சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல்

தேதி: February 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

சோயா பீன்ஸ் - 1 கப்
கேரட் - 1/2 கப் (மிகப்பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 கப் (மிகப்பொடியாக நறுக்கியது) (எந்த கலர் என்றாலும் சரி)
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நன்றாக கழுவி குக்கரில் உப்பு போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குடைமிளகாய், கேரட் போட்டு வதக்கி, பின்னர் வேகவைத்துள்ள சோயா பீன்ஸ் சேர்க்கவும்.
பின்னர் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்