தட்டை

தேதி: February 11, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - 2 கப்
கறிவேப்பில்லை - 5 இலை
காய்ந்த மிளகாய் - 2 அல்லது மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக் கரண்டி
உப்பு - தேவைக்கு
கடலைப் பருப்பு, வேர்க்கடலை - 2 மேசைக் கரண்டி
காய்ந்த தேங்காய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையினை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காயினை லேசாக கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயினை தட்டி கொள்ளவும்.
அரிசி மாவுடன் ஊறவைத்துள்ள கடலைப் பருப்பு, வேர்க்கடலை, தட்டி வைத்துள்ள கறிவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய், வெண்ணெய், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவினை நன்றாக பிசையவும்.
கலந்து வைத்துள்ள மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ப்லாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி அதன் மீது இன்னொரு ப்ளாஸ்டிக் பேப்பர் வைத்து உருண்டைகளை மிகவும் மெலிதாக வட்டவடிவில் தட்டி கொள்ளவும்.
தட்டிவைத்துள்ள தட்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்,
இப்பொழுது சுவையான தட்டை ரெடி.


மேலும் சில குறிப்புகள்