சேனைகிழங்கு ஊறுகாய்

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேனைகிழங்கு -1கப்
புளிகரைசல் -1/2கப்
காய்ந்தமிளகாய் -4
மிளகாய்தூள் -4ஸ்பூன்
கறிவேப்பிலை -1கைப்பிடி
வெந்தயபொடி -1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணை -1/2கப்
கடுகு -1ஸ்பூன்


 

சேனைகிழங்கை பொடியாக நறுக்கி உடையாமல் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன், கிள்ளிய மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வெந்த கிழங்கை போடவும்.
அதனுடன் புளிகரைசலை ஊற்றி,மிளகாய்தூள்,வெந்தயபொடி,உப்பு போட்டு வேகவிடவும்.புளித்தண்ணீர் வற்றி தொக்குபதம் வந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்