பூண்டு ஊறுகாய்

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

உரித்த பூண்டு -1கப்
திக்கான புளிகரைசல் -1/2கப்
காய்ந்தமிளகாய் -4
மிளகாய்தூள் -4ஸ்பூன்
கறிவேப்பிலை -1கைப்பிடி அளவு
வெந்தயபொடி -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு -1ஸ்பூன்
சன்பிளவர் ஆயில்-1/2கப்


 

பூண்டை தட்டிவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன், காய்ந்தமிளகாயை கிள்ளி போட்டு,கறிவேப்பிலை போடவும்.
பூண்டை சேர்த்து நன்றாக வேகவிடவும்.பூண்டு வெந்தவுடன்,புளிக்கரைசலை ஊற்றி மிளகாய்தூள்,வெந்தயபொடி போட்டு நன்றாக வதக்கவும்.
உப்பு சேர்க்கவும்.கலவை நன்றாக கொதித்து தொக்குபதம் வந்தவுடன் இறக்கவும்.
நன்றாக ஆறவைத்து ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி உங்களுடைய குறிப்பில் இருந்த பூண்டு ஊறுகாய் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

பின்னூட்டம் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி துஷ்யந்தி.

சவுதி செல்வி

சவுதி செல்வி