கம்பு வடை

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கம்பு மாவு - அரைக்கிலோ
கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
எண்ணெய் - சிறிது
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
எள்ளு - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

கம்பு மாவு, கோதுமை மாவு இரண்டையும் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதில் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, தயிர், உப்பு, எள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
பின்னர் எலுமிச்சம்பழ அளவிற்கு உருண்டைகளாக்கி வடைபோல் ஆனால் மெல்லியதாகத் தட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கொதித்தவுடன் அதில் தட்டி வைத்திருக்கும் வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்