கோழி குழம்பு - மற்றொரு முறை

தேதி: February 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

1. கோழி - 1 கிலோ
2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 15
3. தக்காளி - 1
4. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை
7. உப்பு
8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
9. இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி
10. பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
அரைக்க:
1. மிளகாய் வற்றல் - 10
2. மல்லி - 1/2 மேஜைக்கரண்டி
3. ஏலக்காய் - 3
4. மிளகு - 1/2 தேக்கரண்டி
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
7. பட்டை - 1
8. லவங்கம் - 3
9. கறிவேப்பிலை - கொஞ்சம்
10. தேங்காய் - 1/4 (அ) தேங்காய் பால் - 1 கப்


 

ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க வேண்டிய அனைத்தையும் (தேங்காய் தவிர) வறுத்து வைக்கவும்.
இத்துடன் தேங்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.
இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
கோழி, மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
கோழி வெந்ததும் அரைத்த மசாலா (தேங்காய் அரைக்காவிட்டால், தேங்காய் பால் சேர்க்கவும்), தேவையான தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.


சூடான சாதத்துடன் காரசாரமான சுவையான கோழி குழம்பு.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வனிதா நலமா?
இன்று உங்கள் கோழிகுழம்பு மற்றொரு முறை இன்று என்னோட ஹஸ்பண்ட் செய்தார் கொஞ்சம் காரம் கூடிவிட்டது மற்றபடி மிகவும் அருமையாக வந்து இருந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

உங்க ஹஸ்பன்ட் செய்தாரா?! ஆஹா... குடுத்து வெச்சவங்க நீங்க. அவருக்கு என்னுடைய நன்றியை சொல்லுங்க. மிக்க நன்றி மஹா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vanitha unga recipe is really really super

priyasendhil

மிக்க நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது? காணாமல் போன நீங்கள் எப்பொ திரும்ப கிடைப்பீர்கள்?
நேற்று இந்த கோழி குழம்பு செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது.

மிக்க நன்றி மாலி. உடல் நலம் பரவாயில்லை. விரைவில் வருகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா