சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

ஹ்ட்ட்ப்://ந்ஹட்ச்cஓகிஙமெரிcஅ.னெட்/ஈன்fஒர்மடிஒன்/றிcஎBரனோஇல்.ஹ்ட்ம்

ரேணுகா... அவங்க "அச்சச்சோ செல்வி" அல்ல, "ESMS செல்வி". ஹிஹிஹீ. ஆமாம் யார் குறிப்பை பார்த்து செய்தீங்க?! நான் மிளகு குழம்பு குடுக்கவே இல்லையே ;) ..... ஏசி சிக்கன் பிரை மட்டும் சரியா செய்துட்டீங்க. அதிரா கூட சேர்ந்து எல்லாரும் கின்டல் பண்ண ஆரம்பிசிட்டீங்க. இருங்க உங்களுக்கு இந்த முறை பட்டம் கிடையாது.

அது என்ன எல்லாரையும் "நலமா??"னு கேக்கறீங்க?! அதை அரட்டை பக்கதுல தானே கேக்கனும்... இங்க கேட்டு என்னவோ என் சமையல் செய்து சாப்பிட்ட பிறகு எல்லாரும் நலமா?!'னு கேக்கறாப்பலல்ல இருக்கு. TOO BAD KANAKKU :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ட்ட்ப்://
ந்ஹட்ச்cஓகிஙமெரிcஅ.னெட்/
ஈன்fஒர்மடிஒன்/
றிcஎBரனோஇல்.ஹ்ட்ம்

வனிதா இது என்ன அர்த்தம் என்று முதலில் சொல்லுங்க,
வெஜ் மிளகு குழம்பு உங்க குறிப்பில் இருந்துதானே செய்தேன்,செய்ய நினைத்தை எல்லாம் உங்க குறிப்பு என்று தனியாக வைத்துள்ளேன்,நான் நினைக்கிறேன் சந்தோஷத்தில் இன்னும் புரியாமல் இருக்கறீங்க போல

http://www.arusuvai.com/tamil/node/9837 மேடம் போய் பாருங்க

நான் அரட்டை பகுதிக்கு வருவதே இல்லை,அதனால் தான் இங்கு எல்லாரையும் விசாரித்தேன்,நான் எப்பொழுதும் இங்கு தான் விசாரிக்கிறேன்,இந்த முறை உங்களுக்கு விசித்திரமாய் பட்டது ஏனோ?அட ராமா எங்க வனிக்கு என்னா ஆச்சு?

இன்னும் ஒன்னும் சொல்லவா?""இங்க கேட்டு என்னவோ என் சமையல் செய்து சாப்பிட்ட பிறகு எல்லாரும் நலமா?!'னு கேக்கறாப்பலல்ல இருக்கு."" அப்படின்னா உங்க சமையல் சாப்பிட்டா ஏதாச்சும் பன்னுமா?சரி சரி அழாதீங்கோ சும்மா சொன்னேன்,குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரவா?

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா நலமா??எனக்கு ஒரு பதிவுக்கு மேல அறுசுவையில பதிவு போட முடியல,உங்களுக்கு பதிவு போடுவதற்க்குள் நெட்வொர்க் எரர் வந்திடுச்சு,
ராஜாவுக்கு ஒரு சட்டம்,மக்களுக்கு ஒரு சட்டம் என்பது போல அல்லவா நீங்க சொல்லிட்டு போயிட்டீங்க,நீங்க சமைச்சா நான் பட்டம் தர்றேன். சரியா?

சகலமானவர்களுக்கும், தெரிவிப்பது என்ன வென்றால் இந்த முறை அதிரா பட்டம் வெல்ல முடிவெடுத்து விட்டார்,நிச்சயம் அவர் பட்டம் வெல்வாராம்,எல்லாரும் அபுதாபிக்கு விருந்துக்கு தயாராகவும்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா... அது குருமா... :( குழம்பு மாதிரியா வந்துச்சு??!! சும்மா தாமசுக்கு சொன்னேன் விச்சரிச்சதை... நான் எத்தனை முறை சொல்றது எனக்கு குச்சி மிட்டாய் வேணாம், தேன் மிட்டாய் தான் வேணும்'னு. இனி நியாபகம் வெச்சுக்கனும். சரியோ?! ;)

அந்த லின்க் நான் ஆர்ரோக்கிய உணவு பகுதிக்காக காப்பி பன்னது, மேலே இருந்ததை கவனிக்காம போட்டுடேன். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா இன்றைய சமையல் இட்லி சாம்பார்(காய் சேர்த்தது). என் கணக்கில சேர்த்துக்கோங்க. நன்றி அக்காஸ்

அதிரா நல்லா இருகீங்களா,

ரேணு நான் நான் நிறைய செய்யணுமா......... என்னால முடிந்ததை செய்றேன்.நான் நிறைய செயணும்னா என பையனை நீங்க.
பாத்துகோங்க, அப்புறமா நாந்தான் அசத்தல் ராணி:-)
சரி நேத்து திங்கட்கிழமை செய்த்தெல்லாம் கொஞ்சம் சொல்றேன்.
திங்கட்கிழமை சப்பாத்திதால்,ஸ்பினாச் ஆலு கிரேவி.
செவ்வாய்கிழமை தக்காளிசாரு,வாழைப்பழ மில்க்க்ஷேக்,கத்த்ரிக்காய் காரக்குழம்பு,உருளைக்கிழங்கு பொரியல்,இதெல்லாம் வனித்தாவோட குறிப்பிலிருந்து செய்தது.
சாந்தியோட குறிப்பிலிருந்து மஷ்ரூம் குருமா. மீதிய அப்புறம் வந்து சொல்றேன் என் பையன் அழுவுறான்.

வனீ வாழைப்பழ மில்க் ஷேக்,கத்திரிக்காய் காரக்குழம்பு,உருளைக்கிழங்கு பொரியல் இதுக்கெல்லாம் பின்னூட்டம் கொடுக்க முடியல அறுசுவை ஸ்லோவா இருகறதனால அப்புறமா வந்து பின்னூட்டம் தரேன்.

என்னப்பா அதிரா உங்ககிட்ட எனக்கு பிடித்தது மனதில் தோன்றுவதை படார் படார் என்று சொல்வது ரொம்ப பிடிக்கும்.

அட ரேணுகா எனக்கு பட்டம் வாங்குவதெல்லாம் நோக்கம் இல்லைப்பா.வரனும் என்று இருந்தா அது கண்டிப்பா வரும்.தினமும் சாம்பார்,குழம்பு இப்படி சமைத்தது பழகி போச்சு.ஒரு மாறுதலுக்கு மற்றவங்க குறிப்பை செய்து பார்ப்பது,அவர்களை ஊக்குவிப்பது ஒரு தனி சந்தோஷம் தான்.

ஃப்ரிட்ஜில் என்ன இருக்கோ அதை வைத்து என்னால் முடிந்தவரை அவங்க குறிப்பை செய்து பார்ப்பேன்.இருந்தாலும் உங்க ஊக்கத்துக்கு ரொம்ப நன்றிப்பா.

சரி அரட்டை மட்டும் அடிக்க வரவில்லை.நான் செய்த குறிப்பையும் பதிவு செய்ய வந்திருக்கேன்.வனிதாவின் கார சட்னி,செட்டிநாடு முட்டை குழம்பு செய்தேன்.அருமையா இருந்தது.அவருக்கு பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.

என் மதிய சமையலில் சாந்தியின்,
வெஜ் பிரியாணி,
வனிதாவின்,
மசாலா டீ பொடி,
அதிரா & ரேணுகா உங்களுக்கு ஒரு விஷயத்துக்காக நன்றி சொல்லணும். முன்பெல்லாம் எனக்கு அளவா, கொஞ்சமா சமைக்கவே தெரியாது. இஷ்டத்திற்கு செய்து நிறைய சாப்பாடு வேஸ்ட் பண்ணுவேன்.ஆனா இப்பல்லாம் நிறைய குறிப்புகள் செய்து பார்க்கவே கொஞ்சமா செய்ய கத்துக்கிட்டேன்.ஃப்ரிட்ஜில் மீதி வைக்கிற அளவிற்கு செய்வது இல்லை.அளவா சமைச்சு அழகா மளிகை பில்லை குறைக்க வைப்பதற்கு நன்றி!

வனிதாவின் பட்டூரா,
சாந்தியின் பாலக் துவையல்.

indira

ஹாய் அதிரா,
நானும் வந்து டிரெயினைப் பிடிச்சிட்டேன். ரெண்டு பேருக்கு சமைப்பதில் என்ன சமைக்கிறதுன்னு போரா இருக்கும். ஆனா, எப்படியும் வனிதாவோட சமையல் செய்தே ஆகனும்னு இன்னிக்கு வெங்காய தக்காளி கார சட்னியும், கத்தரிக்காய் அரைச்ச குழம்பும் செய்தேன். ரெண்டுமே பிடிச்சிருந்தது. பின்னூட்டம் இன்னும் கொடுக்கலை. நாளைக்கு நான் ஊரில் இல்லை. நாளை மறுநாள் தான் இனி. வனிதா, ரொம்ப தலைவலியா இருக்கு. ஊருக்கு போகும் வேலையும் இருக்கு. பின்னூட்டம் நாளை மறுநாள் தருகிறேன். சரியா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்