பீன்ஸ் தேங்காய் பொரியல்

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீன்ஸ் - 1/4 கிலோ
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 முடி
காய்ந்த மிளகாய் - 2


 

முதலில் பீன்ஸினை கழுவி பொடிதாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பீன்ஸை போட்டு சிறிது வதக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
தேங்காய் மற்றும் காய்ந்த மிளகாயினை போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க கூடாது)
பீன்ஸ் நன்றாக வெந்த பிறகு கடைசியில் இந்த தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடம் வதக்கிவிடவும்.
இப்பொழுது சுவையான பீன்ஸ் தேங்காய் பொரியல்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா இன்று பீன்ஸ் தேங்காய் பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிகவும் நன்றி மஹா.
அன்புடன்,
கீதா ஆச்சல்

பீன்ஸ் தேங்காய் பொரியல் செய்தேன்,நான் கொஞ்சம் வெங்காயம் சேர்த்துக்கொண்டேன்.நல்ல இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிகவும் நன்றி ஆஸியா அக்கா.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாச்சல், இந்த பீன்ஸ் பொரியல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இங்கே குறிப்புக் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் முறையில் தேங்காயரைத்துப் போட்டேன்,நன்றாகவே இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிகவும் நன்றி அதிரா.
அன்புடன்,
கீதா ஆச்சல்