வெஜ் கறி குழம்பு | arusuvai


வெஜ் கறி குழம்பு

food image
வழங்கியவர் : Vani Vasu
தேதி : ஞாயிறு, 15/02/2009 - 15:07
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • 1. கத்திரிக்காய் - 2 ; மொச்சை (அ) மூக்குகடலை - 2 கப்
 • 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 15
 • 3. தக்காளி - 1
 • 4. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
 • 5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • 6. கறிவேப்பிலை
 • 7. உப்பு
 • 8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
 • அரைக்க:
 • 1. மிளகாய் வற்றல் - 10
 • 2. மல்லி - 1/2 மேஜைக்கரண்டி
 • 3. ஏலக்காய் - 3
 • 4. மிளகு - 1/2 தேக்கரண்டி
 • 5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • 6. வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
 • 7. பட்டை - 1
 • 8. லவங்கம் - 3
 • 9. கறிவேப்பிலை - கொஞ்சம்
 • 10. தேங்காய் - 1/4 (அ) தேங்காய் பால் - 1 கப்

 

 • கத்திரிக்காய் நறுக்கி வைக்கவும்.
 • மொச்சை (அ) மூக்குகடலையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.
 • ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க வேண்டிய அனைத்தையும் (தேங்காய் தவிர) வறுத்து வைக்கவும்.
 • இத்துடன் தேங்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
 • வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
 • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
 • வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் பாதி வதங்கியதும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
 • இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
 • வேக வைத்த பயிறு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி கத்திரிக்காய் வேக விடவும்.
 • கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த மசாலா (தேங்காய் அரைக்காவிட்டால், தேங்காய் பால் சேர்க்கவும்), தேவையான தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.

வனிதா

ஹாய் வனிதா நலமாக இருக்கிறீங்களா?.உங்க குறிப்புக்களில் இருந்து நான் செய்தவை. வெஜ்குழம்பு,,சுக்கினிஸ்பினாச்கூட்டு,, பீன்ஸ் பிரட்டல். சேவர் பிரச்சனையால் மூன்றின் பின்னூட்டத்தையும் இதில் கொடுத்துள்ளேன். தவறாக நினைக்கவேண்டாம். வெஜ் குழம்புக்கு மூக்கு கடலை எனக்கு எது எனதெரியவில்லை. சன்னாவா? நான் சன்னாதான் போட்டேன். மூன்றும் நன்றாகவும், டேஸ்டாகவும் வந்தது. நன்றி. அன்புடன் அம்முலு.

நன்றி அம்முலு

பரவாயில்லை அம்முலு, எங்கு பின்னூட்டம் என்பதை விட என்ன பின்னூட்டம் என்பதை பார்க்க முடிந்ததே சந்தோஷம். :) எனக்காக நேரம் ஒதுக்கி பின்னுட்டம் தந்ததே மகிழ்ச்சி. மூக்குகடலை என்றால் சன்னா தான். கொண்டைகடலை'னாலும் சன்னா தான். சரியாக தான் சேர்த்து இருக்கிறீர்கள். பிடித்ததா?! அது போதும். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி

நன்றி