIL POODUNGKA ELLOORUM :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க, உங்க மகன் பெயர் நல்லா இருக்கு.

god is my sheperd

நீங்கள்,மரியம்,அஷ்ஃபாக் நலமா?அஷ்ஃபாக் அர்த்தம் என்னப்பா?பெயர் புதியதாய் நல்ல இருக்கு.உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஐயய்யோ பதிவு மார்றி போட்டேன் இது அரட்டை பக்கம் போட இருந்த பதிவு அட்மின்,அக்கா என்னை அடிக்க வராதீங்கோ பாவம் பச்ச உடம்பு காரி கொஞ்ச நாள் போனா சிகப்பு உடம்புனாலும் நக்கல் வர கூடாது ஆமா...அட்மின் ஐயம் எக்ஸ்டன்லி சாரி நான் இப்பதான் கவனித்தேன்...மார்ரு ஆப்ஷனும் இல்லை எடுக்க முடிந்தா எடுத்துடுங்க பிளீஸ்....அரட்டை பக்கம் வாரேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மருந்து சோறு நேற்று ஆக்கினேன்.சூப்பராக இருந்தது.போட்டோ எடுத்து அட்மின்க்கு அனுப்பியுள்ளேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டியர் ஆசியா ரொம்ப சந்தோஷம்.
நிறைய இடத்தில் உங்களுக்கு இன்னும் நான் பதில் அளிக்கவில்லை.பிறகு அளிக்கிறேன். நல்ல படியா ஊர் போய் வாருங்கள்,
இது நம் பாரம்பரிய உணவு.

Jaleelakamal

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஆசியா உமர் அவர்கள் தயாரித்த மருந்து சோறின் படம்

<img src="files/pictures/aa200.jpg" alt="picture" />

டியர் ஆசியா ரொம்ப சந்தோஷம் மருந்து சோறு செய்து ஊர் போகும் பிஸியிலும் போட்டோ எடுத்து அனுபியதற்கு.
இதை உடனே சேர்த்த அட்மினுக்கும் மிக்க நன்றி.

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்] சகோதரி ஜலீலா பானு
1.அரிசியும் உளுந்தும் எவ்வளவு நேரம் உறவைக்கவும்.

2.தேங்காய்யை எத்தனை பால் எடுக்கனும்.

3.வெல்லம் முட்டையில்லாமல் இதை செய்யலாமா.

4.இந்த மருந்து சோறு தினமும் சாப்பிடலாமா அதனால் என்ன பலன் உடம்புக்கு.

வஸ்ஸலாம்- அன்புடன் - சகோதரர் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

வா அலைக்கும் அஸ்ஸ‌லாம் ச‌கோத‌ர‌ர்‍ ஷாகுல் ஹ‌மீது

1.இதற்கு பொன்னி புழுங்கல் பயன் படுத்துவார்கள், நான் பாசுமதி அரிசி தான் போட்டுள்ளேன். பாசுமதி அரிசி பிரியாணிக்கு போல் 20 நிமிடம் போதும்.
புழுங்கல் அரிசி 30 லிருந்து 40 நிமிடம்.
2.தேங்காய் முதல் பால் என்றெல்லாம் கணக்கில்லை, அப்படியே அரை படிக்கு 1 தேங்காய். பால் எடுக்கனும், அது முன்று முறை எடுக்கலாம்.
மொத்தமா தண்ணீ அளந்து ஊற்ற வேண்டியது தான்.

3.வெல்லம் முட்டை இல்லாமல் செய்யலாம்.வெல்ல‌ம் சேர்ப்ப‌து ம‌ருந்து கொஞ்ச‌ம் க‌ச‌ப்பு தெரியாம‌ல் இருக்க‌, முட்டை பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு,பூப்பெய்திய‌ பெண்க‌லுக்கு,இடுப்பு வ‌லி உள்ள‌வ‌ர்க‌ளுக்கு, ஒரே அபார்ஷ‌ன் ஆன‌வ‌ர்க‌ளுக்கு இது தெம்பை கொடுக்கும், க‌ர்ப‌ப் பை வ‌லிவ‌டையும்.

4.இது உடம்பிற்கு குளிர்சி, அல்சர் இருப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
எங்க பெரிமா வாரம் ஒரு முறை கொஞ்சமா தேங்கயாய் பால் சேர்த்து முட்டை வெல்லம் இல்லாமல் செய்து மாசி துவையல் அரைத்து காலை டிபனுக்கு செய்வார்கள்,

Jaleelakamal

ஜலி,சென்னையில் இந்த மருந்து எங்கு கிடைக்கும்?அல்லது வீட்டிலேயே செய்து கொள்ளலாமா?என்னென்ன பொருட்கள் தேவை?குறிப்பு,படங்கள்,பின்னூட்டங்களைப்பார்க்கும் பொழுது செய்ய வேண்டும் போல் உள்ளது.நாங்களும் மருந்து சோற்றினை சாலியா சோறு என்று அழைப்போம்.நாங்கள் சாலியா,சதகுப்பை,வெந்தயம் போன்ற மருந்து பொருட்கள் வாங்கி வீட்டிலே பொடி செய்து தயாரிப்போம்.உங்கள் மருந்துப்பொடியில் இந்த பொருட்கள் சேர்க்கப்பட்டு இருக்குமா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]சகோதரி ஜலீலா பானு
1,பதில் அளித்ததுக்கு மிக்க நன்றி,

2,இந்த மருந்து பொடி கிடைக்கும் இடம் சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் தாயார் மருந்து கடை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல் எதிரில்வுள்ளது

வஸ்ஸலாம்- சகோதரர் அன்புடன் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

ஸாதிகா அக்கா உங்கள் கேள்விக்கு சகோதரர் ஷாகுல்ஹமீது பதில் கொடுத்து விட்டார்,

சகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களுக்கு வா அலைக்கும் அஸ்ஸலாம்
மருந்து பொடி விற்கும் கடை சொன்னதற்கு மிக்க நன்றி.

Jaleelakamal

சகோதரர் ஷாஹுல் ஹமீது கடயைப்பற்றிய விபரம் கூறியதற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website