சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

வனிதாவின் குறிப்பில் இருந்து இப்பதான் உருளைக்கிழங்கு சிப்ஸ் பண்ணினேன். இன்னும் நான் சாப்பிடலப்பா. சிப்ஸ் சாப்பிட்டு இரவு சமையலும் முடிச்சிட்டு வர்றேன்.
சிப்ஸ் நல்லா இருக்குன்னு பாராட்டு ஒருபக்கம், இப்பிடியே செய்து என்னை குண்டாக்கிட்டே போறியேன்னு திட்டு ஒருபக்கம். இன்னும் ஒருமாசம்தான் அவர் அம்மா,அப்பா வந்ததும் எல்லாரும் சேர்ந்து டயட்டில் இருப்பாங்க!(:-))

அதிரா,

நேற்று இரவு வனிதாவின் நட்ஸ் சப்பாத்தி (குழந்தைகளுக்கு), சேமியா உப்புமா & இன்று காலை ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி செய்தேன். எல்லாமே நன்றாக இருந்தது, அதிலும் லஸ்ஸியின் சுவை சூப்பரோ சூப்பர்!

வனிதா,
இனிமேல்தான் பின்னூட்டம் கொடுக்க வேண்டும். தற்சமயம் எனக்கு அறுசுவை ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறது, பிறகு வருகிறேன் பின்னூட்டத்துடன்... : )

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

என்னுடைய கணக்கு – உருளைகிழங்க்கு சிப்ஸ்.
மிகவும் சுவையாக இருக்கின்றது. நன்றி.

அதிரா ரேணுகா இதுவரை சமைத்தது வனிதாவின்
காலிபிளவர் பராட்டா,
நட்ஸ் சப்பாத்தி(குழந்தைகளுக்கு)
பூண்டு அரைத்த குழம்பு,
மின்ட் ஆரஞ்சு

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

என்னுடைய கணக்கு...
வனிதாவின்;
வெங்காய தக்காளி சட்னி,
தக்காளி சாதம்,முட்டை தொக்கு,உருளைக்கிழங்கு ஸ்பினாச் மசியல்....,

இரவு சமையலில், வனிதாவின்,
இட்லி சாம்பார்,(காய் சேர்த்தது)
பூண்டு சட்னி
சேர்த்திடுங்க!

இருவரும் நலமா?கணக்குப் பிள்ளையௌ காணோமே.நான் வனிதா குறிப்பிலிருந்து கடாய் சாதம்-எலுமிச்சை,வெங்காய தக்காளி சட்னி,முட்டை மசாலா[மற்றொரு வகை],கிராமத்து கோழிக்குழம்பு,பட்டூரா,மசாலா டீ பொடி,சென்னா மசாலா.வனிதா பின்னூட்டம் பிறகு குடுக்கிறேன்

ஆரம்பம், ஆரம்பம் என்னுடைய அக்கவுன்ட் ஆரம்பம்...

வனிதா குறிப்பிலிருந்து : பூண்டு அரைத்த குழம்பு, பீன்ஸ் பிரட்டல்.

இந்த இரண்டு குறிப்புக்குத்தான் இத்தனை ஆ...ரம்பமா என்று அதிரா வருவதற்குள் நான் எஸ்கேப்.

அதிரா, ரேணுகா இன்று வனிதாவின் குறிப்பில் இருந்து
மின்ட் ரொட்டி, பைனாப்பிள் சாலட்
சாந்தியின் குறிப்பில் இருந்து தக்காளிக் குழம்பு செய்தேன். எல்லாம் மிகவும் சுவையாக இருந்தது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

சாய் கீதா மிக்க நன்றி.
வனிதா... பட்டம் தராவிட்டாலும் என்னால் இலங்கைப் பாசை கற்றுக்கொண்டு வாறீங்கள் என்பது புரியுது.. உங்கள் எழுத்திலிருந்து.
சுகன்யா வாங்கோ... உங்களில் எனக்கு பிடித்த விஷயமே இந்தப் @பா@ போட்டுக்கதைப்பதுதான். படிக்க நன்றாக இருக்கு. எல்லோருடனும் அரட்டை பண்ண ஆசைதான், ஒன்று எனக்கும் அறுசுவை ஸ்லோ... அடுத்து நேரமும் பெரிதாக இல்லை. என்ன செய்வது. முக்கியமானவைக்கு மட்டும் பதில் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன். மிக்க நன்றி.
செல்வி வங்கோ மிக்க நன்றி.
சாய்கீதா மிக்க நன்றி. எமக்காக திட்டைப் பொறுத்துக்கொண்டு நிறைய சமையுங்கோ. சாப்பிட்டவுடன் நடக்கச் சொல்லுங்கோ... அப்பத்தான் குண்டாவதை தவிர்க்கலாம் என்று அறுசுவையில் சொல்கிறார்கள் என்றும் சொல்லிப்போடுங்கோ... :)
ஸ்ரி வாங்கோ மிக்க நன்றி. சுழி போட்டால் நிறையச் சமைக்க வேணும் அப்பத்தான் பிள்ளையாருக்கு கோபம் வராதாம்.
கீதாச்சல் மிக்க நன்றி.
கிருத்திகா, ஏன் இன்னும் பெயரை மாற்றவில்லை, மாற்றுவது சுலபம். மிக்க நன்றி.
பிறியா மிக்க நன்றி.
சாய்கீதா.. நீங்கள் இப்படி செய்வதைப் பார்க்க எனக்கு சரியான சந்தோஷமாக இருக்கு, மிக்க நன்றி.
மேனகா நாம் நலமே.. வாங்கோ.. நீங்கள் எக்கவுண்டன் என்று கூப்பிடுங்கோ உடனே வந்திடுவா. மிக்க நன்றி மேனகா.

வி...வி....வின்னி வாங்கோ.. இம்முறை கூக்குரலோடு வெள்ளனவே வந்திட்டீங்கள்... :)ஆரவாரம் எமக்கு பழக்கப்பட்டு விட்டது, ஆனால் முதல் பெட்டியில் ஏறிட்டீங்கள் அதுதான் நம்பமுடியவில்லை. மிக்க நன்றி. இப்போதைக்கு இறங்கிட வேண்டாம்.

எல்லோரும் வாங்கோ... சமைத்து ருசிக்கலாம். எம்மோடிணைந்திருக்கும் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்