உருளைக்கிழங்கு கறி

தேதி: February 11, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு -- 2 என்னம் (வேகவைத்து தோலுரித்து வெட்டிக்கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 20 என்னம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 என்னம்
மிளகாய் பொடி -- 1 ஸ்பூன் (காரத்திற்கு தே.அ)
கரம் மசாலா -- 1 சிட்டிகை
கடலை பருப்பு -- ஒரு கைப்பிடி (மலராமல் வேகவைத்தது)


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் போடவும்.
ஒரு நிமிடம் வதக்கி தக்காளி சேர்க்கவும்.
உப்பு போட்டு நன்கு வதக்கி மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து தண்ணீர் வற்றி வரும் போது உருளைக்கிழங்கை போட்டு மெதுவாக உடையாமல் கிளறி மசாலா ஒட்டி வருமாறு செய்யவும்.
பின் பருப்பை மேலே தூவி உடையாமல் ஒரு கிளறு கிளறி மூடி வைத்து 1 நிமிடம் வேகவைத்து கிளறி பறிமாறவும்.
தேவை எனில் தேங்காய் துருவலை சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உருளைக்கிழங்கு கறி மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் பிடித்தது
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்