ப்ரெட் மசால்

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உப்பு ப்ரெட் துண்டு - 5 (துண்டுகளாக்கி கொள்ளவும்)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கீற்று
உப்பு - 1 சிட்டிகை


 

வாணலியில் வெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு சிட்டிகை உப்பு போட்டு கிண்டிவிட்டு மிளகாய்த்தூள் போட்டு மீண்டும் வதக்கவும்.
மிளகாய்த்தூள் வாசம் போனதும் ப்ரெட் துண்டுகளை போட்டு மெதுவாக கிளறி விடவும்.
இறக்கும் முன்பு மீண்டும் சிறிது வெண்ணெய் விட்டு கொத்தமல்லித்தழைத் தூவவும்.
சூடாக இருக்கும் போதே பரிமாறவும் ஆறிவிட்டால் நன்றாக இருக்காது.


மேலும் சில குறிப்புகள்