காரட் பாயசம்

தேதி: February 10, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.7 (3 votes)

 

காரட் - 1 பெரியது,
பால் - 1/4 லிட்டர்,
சர்க்கரை - 1/2 டம்ளர்,
ஏலக்காய் - 2,
முந்திரி - 5,
நெய் - 2 தேக்கரண்டி.


 

காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும் (சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோஅவனில் 5 நிமிடம் வைத்தும் வேக வைக்கலாம்).
நெய்யில் முந்திரி வறுத்து எடுத்துக் கொண்டு, அரைத்த விழுது சேர்த்து வதக்கி பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
வறுத்த முந்திரி, தூளாக்கிய ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.


சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்