இட்லி மாவு தேன் குழல்

தேதி: February 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

இட்லி மாவு - ஒரு கப்
வறட்டு அரிசி மாவு - 2 கப்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு(இட்லி மாவில் உப்பு இருப்பதால் அளவாக சேர்க்கவும்)
எண்ணெய் - சுட்டு எடுக்க


 

தேன் குழல் செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, அரிசி மாவு, சீரகம், வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை முறுக்கு பிழியும் அச்சியில் போட்டு எண்ணெயில் பரவலாக பிழிந்து விடவும்.
முறுக்கு வெந்து எண்ணெய் சலசலப்பு அடங்கும் வரை வைத்திருக்கவும். இடையில் திருப்பி விடவும்.
அதன் பிறகு முறுக்கு பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
மொறுமொறு இட்லி மாவு தேன்குழல் ரெடி. அறுசுவையில் கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கும் <b> திருமதி. T. S. ஜெயந்தி </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக விளக்கப்படங்களுடன் செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மாமி சூப்பர், கலக்கீட்டீங்க மாமி. எப்படி இருக்கீங்க? இட்லி மாவுல "தேன்குழலா" ஆச்சரியமாயிருக்கு. உடனே ட்ரை பண்ணனும் போல் ஆவலாயிருக்கு. அரிசி மாவு கடையில் வாங்குவதை உபயோகிக்கலாமா, இல்லை வீட்டில் திரித்துத்தான் உபயோகிக்கனுமா? உங்கள் குறிப்பு எல்லாமே சிம்பிள் & சூப்பர்.
நன்றி.......

அன்புடன்:-)...
உத்தமி:-)

முதல் விளக்கப்படங்களுடன் கூடிய குறிப்பு தந்தமைக்கு வாழ்த்துக்கள். தேன் குழல்னா இனிப்பு வகை இல்லையா? நான் இவ்ளோ நாளா இப்படிதான் நினைத்திருந்தேன்.
அதுமாதிரி உங்க குறிப்புகளின் பெயர்களில் எனக்கு சில குழப்பங்கள் இருக்கு மாமி.
வேப்பிலைகட்டி, மிளகூட்டல் இவைகளில் பெயருக்கும், உபயொகிக்கும் பொருட்களுக்கும் சற்று வேறுபாடாக உள்ளது. வேறு ஏதவது காரணம் இருக்கிறதா இவ்வாறு அழைக்க!!!!!
இன்னைக்கு தான் உங்க பதிவை, (ஒரு பழமொழியுடன்) பார்த்தேன். உடனே முகப்பில் பார்த்தால் தங்கள் குறிப்பு. சோ அலை வந்துவிட்டது அப்படிதானே!!!!!

indira

இட்லி மாவில் தேன்குழலா .ஆச்சரியமா இருக்கு.வறட்டு அரிசி மாவுன்னா வறுத்த் மாவா மாமி.செய்து பார்க்கலாம்னு இருக்கேன்.சொல்லுங்க மாமி.

பலகாரம் வீட்டில் செய்ததே இல்லை,நிறைய சிம்பிளாக சொல்லித்தாங்க,கத்துக்கறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மாமி இவ்வளவு ஈஸியான முறுக்கா. உங்க சமையல் எப்பவுமே ரொம்ப.... சிம்பிள் & சூப்பர். செய்து பார்க்கனும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மாமி எப்படி இருக்கீங்க.உங்க பொண்ணும் பையணும் நலமா? மாமி இட்லி மாவுன்னு சொல்லியிருக்கீங்களே,அது புளித்த மாவா இல்ல புளிக்காத மாவா?

ஜெ மாமி,
மிகவும் நன்றாக இருக்கின்றது. எங்கள் வீட்டில் அம்மாவும் இப்படி தான் செய்வாங்க. மிகவும் சுவையாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

தோழிகளே ரொம்ப நன்றி

உத்தமி (நல்ல தமிழ்ப்பெயரை உச்சரிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் எனக்கு) கடையில் வாங்கும் அரிசி மாவை தாராளமாக சலித்துவிட்டு உபயோகிக்கலாம். நான் பெங்களூருக்கு பொங்கலின்போது என் தம்பி வீட்டிற்குச் சென்றபோது செய்து எடுத்துச்சென்றேன். எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது.

இந்திரா

வெல்லம்போட்ட இனிப்புத்தேன்குழலை "மனோகரம்" என்று சொல்வோம். வேப்பிலைக்கட்டி, மிளகூட்டல் என்ற பெயர்கள் ஏன் என்று கேட்டு பிறகு எழுதுகிறேன். நான் கூட கிண்டல் செய்வேன் கேரளத்தோழியை மிளகு போடாம மிளகூட்டல் என்கிறாயே என்று. கடைசியில் பாலக்காட்டு ஐயர் வீட்டில் வாக்கப்பட்டு நானும் மிளகூட்டல் செய்கிறேன்.

மேனகா

வறுத்த அரிசிமாவு அல்ல. வறட்டு அரிசிமாவு என்றால் (ஈரமில்லாமல்) அப்படியே மிஷினில் அரைத்த மாவுதான்.

ஆசியா, தனிஷா

செய்து பாருங்கள். ரொம்ப ஈசியாக இருக்கும்.

கவி

பெண்ணும், பையனும் நலம். சாம் எப்படி இருக்கான். என் கைக்கு மாவு புளிக்கவே புளிக்காது. நான் கடைசியில் இருந்த மாவில் செய்தேன்.

நன்றி கீதா

நம்ப எல்லாம் முதலில் காப்பியடிப்பது:)- அம்மா செய்யும் ஐட்டங்களைத்தானே.

அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி எப்படி இருக்கீங்க,சாம் நல்லா இருக்காரு, இட்லி மாவு தேன்குழல் நேத்து செய்தேன்.புளித்தமாவில்தான் செய்தேன் .நல்லா இருந்து. என் வீட்டுக்காரருக்கும் கொடுத்தேன் நல்லா இருக்கு, எனக்கு புடிச்சிருக்கு மாமிக்கிட்ட நல்லா இருக்கு சொன்னேனு சொல்லுனு சொன்னார்.சொல்லிட்டேன் மாமி.

எனக்கு தேன்குழல்னா ரொம்ப பிடிக்கும், ட்ரை பண்ணி பார்க்கிறேன்.அழகா இருக்கு. வாழ்த்துக்கள். இப்போ குறிப்பு கொடுக்கறதில்லையா! கொடுங்க மாமி!

அன்புடன்
பவித்ரா

எங்கயோ தேடித் தேடி இந்த குறிப்பை கண்டு பிடிச்சீங்க போல இருக்கே.
எனக்கும் குறிப்பு கொடுக்க ஆசைதான். கொடுக்காததுக்கு காரணங்கள்.
1. நேரமின்மை.
2. காமிரா கொஞ்சம் சரியில்லை (நான் ரொம்ப ஜம்பமா இனிமே போட்டோவுடன் தான் குறிப்பு கொடுப்பேன்னு சொல்லிட்டேன்).
சரி இனிமே கொடுக்க முயற்சிக்கறேன்.
அன்புடன்
ஜெமாமி