ப்ரெஞ்ச் ஆனியன் சூப்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 4
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சீஸ் - துருவியது ஒரு மேசைக்கரண்டி
ரொட்டித் தூள் - 4
எலும்பு வேகவைத்த தண்ணீர் - 4 கப்


 

200 கிராம் எலும்பில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து 4 கோப்பை வடிகட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வெண்ணெய்யுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
வெங்காயத்தோடு எலும்பு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து வெங்காயம் மிருதுவாக வேகும் வரை கொதிக்க விடவும்.
ரொட்டித் துண்டுகளின் மேல் துருவிய சீஸை தூவி ஓவனில் வைத்து பொன்னிறமாக வரும்வரை பேக் செய்து கொள்ளவும்.
கொதிக்கும் சூப்புடன் உப்பு, மிளகு தூளைத் தூவி, ரொட்டித் துண்டுகளைச் சிறியதாக நறுக்கிப் போட்டுப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்