சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

வத்சலா, நான் நலம். நீங்கள் நலமா? மிக்க நன்றி இம்முறை நீங்கள் இந்த பகுதியில் கலந்து கொள்வதற்கு. :)

அதிரா நீங்க சமையல் பன்னுங்க, நான் ரேணுகாவை கணக்கு எடுக்க சொல்றேன். அவங்க போடாட்டா நானே போடுறேன். சரியோ?! ;)

எங்க ரேணுகா?! கணக்கு பிள்ளை போன முறையும் கடைசியில தான் வந்தாங்க. கணக்கு என் சமையலை சமைக்கவாச்சும் வாங்க. :(

என் கணக்கில் சாந்தி குறிப்பு:

கோதுமை தோசை
ரவா தோசை
பாலக் துவையல்

சேர்த்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனியின் சமையல்- உப்புமா,ஈசி சிக்கன் ரோல்
சாந்தியின் சமையல்- டோபு பீஸ் மசாலா,முட்டை சாப்ஸ்.
வனிதா கவலைப்படாதீங்க.உங்க சமையல் குறிப்பு நல்லாஇருக்கு.உங்கள் ஆர்வம் எனக்குப்பிடிக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்னக்கு வனிதாவின் செட்டிநாட்டு தக்காளீ குழம்பு, உருளை பொறியல்

சாந்தியின் அரிசி கிச்சடி

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆசியா... உங்களை போல் சமையலில் அனுபவம் உள்ளவர்கள் சமைத்து பார்த்து பின்னூடம் தரும்போது சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் பயமும் ஒரு பக்கம் இருக்க தானே செய்கிறது. :( கவலைபடாமல் எப்படி இருக்க. ஆர்வம் மட்டுமே இருக்கு. அதை பிடிக்கும்னு சொன்னதுக்கு முதல்ல நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா, ரேணுகா இருவரும் நலமாப்பா?
வனிதாவின் குறிப்பிலிருந்து "உருளை பொறியலும்", சாந்தியின் குறிப்பிலிருந்து, "கருவேப்பிலை குழம்பும்" செய்தேன்.

அன்புடன்:-)..........
உத்தமி:-)

சாய் கீதா மிக்க நன்றி.

வனிதா, ஆகா இப்படியல்லவா இருக்கவேண்டும். சிம்மாசனத்தில் இருப்பதோடுமட்டுமல்லாமல் குறிப்பையும் செய்கிறீங்களே மிக்க நன்றி.

ஆஸியா வாங்கோ மிக்க நன்றி. எப்பவும் முதலாவது நாளே வந்திடுவீங்கள், இம்முறை வரவில்லையே என யோசித்தேன்.

தனிஷா மிக்க நன்றி.

வனிதா!! தளிகா மாதிரி ரொம்பக் குதிக்கப்படாது, ஷெயார் போட்டிருக்கிறோம் அதிலே இருக்கவேணும் சரியோ?:).

உத்தமி வாங்கோ, நான் நலம்... ரேணுகாவும் நலமாகவே இருக்க இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி.

நான் நேற்று உப்புமா, லெமன் யூஸ் வித் ஜிஞ்சர், இரண்டும் தான் செய்ய முடிந்தது.. வனிதாவின் குறிப்பிலிருந்து.. ரேணுகா என் எக்கவுண்ட் ஓபின் பண்ணிட்டேன்.. நீங்க எப்போ? வனிதா இம்முறை நான் எப்படியும் பட்டம் பெற்றிடுவேன் இல்ல?:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று மதிய சமையலில்
வனிதாவின், கடாய் சாதம்(எலுமிச்ச்சை),
ஈஸி சிக்கன் ஃப்ரை.
சேர்த்திடுங்க!

நீங்க வேர அதிரா... நான் பயத்துல போட்ட chair'லயே ஒரு ஓரத்துல ஒன்டிக்கிட்டு இருக்கேன்.... எங்கே குதிக்க. :(

நீங்க கண்டிப்பா பட்டம் வாங்கறீங்க. நான் தற்றேன். சரியோ??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அதிரா,ரேணுகா எப்படி பா இருக்கீங்க?நான் இன்றைக்கு வனிதாவின் கத்தரிக்காய் மிளகு குழம்பு செய்தேன்.

அடுத்து சாந்தியின் பாலக் துவையல் செய்தேன்.இரண்டு குறிப்பும் ரொம்ப அருமையா இருந்துச்சு.

இன்று என்னுடைய சமயல் -வனிதாவின் க்ரிஸ்பி பூரி-2,இஞ்சி க்ரீன் டீ,பருப்பு ரசம்.

சாந்தியுடையது -வெஜ்பிரியாணி.
எனக்கு இப்பொழுதுதான் அருசுவை ஓபன் ஆகியது.

சவுதி செல்வி

மேலும் சில பதிவுகள்