சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

தாராளமா செல்வி... உங்க பின்னூட்டத்துகாக எவ்வளவு நாள் வேணும்னாலும் வனி காத்திருப்பா. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னுடைய இரவு சமையலில் வனிதாவின்,
அடை/காரதோசை
சேர்த்திடுங்க!
ரேணு,
ஒண்ணும் அவசரம் இல்லை. குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சதும் அரட்டை பக்கம் வாங்க!
முதலில், குடும்பம்! பிறகுதான் அரட்டை எல்லாம்!

அதிரா,ரேணுகா
நான் இதுவரை செய்தது வனிதாவின் தக்காளி சாதம்,
காரச்சட்னி,
ஆப்பிள் வாழைப்பழ ஸ்மூத்தி
சாந்தியின் கோதுமை தோசை

ரேணுகா வந்துட்டீங்களா, குழந்தைக்கு ஸ்கூல் ஆரம்பிச்சாச்சா?

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

இலா, ஆஸியா மிக்க நன்றி.

உத்தமி நாளைக்கு எப்படியும் வந்திடுவீங்கதானே? மிக்க நன்றி.

சாய்கீதா மிக்க நன்றி.

அரசி என்னிடமா கேட்கிறீங்க? bag இல்லாவிட்டாலும் தூள் போட்டுக் கொதிக்க வைக்கலாமே, ஆனால் வடிக்க வேண்டிவரும். மிக்க நன்றி.

ஆ ரேணுகா எக்கவுண்ட் ஓபின் பண்ணிட்டீங்களா?

ESMS செல்வி மிக்க நன்றி. பல்வலியா? கவனம் ஆரம்பமே சரியாக்கிடுங்கோ. எனக்கும் இன்று முழுக்க ஒருபல் வலிக்குது என்ன காரணமோ தெரியேல்லை, உடல்நிலை சரியில்லை என்று அதிகமாக மாத்திரைகள் போட்டேன் அதன் சூடோ தெரியாது.

ரேணுகா கரெக்ட்டா வந்திட்டீங்க. நன்றி.

என்ன நடந்தது இந்த வனிதாவிற்கு. எல்லோரும் வாங்கோ, மெல்லமாப் பிடிச்சு ஷெயாரில இருத்திவிடுங்கோ... ஆண்டவா இத் தொடர் முடியும்வரையாவது வனிதாக்கு நல்ல புத்தியைக் கொடுத்திடப்பா:).

ரேணுகா யாரை ராஜா என்கிறீங்கள்? எங்கட அறுசுவை முழுக்க தேடினேன் அப்படி யாரும் இல்லை:).
கண்பட்டுப்போச்சு ரேணுகா கண்பட்டுப்போச்சு... அதிரா பட்டம் வாங்கப்போறா என்று, கதை அடிபட்டதுமே நான் டவுண் ஆகிட்டேன். உண்மைதான் ஓரளவு நலமாகிவந்தேன், இன்று திரும்பவும் காச்சல் வந்துவிட்டது போலுள்ளது. அப்போ பட்டம் வாங்கினால் என் நிலைமை?:).

கவிஎஸ், நான் நல்லா பெரிதாக நலமில்லை. கேட்டதற்கு நன்றி. முடியாதென்று சொல்லிக்கொண்டே நிறையச் செய்தமாதிரி இருக்கு, மிக்க நன்றி.

சுகன்யா சரியா சொன்னீங்க வரணும் என்று இருந்தா வரும்// உண்மைதான் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம், அப்படித்தான், அவரவர்க்கும் அளந்ததுதான் அளவு. இருப்பினும் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாமோ முயற்சி திருவினையாக்கும். முயற்சி செய்வோம். சுகன்யா மிக்க நன்றி.

சாய்கீதா உண்மைதான், கொஞ்சமாக செய்தால் நிறையச் செய்யலாம், நானும் இனி அப்படி முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி.

இந்திரா மிக்க நன்றி. என்ன இப்பவெல்லாம் அமைதியாக வந்துபோறீங்கள்.

செல்வியக்கா இந்த ரெயினைப் பிடிச்சிட்டீங்கள் மிக்க நன்றி. இன்னும் நாளிருக்குதானே.

வனிதா, ஒண்ணும் அவசரமில்லை, ஆனால் எங்கள் ஷெயாரை விட்டிடவேணும், வேறு ஷெயாரில் காவலிருங்கோ:) நாங்கள் இனி தூசு தட்டி அடுத்தாளுக்கு குடுக்கவேணுமெல்லோ?:)

சாய்கீதா, கிருத்திகா மிக்க நன்றி.

ரேணுகா, வனிதா புதன், வியாழன் நான் வீட்டில் நிற்கமாட்டேன், அத்தோடு எனக்கு இப்போ முடியவில்லை, கஸ்டப்பட்டு பதில் போடுவதற்காக வந்தேன். எப்படியும் ... நிறையச் செய்திடுவேன் நம்பிக்கை இருக்கு, அதுவரை என்னை மன்னிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,
பழமொழியை தலைப்பிலேயே ஆரம்பிச்சுட்டீங்களே:-)) உங்க எண்ணம் போலவே உங்க தமிழும் ரொம்ப அழகு..

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

அதிரா அன்ட் ரேணு ரொம்ப முயற்சி செய்து சமைக்கிறேன் உங்க ஊக்கம் தான் எல்லாம். என் கணக்கில வனிதாவின் மின்ட் ரொட்டி சேர்த்துக்கோங்க. அப்பாடா.. இந்த முறை நானில்லை குழல்புட்டு :)))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதிரா , ரேணு அப்பாடா நானும் ஒருவழியா வந்திட்டேன். என் கணக்கு ஆரம்பம். வனிதா குறிப்பிலிருத்து க்ரீன் ஜிஞ்சர் டீ, வெஜ் மிளகு குருமா , மைக்ரோவேவ் பேஸன் லட்டு. என்ன வனிதா ஒரு ஓரமா பயந்து பம்மிகிட்டு இருக்கீங்களா? எல்லா குறிப்பும் நல்லா இருக்கு. தைரியமா வாங்க வெளியில்.

இன்று காலை எனது சமையலில் வனிதாவின்,
சேமியா உப்புமா ,
என் கணக்கில் சேர்த்திடுங்க!

அதிரா உடம்பை பார்த்துகோங்க ,உடம்பு சரியான பின்னாடி வந்து பதில் போடுங்க ஒன்னும் அவசரமில்லை,அதுதான் உங்களுக்கு பதில் ரேணுகா இருக்காங்களே (ரேணுகா எங்க இருக்கீங்க).

இன்னைக்கு காலைல இட்லி சாம்பார்(காய் சேர்த்து செய்வது).
மதியம் செட்டிநாடு முட்டைக்குழம்பு,பருப்பு ரசம்.

ஹாய், இன்றைய மதிய சமையலில்,
வனிதாவின்,
கத்திரிக்காய்,முருங்கைக்காய் காரக்குழம்பு,
முட்டைத்தொக்கு,
பருப்பு ரசம், சேர்த்திடுங்க!

மேலும் சில பதிவுகள்