சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

ஹாய் அதிரா
நீங்கள் வடக்கு நான் கிழக்கு.
சும்மாதான் கேட்டேன்.எல்லோரும் உங்கள் தமிழை புகழ்ந்து பேசுகின்றனர்,எந்த பகுதி என்று அரிய ஆசையாக இருந்தது
அசத்தல் ராணி துஷ்யந்திக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
இன்னால் இளவரசிகள் வருங்கால ராணிகளுக்கும் என் வாழ்த்துக்கள்
அன்புடன் அதி

அடுத்து நாம் செய்யப்போவது,
அடுத்ததாக இறங்குவரிசைப்படி நாம் செய்யப்போவது கீதாச்சல் 198, ரஸியா 10. இருவருடைய குறிப்புக்களையும் சேர்த்துச் செய்யவுள்ளோம். வழமைபோல் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும். எல்லோரும் வந்து கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு அழைக்கிறேன். தயவு செய்து யாரும், எதிலும் குறை எடுத்திட வேண்டாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கு உங்கள் உடம்பு வலி+தலையிடி? சரியாகிட்டதா? தலைவலிக்கு தலையிடி உடம்பு வலிக்கு என்ன சொல்விங்க. கொஞ்சம் அப்ப இனியு தமிழை கற்று கொடுங்க.
சரி திங்கள் கிழமையில் இருந்து கீதாச்சல் சமையலில் வந்து பார்க்கிறேன். கொஞ்சம் மெல்ல வந்து பஸ்ஸில் தான் இறங்க முடியும் ஏன் என்றால் நமது அருசுவை எங்கள் அமெரிக்கா நேரப்படி காலயில் 9 மனியில் இருந்து மதியம் 1 மனி வரை ஸ்லோவாக தான் எனக்கு ஒப்பன் ஆகிறது ஆதனால் நான் பஸ் வந்தவுடன் வந்து கலந்துகொள்கிறேன்.
நன்றி அ..தி..ர..டி.. அ.. தி.. ரா...................

எப்படி இருக்கீங்க?ஸாரிமா என்னால் இரண்டு வாரமாக கலந்துக்கொள்ள முடியவில்லை!எனது பெரிய தந்தை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்,இதனால் நான் சொல்லொன்னா துயரத்தில் இருந்தேன்!நான் அருசுவை பக்கம் வருவது இல்லை,இருந்தாலும் சில நேரம் எனது பக்கம் சென்று எதுவும் சமீபத்திய பதிவுகளில் புதிது இருக்கிறதா என்று பார்ப்பேன்,இல்லை என்றவுடன் உடன் மூடிவிடுவேன்.இதனால் எனக்கு அருசுவைய்யில் என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை,அதுமட்டுமல்ல ஜெயந்தி மாமியிம் சில சமயலை செய்தேன் ஆனால் அதைக்கூடஎன்னால் தெரிவிக்க இயலவில்லை,இப்பொழுது ஜலீலாக்கா சொல்லிதான் எனது சமையலையும் அடுத்தவாரம் செய்யவிருப்பதாக அறிந்தேன்,இப்பொழுது தேடி இந்த பதிவை கண்டு பிடித்து எழுதுகிறேன்.மிக்க நன்றி அதிரா.நான் காத்திருக்கிறேன்....!மற்றவைக்கு பின்பு

அன்பு ரஸியா.... முதலில் என்னை மன்னிக்கவும். நீங்கள் நலமா?, உங்கள் பெரியப்பாவின் இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தப்பு என்னிலும் இருக்கிறது. நான் நினைத்தேன் ஒரு ரஸியாதான் இங்கே இருக்கிறார் என்று. ஆனால், இப்போ ரேணுகா எனக்கு அறிவித்துத்தான் தெரிந்துகொண்டேன், இப்போ தான் சரியாகக் கண்டுபிடித்தேன். நான் குறிப்பிட்டுள்ளது ரஸியா - நிஸ்றினா வை. ஆனால் மேலே 10 குறிப்புக்கள் எனப் போட்டிருக்கிறேன். ரஸியா பானு, நீங்கள் அதிகம் குறிப்புக்கள் கொடுத்திருக்கிறீங்கள். நான் அறிவித்தபோது கீதாச்சல் 198 குறிப்புக்கள் கொடுத்திருந்தார், அப்போ எதேச்சையாக அவரோடு 10 குறிப்புக்கள் கொடுத்தவரை இணைப்போம் என்று தேடினேன், ரஸியா - நிஸ்றினா இருந்தார், நான் நினைத்தேன், அவர் ரஸியாதான் என்று. அதனால் ரஸியா என்றே பெயரைக் கொடுத்தேன்.

ஆனாலும் ரஸியா பானு, நீங்கள் கேள்விப்பட்டதும் ஓடிவந்து பதில் போட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கு. மிக்க நன்றி. இதே உற்சாகத்தோடு இருங்கள், விரைவில் உங்கள் குறிப்புக்களும் செய்யும் தவணை வரும். இந்தாங்கோ நீட்டுத்தடி... இது ஜலீலாக்காவுக்கு... உங்களால் முடிந்தால் கலைத்துப் பிடியுங்கோ நானும் வருகிறேன் என் பங்கையும் கொடுக்க... முன்பும் இப்படித்தான் இலாவுக்கு பிறந்தநாள் என்று எனக்குச் சொல்லி.... பின்னர் அது தப்பாகி... நான் கலைத்துப் பிடிக்கமுடியாமல் ஓடிற்றா..:) இம்முறை விடமாட்டேன்...:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எங்கள் ஊரில் தலியிடி தலையிடிதான், சில ஊர்களில் மண்டைக்குத்து என்பார்கள். உடம்பு வலியை சிலநேரம் உடம்பு உழைகிறது. தேகம் உழைகிறது... இப்படியும் சொல்வோம்...

சரி சரி நீங்கள் பஸ்ஸில் வந்தாலும் பறவாயில்லை... வந்து எம்மோடு கலந்து கொள்ள வேணும். அதுதானே எமக்கு மகிழ்ச்சி. அதற்காக லோகல் பஸ்ஸைப் பிடித்திட வேண்டாம்.... அமெரிக்கன் எக்ஸ்பிறஸ்..... :)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா!உங்கள் ஆருதலான வார்த்தைக்கும்,உங்கள் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி!பெயர் குழப்பம் தெரிந்து எனக்கு சிரிப்பு தான் வந்தது!!!!ஹா ...ஹா...ஹா அதிரா!ஜலீலாக்கா முன்பு வேனா தப்பா சொல்லி இருக்கலாம்,ஆனா நீங்க ரஸியான்னு சொன்னது உங்கள் தவரல்லவா?அவரை எல்லோரும் ரஸியா நிஸ்ரினா என்றே அழைப்பர்,அதனால் உங்கள் நீட்டு தடியால் ஓங்கி ஒன்னு உங்கள் தலையிலேயே போட்டுக்கோங்க!!அதிரா சும்மா பகிடிக்கு தான் கோபிக்காதீக்கோ!!

என்ன ரஸியா நீங்களும் அதிராவை இலங்கை தமிழில் கிண்டல்.
ஏன் அதிராவிற்கு இன்னும் தலை வீங்கவா?

கொஞ்சம் பொருங்கள் ரஸியா. உங்கள் டேனும் வரும்.

ஜலீலா

Jaleelakamal

எப்படி இருக்கீங்க?வீட்டில் எல்லோரும் நலமா?உங்கள் மெயில் எனக்கு ஆருதலாக இருக்கிறது,பிள்ளைகள் எல்லோரும் இப்பொழுது நலமுடன் இருக்கிறார்கள்!இரண்டு வார விடுமுறைக்கு பின்பு இன்று தான் பள்ளிக்கு சென்று உள்ளார்கள்.அதிராவிடம் பேசும் போது நமக்கும் அந்த அழகு தமிழில் கதைக்க தோன்றுகிறது!அவர்கள் பதிவு எல்லாவற்றிலும் ஒரு நகைச்சுவை இருக்கும்!நான் எப்பொழுதும் ரசிப்பேன்!அவர்கலோடு பேசினால் நமக்கும் நகைச்சுவையாக எழுதவரும்!அப்புறம் உங்களுக்கு விரிவாக மெய்ல் செய்கிறேன் அக்கா!இப்பொழுது எனது சமைய்யல் இல்லாதது எனக்கு கொஞ்சம் நிம்மதி!மன நிலை சரியாக இருந்தால் தான் உற்ச்சாகமாக பதில் தரலாம்!மெதுவாக செய்யலாம்!

நீங்கள் இருவரும் சண்டை போடுவீங்கள் என பார்த்துக்கொண்டிருந்தேன், இது என்னவென்றால் என்னும் நெருக்கமாகிவிட்டீங்கள் போல் தெரிகிறதே:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்