சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

நீங்க சொல்வது சரிதான் அதிரா, கொடுக்கும் தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்.

என்னுடைய குறிப்பு...

வனிதாவின்;
கிராமத்து கோழி குழம்பு,
சிக்கன் பிரை,உப்புமா,தேங்காய் பால்,காளிஃபிளவர் முட்டை பொரியல்,செட்டிநாடு தக்காளி குழம்பு,உருளைக்கிழங்கு சிப்ஸ்,பருப்பு ரசம்,தக்காளி சாதம்,மசாலா வடை...

சாந்தியின்;
பீட்ரூட் டிலைட்..

இவை அனைத்தும் 3 நாட்கள் செய்த குறிப்புகள்.. அனைத்தும் நன்றாக இருந்தது...

நீங்க சொல்வது சரிதான் அதிரா, கொடுக்கும் தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்.
அதேபோல்தான் கடவுள் கொடுக்க நினைப்பதை, மனிதனால் தடுக்கமுடியாது! கடவுள் கொடுக்க மறுப்பதை, மனிதனால் கொடுக்க முடியாது!
என்ன பண்றது, வாழ்க்கையில் ஏதாவது சோதனை வந்தா இந்த மாதிரி பொன்மொழிகளை யோசிச்சு பார்த்து மனசை தேத்திக்க வேண்டியதுதான்!

அதிரா இன்னும் உடம்பு சரி ஆகலயா?! :( ஓய்வு எடுங்க. நம்ம ரேணு பாத்துக்குவாங்க. நான் வேணும்'னா முன்ன மாதிரி உங்களுக்காக பதிவு போடவா?! ;)

மலி... நல்லா இருக்கா?! அப்போ சரி... :) கொஞ்சம் நல்லா உட்கார்ந்துக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாய் கீதா நிச்சயம் ஸ்கூல் அனுப்பிவிட்டு ப்பிரியா இருப்பேன்,அவனுக்கு வீட்டில் சரியான போர்,என்னை உட்காராவே விடுவதில்லை,அவனுடனே விளையாட சொல்லுகிறான்,நானும் எவ்வளவு தான் விளையாட சமையத்தில் ஒரு டீ குடிக்க விடுவதில்லை,திட்டிவிட்டால் நான் கொஞ்சி சொல்றேன் வாம்மா என்று பாவமாக கூப்பிடுவான்,அதனாலையே வேறு எதையும் தொடுவதில்லை,முழுநேரமும் அவனோடு,அவங்க அப்பா வந்தவுடன் அவரிடம் அனுப்பிவிடுவேன்,இனி என்னை இருவரரும் தொந்தரவு செய்ய கூடாதுன்னு,ஆனாலும் நான் இருந்தாக வேண்டியுள்ளது,செவ்வாய் கிழமை மட்டும் அவர்களோடு விளையாட போக மாட்டேன்,அவர்கள் கூப்பிட்டு கூப்பிட்டு அழுத்து விடுவார்கள்,

வந்துவிட்டேன் கிருத்திகா,நலமா?பையனுக்கு ஏப்ரல் முதல் வாரம் தான் பள்ளி ஆரம்பம்,மார்ச் 30 போய் யூனி பார்ம் ,புக்ஸ் வாங்கனும்,ஸ்கூல் கிடைத்தவுடன் பெரும் நிம்மதியாக இருக்கு,எத்தனை ஸ்கூல் அலைந்தாச்சு,அவனுக்கும் ஸ்கூல் போகும் ஆசை வந்துவிட்டது,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இலா நலமா?எத்தனை சந்தோஷம் இந்த முறை பட்டம் இல்லையேன்று,நிச்சயம் அதிரா உங்களுக்கு ஏதேனும் பட்டம் யோசிப்பார்,கவலை படாதீங்கோ,என் சந்தேகத்தை தீர்க்கவே இல்லையே

மாலி வந்தாச்சா?வாங்க,வாங்க,இப்ப எல்லாம் டிரையினை முன்னாடி புடிச்சடறீங்க,சமத்து,

கவி நலமா நான் அபுதாபியில் இருக்கேன்,முறைக்காதீங்க,எப்படியும் நான் வந்திடுவேன்,தாராளமா அனுப்புங்க கவி உங்க பையனை நான் பார்த்துகிறேன் அவன் என்னிடம் இருப்பானா?

வாங்க பிரியா ,ரெம்ப நன்றி தொடர்ந்து இன்னும் முடிந்த வரை நிறையா குறிப்புகள் செய்யுங்கள்

வனிதா கவலைபடாதீங்க,உங்களுக்கு இந்த முறை நாங்க அந்த கஷ்டத்தை தர மாட்டோம்,இருந்தாலும் உங்க பதிவு ரெம்ப அருமை,எனக்கு சிரிப்பை சடக்க முடியல படித்தவுடன்,

சுகன்யா நீங்கள் இங்கு கலந்து கொண்டதே மகிழ்ச்சி,நீங்கள் பட்டம் நிச்சயம் ஒரு முறை வாங்குவீங்க,நீங்க சொல்றது சரி தான் என்ன காய் இருக்கோ அதை தான் நான் தேடுவேன்,குறிப்பு இருக்கான்னு,

செல்விக்கா ரெம்ப நாள் கழித்து டிரெயின் பயனம் வந்திருக்கீங்க,வாங்க வாங்க,இந்த முறை நிறையா சமைக்க வேணும் சரியா?

இந்திரா நல்மா?வாங்க,இதெல்லாம் பத்தாது,இன்னும் முடிந்தவரை செய்யூங்கள் நாட்கள் இருக்கிறதே

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா மீண்டும் காய்ச்சலா?மருத்துவரை பார்த்தீங்களா?நல்ல ரெஸ்ட் எடுங்க,கனினி முன்னால இப்ப உட்காந்தா ரெம்ப தலைவலியா தெரியும்,அதனால் இங்க நாங்க பார்த்து கொள்கிறோம் நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்து தேறி வாங்க,இந்த முறை பட்டம் வாங்க மாட்டீங்களா?யார் சொன்னா எல்லாருக்கும் நீங்க சொல்றதை நான் சொல்றேன் இன்னும் நாட்கள் இருக்கிறதே அதுகுள்ள அதிராவுக்கு உடல் நலமாகி பம்பரமாய் சுற்றி சமைப்பீங்க

சும்மா மாத்திரையை சாப்பிடாத மருத்துவரை பாருங்க,ஓ.கேவா

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அக்கா நேற்றைய சமையல் க்ரிஸ்பி பூரி - 2(vanitha) செய்தேன். நல்லா இருந்தது. நன்றி அக்காஸ்.

சாப்பர்,ட்ரெயின்,இதில் ஏதாவது ஒன்று பிடித்து வந்தாவது பதிவு போடலாம் என்றால் ஒன்றுமே மாட்டவில்லை. அதிராவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு 4 நாட்களாக அருசுவை ஒப்பன் ஆகவே இல்லை. வேறு யாருக்காவது இந்த ப்ராப்ளம் இருக்கா தெரியல்லை.இருந்தாலும் இன்று நானா அருசுவையா என்று ஒரு பிடி பிடித்து விட்டேன்.
இதோ இன்மேல் தான் எல்லாருக்கும் பதிவு போடவேண்டும். நல்ல விஷயங்கள் எல்லாம் பார்த்தேன். போய் பதிவு போட்டு இங்கு வருகிறேன்.
இப்போதைக்கு வனிதாவின் சுக்னி ஸ்பினாச் கூட்டில் தொடங்கியுள்ளேன். மீண்டும் வருகிறேன்.
அதிரா & ரேனு நன்றி. ஸ்னோவை க்ளின் செய்துவிட்டு வருகிறேன்.

அதிரா ரேணு என் கணக்கில வனிதாவின் கடாய் புளிசாதம் சேர்த்துக்கோங்க .

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்