இறால் கறி

தேதி: February 10, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

இறால் - அரை கிலோ (உரித்தது)
தேங்காய் துருவல் - அரை கப்
மிளகாய் - 2
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சில்லி பவுடர்- 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மஞ்சல் பொடி - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

இறாலை உரித்து சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும். தேங்காய் அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை போட்டு, வெங்காயம் தாளித்து, இஞ்சி,பூண்டு பேஸ்ட், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும். மல்லிப்பொடி, சில்லி பவுடர், சீரகப்பொடி, மஞ்சள் தூள் ,உப்பு போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும், இறாலை சேர்க்கவும். இறால் வெந்தவுடன், தேங்காய் சேர்த்து கொதி வந்து சிம்மில் வைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான இறால் கறி ரெடி.


இதனை சப்பாத்தி, ஆப்பம், தோசை ப்ளைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி ஆசியா உமர்,

இன்று மதியம் இறால் கறி செய்தேன். மிக அருமையாக இருந்த்து. புகைப்படமும் எடுத்து அனுப்பி இருக்கிறேன். நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

செய்து புகைப்படம் எடுத்தது மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

திரு. ஹைஷ் அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த இறால் கறியின் படம்

<img src="files/pictures/prawn_11414.jpg" alt="picture" />

மிக்க மகிழ்ச்சி.நான் வைக்கும் போது வரும் அதே நிறம் அப்படியே சூப்பர்.மல்லி இலை தூவி அலங்கரித்து இருப்பது ஹைலைட்.மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.