ஃகுர்ட்டான்ஸ்(Croutons)

தேதி: February 14, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இத்தாலியன் ப்ரெட் - 4 துண்டுகள்
ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி


 

அவனை 350 Fயில் முற்சூடு செய்து கொள்ளவும்.
முதலில் ப்ரெட்டின் ஓர பகுதியினை நீக்கிவிடவும்.
ப்ரெட்டினை 2 இன்ச் க்யூபுகளாக வெட்டி கொள்ளவும்.
இதனை ஆலிவ் ஆயில் மற்றும் உப்புடன் சேர்த்து பிரட்டி எடுத்து அவனில் வைக்கும் ட்ரெயில் வைத்து 10 - 15 நிமிடம் பொன் நிறமாகும் வரை அவனில் வைக்கவும்.
இப்பொழுது சுவையான ஃகுர்ட்டான்ஸ் ரெடி.


இத்தாலியன் ப்ரெட் இல்லை என்றால் சாதாரண ப்ரெட்டிலும் செய்யலாம். இதனை நேரம் கிடைக்கும் பொழுது செய்து கொண்டு 1 மாதம் வரை உபயோகிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதுவும் நன்றாக இருந்தது. இதை ஏன் செய்தேன் தெரியுமா, ப்ரட் குழியில் கிடைத்த துண்டுகளை என்ன செய்வது என்று யோசித்தேன். இந்த ரெசிப்பி நாபகம் வந்தது. சாதாரணமாக ஃப்ரை பேனிலே செய்தேன். சும்மா சொல்ல கூடாது ரொம்ப நன்றாகவே இருந்தது.

indira

இந்திரா,
எப்படி இருக்கிங்க…உங்களுடன் முதன் முறையாக பேசுகிறேன்…மிகவும் மகிழ்ச்சி.
பின்னுடன் அனுப்பியதற்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்