ஆப்பிள் ஃபிட்டர்ஸ்(Apple Fritters)

தேதி: February 13, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - 2
மைதா மாவு - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
பால் - 1 கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
ஸ்சினமன் தூள்(Cinnamon Powder) - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் முட்டையை நன்றாக அடித்து கொண்டு பால், சர்க்கரை மற்றும் ஸ்சினமன் தூளுடன் கலக்கி கொள்ளவும்.
மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடரினை சேர்த்து கலந்து அதனை முட்டை கலவையில் கலந்து கரைத்து கொள்ளவும்.
ஆப்பிளினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயினை காயவைத்து கொள்ளவும்.
பின்னர் ஆப்பிளினை மைதா மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூடாக இருக்கும் பொழுது அதன் மேல் சிறிது பொடித்த சர்க்கரையை தூவவும்.
இப்பொழுது சுவையான ஆப்பிள் ஃபிட்டர்ஸ் ரெடி.


இதனை வெளிநாட்டவர்களின் பஜ்ஜி என்று நாம் அழைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா அச்சல்(Geetha Achal ) சினமான் தூள் என்பது என்ன?

பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பட்டையின் தூள்

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

பிரபாதாமு,
சினமான் தூள் என்றால் பட்டை தூள் தான். வீட்டிலேயே மிக்ஸியில் சிறிது சக்கரை உடன் பட்டையினை சிறிதாக உடைத்து போட்டு அரைத்து கொள்ளவும்.
உத்ரா,
பிரபாதாமுவுக்கு உதவியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்
கீதா ஆச்சல்