ப்ரெட் குழியில் முட்டை(குழந்தைகளுக்கு)

தேதி: February 12, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் துண்டுகள் - 4
முட்டை - 4
பட்டர் அல்லது நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி


 

முதலில் ப்ரெட் துண்டுகளை எடுத்து கொள்ளவும்.
ஒரு ப்ரெட் துண்டினை எடுத்து அதில் நடுவில் வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும். ( குக்கீ கட்டர் அல்லது டிப்பன் பாக்ஸ் மேல் மூடி வைத்து வெட்டி விடவும்).
தோசைக் கல்லினை காயவைக்கவும். அதில் ஒரு ப்ரெட் துண்டினை வைக்கவும்.
பிறகு ப்ரெட் துண்டின் நடுவில் உள்ள ஓட்டையில் முட்டையினை உடைத்து ஊற்றவும்.
முட்டை மேல் சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் தூவி ப்ரெட்டினை சுற்றி சிறிது நெய்யினை ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேகவிடவும்.
இப்பொழுது சுவையான ப்ரெட் குழியில் முட்டை ரெடி.


ப்ரெட்டின் நடுவில் ஒட்டை போட்டு அதில் முட்டையினை ஊற்றி வேக வைப்பதால் மிகவும் வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கீதா,
வித்தியாசமான, ஈசியான குறிப்பு. செய்யும் போது ஒருமாதிரி இன்டெரெஸ்டிங்கா இருந்தது. நான் தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டேன். நிச்சயமா சின்ன குழந்தைகளுக்கு பிடிக்கும்.

indira

மிகவும் நன்றி இந்திரா.
இங்கு என்னுடைய பொண்ணுக்கு இப்படி எல்லாம் செய்து கொடுத்தால் தான் எங்க வீட்டி அம்மா சாப்பிடுவாங்க… அதனால் இப்படி எதவாது ட்ரை செய்வது…
பின்னுடன் அனுப்பியதற்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா ஆச்சல்,
உங்க பிரெட் குழியில் முட்டை இன்று காலை செய்தேன். நன்றாக இருந்தது, என் பொண்ணு 'ஐ லைக் இட்'ன்னு சொல்லி சாப்பிட்டாள். நன்றி!
எங்க வீட்டிலும் அதேதான் கீதா, நானும் எதாவது டிஃபரெண்டா பசங்களுக்கு செய்துதர ஆசைப்படுவேன்! - நமக்கும் வேலை ஈஸியா நடக்கும்! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ .எப்படி இருக்கிங்க? இங்கு எங்க இருக்கிங்க? நான் Albany,ny யில் இருக்கேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாச்சல் இதே முறையில் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்தேன், உடனேயே சாப்பிட்டு விட்டார்கள், புதிதாக இருந்தால் உடனே உள்ளே போய்விடும்.:) நான் அன்று உடனேயே வந்து பதில் போட்டேன், நீண்ட நேரம் அனுப்பமுடியாமல் இருந்தது, அதுதான் சந்தேகத்தில் செக் பண்ணினேன் அது வரவில்லை இங்கே. பிரட்டில் ஒரு நல்ல புதிய கண்டுபிடிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் நலமா இருக்கேன் கீதா ஆச்சல். நன்றி! நீங்களும் அக்க்ஷதாவும் நலம்தானே?!
நான் இங்க அட்லாண்டாவில் இருக்கேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ