இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

Thalika, do not worry I had the same problem. I went to the bath room very often. My doctor told me that our bladder is under very much pressure when we get pregnant. How ever, this will go away in 2 or 3 months. I had severe back pain too. The solution is take a warm bath. I opened the shower and stood under it for 5 minutes. Wow I was like heaven. Try it and you will feel the same thing.
Sorry for typing in English. arusuvai is very slow now a days.
Congratulations.
vany

நானும் இதே வழியை அனுபாவிதேன் முதுகில் யாரையாவது சுடு தண்ணீர் உத்தடம் குடுக்க சொல்லுங்க ரொம்ப சுகமா இருக்கும் இப்ப உங்களுக்கு எத்தனாவது மாசம்

ஹலோ தாளிகா
வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். நீங்கள் கூறியே இரண்டு தொந்தருவும் என்னக்கும் இருந்தது. மெகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் என் பையனை கண்ட உடன் போயே போச்சே போயிந்தே இட்ஸ் கோனே. அதனால் கவலைபட வேண்டாம்.

yaadhum oore yavarum kelir

yaadhum oore yavarum kelir

//நான் வெஜ் என்ற ஒன்றை கண்ணால் காண சஹிக்கவில்லை.இத்தனை காலம் இதையா சாப்பிட்டோம் என்பது போல் உள்ளது.//

பேசாம அடுத்த ப்ஃளைட் பிடிச்சு சென்னைக்கு வந்துடுங்க. நம்ப மர்ழிக்கு செய்து கொடுத்ததுபோல் புளிக்காய்ச்சல், கறிவேப்பிலை குழம்பு எல்லாம் தினமும் செய்து கொடுக்கிறேன். ம் ஜல்தி ஜல்தி.

தளிகா, எங்கம்மா வெள்ளைத்துணி வாங்கி சதுரமாக வெட்டி, அதை முக்கோணமாக மடித்து நாடாவும், லூப்பும் வைத்து அழகாக நாப்கின் கையாலேயே தைத்து வெச்சுடுவாங்க. நீங்கள் வீட்டில் இருக்கும்போது தயவு செய்து டயப்பர் உபயோகிக்காதீங்க. வெளியேபோகும்போது மட்டும் டயப்பர் உபயோகியுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அட வெஜ் என்றதும் வந்தது யாரு நம்ம அருசுவையின் வெஜ் ராணி ஜெ ஜெ ஜெ மாமியா?
நலமா?
பையன் பாஸ் பண்ணியாச்சு டீரீட் எல்லாம் கிடையாதா? சும்மா தான் கேட்டேன்.
ஜலீலா

Jaleelakamal

இரண்டாவது குழந்தை

சீக்கிரமாகவே ஒன்னறை அல்லது இரண்டு வயதிற்குள் பெற்று கொள்வது நல்லது.
சிசேரியன் உள்ளவர்களுக்கு டாகடர்கள் முன்று வருட இடைவெளி சொல்வார்கள்.

பக்கத்தில் பக்கத்தில் பெற்று கொண்டால் எல்லா சுகமான கழ்டஙக்ளையும் சிரமங்களையும் ஒன்றாகவே பட்டுவிடலாம்.உடம்புக்கு ஏதாவது வந்தாலும் ஒன்றாகவே வந்து முடிந்துவிடும்.

அப்பரம் வளர்ந்து ஸ்கூல் போக ஆரம்பித்ததும் பிரீ ஆகிவிடலாம்.

முதல் குழந்தையுடன் உட்கார்ந்து நல்ல சொல்லி கொடுத்து படிக்க வைப்போம், பக்கத்தில் உள்ள பிள்ளைக்கும் அப்படியே சேர்ந்து படிக்கும்.

என்ன தான் இருந்தாலும் முத்தவர்கலோ, இளைவர்களோ அண்ணனுக்கு என்ன செய்கிறார்கள், தம்பிக்கு என்ன செய்கிறார்கள் என்று நம்மை உற்று நோக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.
சமாமாக கவனிக்கவும்,
இல்லை என்றால் போட்டி பொறாமை அதிகரிக்கும்.
பெரியவன் தனே விட்டு கொடுப்பான், என்று நினைக்கவேணாம் , சிறியவன் தானே அவனுக்கு என்ன தெரிய போகுது என்ரு நினைக்க வேணாம்,
ஆகையால் எரிச்சல் படாமல், கோப படாமல்,
பெரிய பிள்ளையிடம் பேசினால் சிறிவர்கலுக்கு கோபம் வரும், சின்னவர்களிடம் பேசினால் பெரியவர்களுக்கு கோபம் வரும்,
ஆகையால் அதிக இடைவெளி இல்லாமல் உடனுக்குடன் பெற்று கொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ரூபி துணி நாப்கின் நம்ம ஊரில் துணி கடைகளில் கிடைக்கும் கேட்டு பாருங்க.எங்க அக்காவுக்கு குழந்தை பிறந்தப்ப அப்படி வாங்கி தான் உபயோகித்தார்கள்
அன்புடன் பிரதீபா

தளிக்கா டயப்பருக்கு பதில் துணி இங்கு லூலூ வில் இருக்கு அதை போட்டு ஒரு செட்டில் டஜன் இருக்கும்.ரொம்ப வசதியா இருக்கும் குழந்தைகளுக்கு. வெளியில் போகும் போது, தூங்கும் போது மட்டும் பேம்பர் போட்டு விடலாம்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் வனி,பத்மா&சுகி..நன்றி மீண்டும்..இப ரெண்டு நாளா முதுகு வலி காணோம்.இப்போ 3 மாதம்.
ஜெ எனக்கு இல்லாமலே இது போன்ற வெஜ் ஐடங்கள் ரொம்ப விருப்பம் இப்ப சுத்த சைவம்.
புளி சாதம் தான் இப்ப அடிக்கடி செய்து சாப்பிடும் ஒன்று.இருங்க வந்துடறேன் வீட்டுக்கு .அடுத்த ஃப்லைட் மேல வருதான்னு பாத்துகிட்டே இருங்க.
டயபருக்கு நிறைய பேர் ஆட்சேபனையா அப்ப சரி துணியே தான்..என் மகளுக்கு முழுக்க முழுக்க துணி தான்..வெளியே போகும்போது தான் ரெடிமேட் டயபர்.
ஆனா எல்லோரும் செய்ர மாதிரி லிட்டர் கணக்கா டயபர் நனையும் வரை விடவே மாட்டேன் அப்பப்ப அப்பப்ப மாத்திடுவேன்.
பைய்யன் பாஸ் பன்னின செய்தி கேட்டு மகிழ்ச்சி இனி அடுத்து உத்தியோகஸ்தர் தான்.
ஜலீலக்கா நீங்கள் எழுதினது மகிழ்ச்சி..ரொம்ப கவனமா தான் இருக்க போகிறேன்..எனக்கு ரொம்ப சந்தோஷம்
ப்ரதீபா அப்படியா..நான் ஊரில் ஒரு பேபி ஷாப்பில் வாங்கினேன் பிடிக்கவே இல்லை..குழந்தையை விட அது பெரிசா இருந்ததா பாக்கவே அசிங்கமா இருக்கும்..அப்றம் தான் இங்க இருந்துவாங்கின துணி கட்டினேன் நல்ல சுத்த காட்டன் துணி..நன்றி ப்ரதீபா
அன்பு மனோஹரி அக்கா&ஜலீலக்கா அப்ப இனி துணி தான் உபயோகிப்பேன் எல்லாம் நல்லபடி கடவுள் அருளால் நடந்தால்..நான் கெ எம் இல் வாங்கினேன் முன்னே..வெள்ளை வெளேர் பருத்தி துணி..
அதைதான் குளிக்க வச்சு துடைக்க எடுப்பேன்.நன்றி மீண்டும்

சரியான அசிடிடியா இருக்கு..இதான் கேஸ்ட்ரபிலா என்னவோ தெரியலை.
சாப்பிட்டது வயிற்றில் இறங்காமல் தொண்டையில் நிற்பது போல் உள்ளது..வயிறு உப்பி விடுகிறது.சில சமயம் சாப்பிட்டது வெளியே வரும்போல உள்ளது..தொண்டையெல்லாம் எரிச்சல் போல...இது நாள் ஆக ஆக அதிகம்..
ஜீரக தண்ணீர் குடித்தால் கொஞ்சம் பரவாயில்லை..இப்பிப்ப அதுவும் சரியா கேட்பதில்லை..இருந்தாலும் 250 கிராம் ஜீரகத்தை 4 நாளில் தீர்க்கிறேன் வேற வழியில்லாமல்..இப்படி அளவுக்கு மீறி குடிக்கலாமா?
இந்த அசிடிடிக்கு ஒரு வழி என்ன?சரியான தூக்கமா வருது..மணி 3 ஆகிடுச்சு இதோட நாலாவது முறை எழுந்து வருகிறேன் தூங்க முடியாமல் படுத்தால் சாப்பாடு வெளியே வருவது போல்..உதவுங்கள்

மேலும் சில பதிவுகள்