தேங்காய்ப் பால்

தேதி: February 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - ஒன்று
வெல்லம் - தேவையான அளவு
ஏலப் பொடி - சிறிதளவு


 

தேங்காயைத் துருவி மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பாலெடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைப் பொடித்து, பாத்திரத்தில் போட்டு ஒருகப் தண்ணீர் ஊற்றி கரையவிட்டு, வடிகட்டி வைக்கவும்.
அடிகணமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி, குறைவான ஃப்ளேமில் அடுப்பில் வைக்கவும்.
பால்பொங்கி வரும் சமயம் மெதுவாகக் கலந்து விடவும், ஐந்துநிமிடங்களிற்குப் பின் வெல்லத்தண்ணீரை பாலில் ஊற்றி கலக்கவும்.
வெல்லமும், பாலும் உறவு சேர்ந்து கொதிவந்தபின் ஐந்துநிமிடங்களிற்குப் பின் ஏலப்பொடி கலந்து இறக்கவும்.
சுவையான தேங்காய்ப்பால் ரெடி, இதனை ஆப்பத்துடனும், இடியாப்பத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.


குறைவான ஃப்ளேமில் வைக்காவிட்டால் பால் நீர்த்து திரிந்தது போலாகிவிடும்.
இனிப்பு அளவாகப் போட்டால் குடிப்பதற்கும் நன்றாகயிருக்கும். குடிப்பதற்கு பனங்கருப்பட்டி சேர்த்து செய்தால் சுவை இன்னும் கூடுதலாயிருக்கும்.

மேலும் சில குறிப்புகள்