சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

அதிரா ரேணு என் கணக்கில வனிதாவின் சன்னா மசாலா சேர்த்துக்கோங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வனிதா சமையல் - மின்ட் ரொட்டி.சப்பாத்தி தால்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா, அறுசுவை சமையலுக்கு இன்று விடுப்பு விடச்சொல்லி, ஹஸ் உத்தரவு போட்டு விட்டார்ப்பா..... இன்று முழுவதும் என் சமையல் மட்டும் தான் சமைக்க வேண்டுமாம். நாளைய தினம் கலந்துக்கிறேன்ப்பா:)......

அன்புடன்:-)..........
உத்தமி:-)

என்னுடைய கணக்கு – இன்று மதியம் வனிதாவின் குறிப்பில் இருந்து லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர் செய்தேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

இன்றைய எனது சமையலில். காலை,
சாந்தியின்,
தக்காளி தோசை.
வனிதாவின்,
இருகடலை சட்னி!

ஹலோ அக்கா, தினமும் எங்கள் வீட்டில் இஞ்சி கிரீன் டீ தான். அக்கா டீ தூள் போட்டு கொதிக்க வைக்கலாமா?(டீ பேக் இல்லாவிட்டால்)

ஹலோ அக்கா இன்றைய சமையல் இஞ்சி கிரீன் டீ, உருளை பொரியல் என்னோட கணக்கில் சேர்த்துக்கோங்க. நன்றி அக்காஸ்

நானும் ரெடி,வனிதாவின் வெஜ் மிளகு குழம்பு,ஏசி கோழி வறுவல் சாரி சாரி ஈசி கோழி வறுவல் செய்தேன் இரண்டுமே நல்லா இருந்தது,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்று என்னுடைய சமயல் வனிதாவின் -சேமியா உப்புமா.
எனக்கு பல்வலிப்பா.அதனால் ஹாஸ்பிடல் போகிறேன்.ரூட்கனால் செய்யவேண்டும் என்று டாக்டர் கூறினார். அதனால் இன்னும் 2நாட்களுக்கு என்னால் கலந்துகொள்ள முடியாது. மீண்டும் சனிக்கிழமை வருகிறேன்.

சவுதி செல்வி

உத்தமி நான் நலம்,நீங்கள் நலமா?முதலாவதாக வந்திட்டிங்க,பட்டம் வெல்லவா?

இலா பட்டம் தந்தால் தான் சமைப்பேன் என்றால் எல்லாருக்கும் ஒவ்வொரு பட்டம் அதிராவை தர சொல்லுகிறேன்,நீங்கள் சைவமாக மாறிவிட்டதாக சொன்னீங்களே,முட்டை சைவமா?அசைவமா?குழப்பைத்தை தீருங்கள்,

தனிஷா நலமா?பொண்ணு நலமா?என்ன செய்து கொண்டு இருக்கிறாள்?என் பையன் அப்பப்ப சொல்லுவான் இரண்டு பேரும் அடித்து கொண்டதை,

சுபா நலமா?பிள்ளை நலமா?நான் உங்களுக்கு பதில் அனுப்ப நினைத்ததிலிருந்து சிஷ்டம் முன்னாடி உட்காரவே இல்லை,இப்ப ஊரில் செட்டில் ஆகியாச்சா?எந்த ஊரு?பையனை ஸ்கூல் சேர்த்தாச்சா?நீங்களும் இதில் கலந்து கொண்டதில் ரெம்ப மகிழ்ச்சி,தொடர்ந்து கை கொடுங்கள்

சாய் கீதா நலமா?அறுசுவை உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் ரெம்ப ஸ்லோ சமையத்துல கோபமே வருது அத்தனை பொருமை,அரட்டை பகுதியில் என்னை கேட்டதாக சொன்னீங்க,நான் அங்க வருவதே இல்லை,அசத்தலாம் பகுதி மட்டும் தான் வருவேன்,அங்கும் வர நினைப்பேன்,உட்காந்தால் எழுந்திருக்க மாட்டேன்,பையன் ஸ்கூல் அனுப்பிவிட்டு அந்த பக்கம் வருகிறேன் சரியா?

வத்சலா நான் நலம்,நீங்கள் நலமா?இப்பொழுது உடல் நிலை சீராகி விட்டதா?இந்த முறை அதிகம் சமைத்து பட்டம் வாங்கனும் ஓ.கே வா?

கவி.எஸ்,வாங்கோ,நலமா?இந்த முறை நிறையா சமைக்க வேனும்,இதெல்லாம் பத்தாது

பிரியா நலமா?இத்தலைப்பு இருப்பதால் எல்லாரும் தினம் ஒரு சமையல் கற்று கொள்கிறொம்,எல்லாரையும் சமையல் ராணி யாகா ஆக்க அதிரா முடிவெடுத்துவிட்டார்

சாதிகா அக்கா உங்களுக்கு அதிரா பட்டம் வாங்க வேண்டும் என்று அத்தனை ஆசையா?அதிரா சாதிகா அக்காவின் ஆசையை தீர்த்து வையூங்கள்,அதிரா இப்பதான் 5, 6 ல் இருந்து 10,11 என வந்துள்ளார்,சீக்கரம் வருவார்,

கீதா ஆச்சல் நலமா?பொண்ணு எப்ப்படி இருக்கா?என்ன வரீங்க,சமைச்சதை சொல்லிட்டு ஒரே ஓட்டம்,ரெம்ப பிஸியா?

கிருத்திகா நலமா?இந்த முறை அசத்தல் ராணி பட்டம் வாங்க ரெடியா?

வனிதா நலமா?நானா வரமாட்டேங்குறேன்?சாந்தியின் குறிப்புகள் செய்து பட்டம் வெல்லுங்க்ள்,அதிராவுக்கு ஆனாலும் இத்தனை ஆசை கூடாது,நான் பட்டம் தர வில்லையாம்,அதிரா இந்த பட்டம் வாங்கினா எல்லாருக்கும் நான் விருந்தே வைக்கிறேன்

ஆசியாக்கா நலமா?உங்க பசங்க எப்படி இருக்காங்க,எக்ஸாம் எப்ப?

சுகன்யா எப்படி இருக்கீங்க?இன்னும் நிறையா செய்ங்கப்பா,நீங்க எப்ப பட்டம் வாங்கறது

ஸ்ரீ நலமா?ரெம்ப பிஸி அறுசுவை,அதான் ஸ்லோவா வருது

மேனகா நலமா?நான் நான் நலம்,எங்கும் காணாமல் போக மாட்டேன்,அப்படியே கானாமல் போனாலும் முடிவை போட்டுட்டு தான் போவேன்

வானதி நலமா?எஸ்கேப் ஆக வேண்டாம் அதிரா ஒன்னும் சொல்ல மாட்டார்,நீங்க இன்னும் செய்யவேனும் சரியா?

அரசி நலமா?உங்களுடன் பேசி கண நாட்கள் ஆகிவிட்டது,ஏன் என்னை அக்கான்னு சொல்றீங்க,ரேணு ன்னே கூப்பிடுங்க,இல்லன்னா ரேனு"கா"ன்னு கூப்பிடுங்க,பேரும் வரும் அக்காவும் வரும்

அச்சச்சோ செல்வி பல் வலியா?டாக்டரை பார்த்து ரெஸ்ட் எடுத்து வாங்க,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்