சேமியா மட்டன் பிரியாணி

தேதி: February 13, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சேமியா - அரை கிலோ
மட்டன் - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மல்லி, புதினா - கை பிடியளவு
மிளகாய் - 3
எலுமிச்சை சிறியது - பாதி
தேங்காய் பாதி - பால் எடுக்க
உப்பு - தேவைக்கு.


 

மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். அதனில் அரை ஸ்பூன் சில்லி பவுடர், அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு, தயிர், உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.
சேமியாவை சிவக்க வறுத்து எடுக்கவும். தேங்காய் பால் எடுக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா கட் செய்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா போட்டு வதக்கி சிறிது நேரம் வைக்கவும். பின்பு சில்லி பவுடர்,தக்காளி, மல்லி புதினா,மிளகாய்,உப்பு சேர்த்து பிரட்டி மசிய விடவும்.
மசிந்தவுடன் மட்டனை சேர்த்து பிரட்டி குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து மட்டன் மசாலாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும், மட்டனில் சிறிது தண்ணீர் இருக்கும்,அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.அளவுத்தண்ணீர்,தேங்காய் பால் சேர்ந்து சேமியாவின் அளவிற்கு ஒன்றரை அளவு வைக்கவும். எலுமிச்சை பிழியவும்.
கொதிவந்ததும் சேமியாவை தட்டி பிரட்டி சிம்மில் 10 நிமிடம் மூடி போட்டு வைத்து அடுப்பை அணைத்து விடவும். திரும்ப 10 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி பரிமாறவும்.
சுவையான மட்டன் சேமியா பிரியாணி ரெடி.


இதனை காலை, இரவு நேர டிபனாக கொடுக்கலாம். தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ஆசியா,
நலமா? மகனின் பிறந்தநாளுக்கு செய்தேன். ரொம்ப சுவையாக இருந்தது. இங்கு கிடைக்கும் அணில் சேமியாவில் செய்தேன். என் கணவருக்கு மிகவும் பிடித்தது (எனக்கும்). நல்ல குறிப்புக்கு பாராட்டுகளும், நன்றியும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப மகிழ்ச்சி.உங்கள் மகன் நலம்,வளமோடு வாழ மனமார வாழ்த்துகிறேன்.உங்க busy schedule - மத்தியில் மறக்காமல் வந்து சமைத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா,
மட்டன் இல்லாமல் மட்டன் பிரியாணி செய்துவிட்டேன்..நாங்கள் வாரத்திற்கு ஒரு முறை தான் நான் வெஜ் சாப்பிடுவேம்..அதனால் இதனை மிக்ஸ்டு வெஜிடேபுள் வைத்து செய்தேன்..நன்றாக இருந்த்து.. போட்டோ எடுக்கலாம் என்று நினைத்தேன்..ஆனால் அதற்குள் கடாய் காலி…
அன்புடன்,
கீதா ஆச்சல்

சமையலில் கை தேர்ந்தவர்கள் இருப்பதை வைத்து அசத்திவிடுவார்கள்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.