சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

அதிரா,ரேணுகா,வனிதா,சாந்தி மற்றும் எல்லோரும் நலமா?
வனிதாவின் குறிப்பில் இருந்து இஞ்சி க்ரீன் டீ, சிக்கன் பால் பிரியாணி செய்தேன்.
அதிரா, புதிய தளத்தில் எல்லோருடைய குறிப்புக்களுக்கும் பின்னூட்டம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.பின்னூட்டம் கொடுக்காத குறிப்புக்கள் எல்லாம் குறித்து வைத்துள்ளேன்.
அதிரா, உங்களுடைய ஐடியை ஒரு பதிவில் இருந்து எடுத்து வைத்துள்ளேன். நான் அதற்கு மெயில் அனுப்பலாமா?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

சாய் கீதா, மிக்க நன்றி. புதுத்தள வேலைகள் நடப்பதால் அறுசுவை எல்லோருக்குமே கொஞ்சம் ஸ்லோவாகத்தானிருக்கிறதென நினைக்கிறேன்.

வத்சலா, மிக்க நன்றி. தாராளமாகா பின்னூட்டங்களை புதிய தளத்தில் கொடுக்கலாம். நானும் சிலதை கொடுத்திட்டேன், சிலதை வைத்திருக்கிறேன். பெருங் கஸ்டமாக இருக்கு. புதியதளம் எப்படியும் இந்த மாதத்துக்குள் வந்துவிடுமாம்:) ஆனால் அது எந்தமாதம் என்பதுதான் புரியவேயில்லை.....:).

இதென்ன பெமிஷன் எல்லாம் கேட்கிறீங்கள் வத்சலா...கல்லை எறியுங்கள், வந்தால் மாங்காய் போனால் கல்லுத்தானே:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா ரேணுகா எப்படி இருக்கீங்க.
இன்னைக்கு சாந்தியோட தக்காளி சாம்பாரும்,வனிதாவோட,சின்ன வெங்காய சட்னியும்,முட்டை மசாலவும்,கீரைசாதமும்.செய்தேன்.

என்னுடய கணக்கு...
சாந்தியின்... வெஜ் பிரியானி,மஷ்ரூம் குருமா...
வனிதாவின்...உருளை பொரியல் &கீரை சாதம் (குழந்தைகளுக்கு)...
இந்த தலைப்பு மிகவும் நன்றாக உள்ளது.... இதனால் வித விதமாக சமைக்க முடிகிறது... அதிரா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்...
Continue this express..

அதிரா,நலமா?இந்த முறையாவது நீங்கள் அசத்தல் ராணி பட்டம் வாங்குவீர்களா?இன்று வனிதாவின் காலிபிளவர் பரோட்டா,வேர்க்கடலைசட்னி,நெய்காய்ச்சும்முறை மூன்றும் செய்து பின்னூட்டமும் அனுப்பி விட்டேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்று வனிதாவின் குறிப்பில் இருந்து கார சட்னி மற்றும் கடாய் சாதம்(எலுமிச்சை) செய்தேன். நன்றாக இருந்தது. நன்றி.

அதிரா, ரேணுகா
வனிதாவின் மல்லி உருளை பொரியல்,தேங்காய்பால் சாதம் செய்தேன். டின்னருக்கு இனிதான் பாகக்ணும்.
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

இரவு சாந்தியின் ரவாதோசையும், தக்காளிக்குழம்பும் கணக்கில் சேர்த்திடுங்க!

கவிஎஸ், பிறியா,ஸாதிகா அக்கா, கீதாச்சல், மீனா, சாய்கீதா அனைவரும் வாங்கோ... மிக்க நன்றி.

ஸாதிகா அக்கா, நான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன்... ரேணுகாதான் என்னைப் போட மாட்டேன் என்கிறார். 10 குறிப்புக்களுக்கு மேலே என் பெயர் வருகுதில்லை... நீங்களாவது கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோ அக்கா:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

காலையில் வனிதாவின் ,
உப்புமா, சப்பாத்தி தால்
என் கணக்கில் சேர்த்திடுங்க!

மேலும் சில பதிவுகள்