எள் மிட்டாய்

தேதி: February 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எள் -- 1 கப் (வறுத்துக் கொள்ளவும்)
வெல்லம் / கருபட்டி -- 3/4 கப்
நிலக்கடலை -- 1 ஸ்பூன் (வறுத்து தோல் நீக்கி உடைத்தது)
ஏலக்காய் தூள் -- 1 சிட்டிகை
நெய் -- 1 டீஸ்பூன்


 

கருபட்டியை சூடான தண்ணீரில் போட்டு ஒரு காய்ச்சு காய்ச்சி வெல்லம் கரைந்தபின் வடிகட்டி பின் பாகு காய்ச்சவும்.
பாகு காய்ச்சும் போது ஏலத்தூளை போடவும்.
அதனுடன் வறுத்த எள், நிலக்கடலையை போட்டு நன்கு கிளறி அதனை நெய் தடவிய தட்டில் கொட்டி உருண்டையும் பிடிக்கலாம் அல்லது துண்டமாகவும் போடலாம்.
வீட்டிலேயே செய்த எள் மிட்டாய் உடம்பிற்கும் நல்லது.


மேலும் சில குறிப்புகள்