சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்

ஹாய் அதிரா ... இப்ப எப்படி இருக்கிங்க?! நல்லா ரெஸ்ட் எடுங்க, அதுவரை நாங்க எல்லாம் சமத்தா சமைச்சி ரேணுகிட்ட சொல்லிடறோம். டேக் கேர் பர்ஸ்ட்!.

ரேணு, என் கணக்கில் கொஞ்சம் இதையும் சேருங்கப்பா!
நேற்று - ஈவீனிங் - வனியோட 'இஞ்ஜி க்ரீன் டீ'
இரவு டின்னருக்கு - சாந்தியின் 'கோதுமை தோசை' + வனியின் 'வெங்காய தக்காளி கார சட்னி'
இன்று லன்ச்-க்கு - வனியின் 'சௌ சௌ கூட்டு'.
எல்லாம் நன்றாக இருந்தது, அதிலேயும் கோதுமை தோசையும், கார சட்னியும் சும்மா செம காம்பினெஷன்!!. சூப்பர்! இனிமேல்தான் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் கொடுக்கவேண்டும்.

மீண்டும் நாளை வருகிறேன்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ரேணு நான் ரயில் பெட்டியிலிருந்து சீக்கிரம் இறங்க மாட்டேன், கவலைப் படாதீங்கோ. பெட்டியில் இடம் இல்லையென்றாலும் ஃபுட் போர்டில் தொங்கியபடி வந்துவிடுவேன்:)

அதிரா, நல்லா ரெஸ்ட் எடுங்க. ரேணுவும் வனிதாவும் பார்த்துப்பாங்க.

வனிதாவின் குறிப்பிலிருந்து செய்தது: ஸ்பினாச் கூட்டு, உருளை பொரியல், மைக்ரோவேவ் கிரில்ட் ஃபிஷ், இட்லி மிளகாய் பொடி

அதிரா & ரேணுகா, நலமா?
அதிரா ஒருவழியா வந்துட்டேன்ப்பா. வனிதாவின் குறிப்பிலிருந்து, சேமியா பிரியாணி, தக்காளி சாதம். (அதிரா,ரேணு இது பரமரகசியம், இம்மி பிசகாமல் நானும் இதேமாதிரித் தான் தக்காளி சாதம் செய்வேன். ஏதும் வித்தியாசமா இருக்குமோனு பார்த்தேன், எக்ஜாக்ட்லி சேமாத் இருந்தது லிஸ்டில் சேருமோ என்னவோ தெரியலை, எதுக்கும் சொல்லிப்போட்டன்.)
அதிரா காய்ச்சல் பரவாயில்லையா, வெரட்டிவிட்டுட்டீங்களா?..... டேக் கேர்.

அன்புடன்:-)......
உத்தமி:-)

vanitha's - கோழி வறுவல் அண்ட் கோழி மிளகு குருமா.

indira

ஹாய் அதிரா,ரேணுகா,
அதிரா உடம்பு இப்ப பரவாயில்லையா? நல்லா ரெஸ்ட் எடுங்க. நிறய தண்ணீர், ஜூஸ் குடிங்க.
ரேணுகா,
வனிதாவின்
கீரை சாதம்(குழந்தைகளுக்கு),
பிரட் புஜ்ஜியா
சப்பாத்தி தால்,
சாந்தியின்,
மஸ்ரூம் குருமா என் கணக்கில் போடுங்க

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

ஹாய் அதிரா,ரேணுகா,
அதிரா உடம்பு இப்ப பரவாயில்லையா? நல்லா ரெஸ்ட் எடுங்க. நிறய தண்ணீர், ஜூஸ் குடிங்க.
ரேணுகா,
வனிதாவின்
கீரை சாதம்(குழந்தைகளுக்கு),
பிரட் புஜ்ஜியா
சப்பாத்தி தால்,
சாந்தியின்,
மஸ்ரூம் குருமா என் கணக்கில் போடுங்க
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

வத்சலா, வாங்கோ நீங்கள் பதில் போடும்போது நானும் போட்டிருக்கிறேன். அதனால் உங்கள் பதிவைப் பார்க்கத் தவறிவிட்டேன்.

கிருத்திகா, இலா மிக்க நன்றி.

மாலி வந்தாச்சா மிக்க நன்றி.

சாய்கீதா மிக்க நன்றி.
நன்றி கவிஎஸ் இப்போ பறவாயில்லை. வின்ரர் நேரம் உடம்பில் அதிக கொழுப்புச் சத்து இருந்தால்தான் இங்கே தாக்குப் பிடிக்கலாம். அதற்காகத்தான் இந்த நேரம் அதிக கொழுப்புணவாக உண்பார்கள். நான் அவற்றைத் தவிர்க்க முயற்சிப்பதால் உடம்பு கொஞ்சம் பலவீனமாகிறதோ என்னவோ.
பிறியா மிக்க நன்றி.

சாய் கீதா என் பழமொழி உங்களுக்கு நன்றாகப் பிடித்துவிட்டதுபோலும். ஒரு கதை என் கணவர் அடிக்கடி சொல்வார். என் கணவரோடு வேலை பார்த்த ஒரு டொக்டர் அவர் கொஞ்சம் வயதானவர். அவர் ஊரில் இருந்தபோது ஒரு பிறைவேட் கிளினிக் வைத்திருந்தாராம், வயதான டொக்டர் என்றால் அனுபவம் அதிகம் என்றே நிறையப் பேர் வருவார்களெல்லோ, அதுவும் கைராசியும் நல்லதாக இருக்கவேண்டும். அந்த டொக்டருக்கு பேஷண்ட் அதிகமாக வருவார்களாம். அவருக்கு பக்கத்திலே, ஒரு புதிதாக வெளிவந்த டொக்டர் கிளினிக்கை ஆரம்பித்தாராம், அவரிடம் பெரிதாக ஆட்கள் போவதில்லையாம், அதனால் அந்த புது டொக்டருக்கு இந்த வயதான டொக்டரோடு கொஞ்சம் பொறாமையாம். இதனால் சிறிய சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டதுபோலும். அப்போ இந்த வயதான டொக்டருக்கு சரியான மனவருத்தம். அவர் இங்கு வந்தபோது என் கணவரிடம் இக் கதையைக் கூறி, சொன்னாராம், இஞ்ச பாருங்கோ "உங்களுக்கு என்ன வரவேண்டுமோ, அது யார் தடுத்தாலும் வந்தே தீரும், இவ்வளவும்தான் உங்களுக்கு என்றால் அவ்வளவும்தான் வரும், ஆனால் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டோ, கோபப்படுவதாலோ , அளவை மீறி உங்களுக்கு எதுவும் வரப்போவதில்லை" இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை என்று சொன்னாராம். இந்த வசனத்தை என் கணவர் அடிக்கடி சொல்லிக்கொள்வார். இருப்பதை பெரிதாக நினைத்து சந்தோஷப்பட்டால் அதைவிட சந்தோஷம் வேறில்லை.

வனிதா இப்போ பறவாயில்லை இனிமேல் நிறையச் சமைக்கப்போகிறேன் பாருங்கள்.

ரேணுகா நல்லவேளை நேற்று நீங்கள் வந்திருக்கிறீங்கள். நான் யோசித்துக்கொண்டிருந்தேன் என்ன நடந்ததோ என்று, அதனாலேயே இன்று வேளைக்கே வந்தேன்.

அரசி மிக்க நன்றி. விஜிசத்யா.. வந்தாச்சோ.. ஸ்னோவை கிளீன் பண்ணுவது கவனம், அது செய்யப்போய்த்தான் நானும் வருத்தம் தேடிக்கொண்டேன்.

இலா, ஸ்ரீ மிக்க நன்றி. ஸ்ரீ எனக்கு தெரியும் நான் வராவிட்டாலும் நீங்கள் எல்லாரும் சமத்தா சமைப்பீங்கள் என்று, இருந்தாலும் நானும் வந்தால் உற்சாகம்தானே. மிக்க நன்றி.

வின்னி மிக்க நன்றி. கவனம் புட்போலில் தொங்கி விழுந்திட்டால், பிறகெப்படி அடுத்த தலைப்பில் பங்குகொள்வது. பயப்படவேண்டாம். இடம் தருவோம். இது சொல்லிச் செய்த ரெயினெல்லோ:).

உத்தமி வாங்கோ மிக்க நன்றி.. விரட்டப்பார்க்கிறேன், அது முறைக்கிறது.
இந்திரா, கிருத்திகா மிக்க நன்றி.
நேரமாகிறது, ஸ்கூலுக்கு வெளிக்கிடுத்த வேணும் பின்னர் வருகிறேன். அனைவருக்கும் நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா கவலைய விடுங்க,அதுதான் உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்க மாட்டேங்குதுன்னு தெரிஞ்சு தானா குளிர் கொஞ்ச கொஞ்சமா போய்ட்டு இருக்கு:-). அதிரா நல்லா சத்தானதா குளிரை தாங்கற மாதிரி சாப்பிடுங்கோ உடம்பு ஏறினா ஏறிட்டு போகுது அதை பத்தியெலாம் கவலை படக்கூடாது,அப்புறம் வெயில் காலத்துல வெரும் ஜூஸா குடிச்சு உடம்பை குறச்சுக்கோங்க:-),சரியா ஹி ஹி ஹி.

ரேணுகா சின்ன பசங்க கூட இருந்தா அவன் எங்க வேணுணாலும் இருப்பான்.ஆனா ஒண்ணு அவனுக்கு லேடீஸ்னா புடிக்காது(என்னை மட்டும் ஏனோ சகிச்சுகிட்டு இருக்கான்). ஆண்கள்னா உடனே போய்டுவான்.
அனுப்பவெல்லாம் முடியாதுமா,எனக்கு சமைக்கர வேலை இருக்கு(அப்புறம் எப்படி சமையல் ராணி பட்டம் வாங்கறது)நீங்க வேணும்னா வந்து கூட்டிட்டு போங்க:-).
சரி சொல்ல வந்த மேட்டரை சொல்றேன்,இன்னைக்கு வனிதாவோட பொடிமாஸ்,கத்தரிக்காய்,முருங்கைகாய் காரக்குழம்பு(அம்மா வனிதா கொஞ்சம் சுருக்கி வெச்சிருக்ககூடாதா இதை டைப் அடிக்கறதுக்குள்ள என் பையனே எழுந்திருச்சுடுவான் போலிருக்கு:-)) காரசட்னி.

இன்றைய எனது சமையலில், வனிதாவின்,
மிஸ்ஸி ரொட்டி, வெஜ் சால்னா,
கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
உப்புருண்டை
சேர்த்திடுங்க!

சாந்தியின் பேக்ட் வெஜிடபிள்கறி செய்து பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்