இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

தளிகா,

இந்த சமயத்தில் இப்படித்தான் எல்லாம் ஏறுக்குமாறா இருக்கும். உங்களுக்குத் தெரியாதா என்ன? தூக்கம் வர ஒரு எளிய வழி: நிறைய புத்தகங்களும், ஒரு சிறிய டேபிள் லாம்பும் வாங்குங்க. எப்பல்லாம் தூக்கம் வரலையோ அப்பல்லாம் தூக்கம் வரலைன்னு கவலப்படாம புக் வாசிங்க படுத்தபடியே. அப்படியே தூங்கிருவீங்க.

சீரகம் குளிர்ச்சி என்று தெரியும். ஆனால் பாதிப்பு வருமான்னு தெரியலை. மலயாளிகள் சீரகத்தண்ணீர்தானே ரெகுலராகக் குடிப்பார்கள். பாதிப்பு இருக்கும்னா குடிக்கமாட்டாங்களே?

லெமன் வாட்டர் குடிக்கச் சொல்லி சுரேஜினிக்கு சிலர் அடவைஸ் சொல்லி அவங்களும் நல்லா இருக்குன்னு எழுதியதைப் படிச்சேன்.

அதுசரி, தூக்கக்கலக்கத்தில எழுதினீங்களா? தூக்கம் வருது ... தூங்க முடியலன்னு ... வாசிச்சு பாருங்க...
//சரியான தூக்கமா வருது..மணி 3 ஆகிடுச்சு இதோட நாலாவது முறை எழுந்து வருகிறேன் தூங்க முடியாமல் ..//

இல்லை கரெக்டா தான் எழுதியிருக்கேன்..அதாவது தூக்கம் வந்து கண் மூடுது அதோட ஒரு 5 நிமிஷத்தில் தொண்டையில் சாப்பாடு வெளியே வர்ர மாதிரி இருக்கும்.அதோட திரும்ப எழுவேன்..நேத்து பகலில் ஒரு குட்டி தூக்கம் கூட போடல இரவு நல்லா தூங்கலாமேன்னு..இருந்தும் ராத்திரி 3 மணிவரை எழுந்து எழுந்து வந்து கடசியில ஒரு வழியா போய் படுத்தேன்.அதுக்குள்ள லிட்டர் கணக்கில் ஜீரக தண்ணி குடிச்சாச்சு.
அதெல்லாம் பன்னியாச்சு..நிறைய புக் படிப்பேன் சாதாரணமா தூங்கிடுவேன் இது இந்த அசிடிடினால தூக்கம்கெடுது...யாராவது சொல்லும்போது நான் ஹ்ம்ம் என்ன பெரிய அசிடிடின்னு சொல்லியிருக்கேன் அனுபவிக்கிரப்ப தான் புரியுது கஷ்டம்:-D
ஆமாம் ஜீரகதண்ணி தான் குடிப்பாங்க ஆனால் அது ஒரு 3 ஸ்பூன் போட்டு ஒரு குடும்பத்துக்கே காய்ச்சி வெப்பாங்க..இது நான் அப்படியில்ல..ஒவ்வொரு கபுக்கும் 2 ஸ்பூனல்லவா போட்டு திக்கா காச்சுவேன் அப்ப தான் கொஞ்சம் அடங்குது அசிடிடி.அதான் அளவுக்கு மிஞ்சுறேனோ ந்னு ஒரு பயம்.அசிடிடிக்கு வேறெதும் வீட்டு குறிப்பு தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்.

நல்லபடியாக குழந்தை பெற நல்ல தைரியமாகவும், நல்லதை மட்டும் மனதில் எப்பவும் நினத்துகொண்டும்.
உடம்பை நல்ல கவனித்து கொண்டாலே போதும்.
அடுத்து இந்த இடைவெளி பர்பெக்ட். ஒரு குழந்தைக்கும் 2 வது குழந்தைக்கும் அட்லீஸ்ட் 3 வருடம் இடைவெளி இருப்பது
நல்லது. ஏனென்றால் முதலில் நம்ம உடம்பு நல்ல தாங்கும் சக்தி கிடைக்கும். அடுத்தது. ஒன்று முடிந்து 2 வருடத்திற்க்குள்
முதல் குழந்தையை அட்லிஸ்ட் சாப்பாடு, 1 &2 எல்லாம் தானே போய் பழக மற்றும் எல்லா பழக்கங்களும் ஸ்லோவா
கற்று கொள்ளும்.

அடுத்தது நிங்க கேட்டிருந்ததது உங்களுக்கு எங்கு வசதியாக தோன்றுகிறதோ அங்கே டெலிவரிக்கு நல்லது.
நம்ம இந்தியாவில் இப்ப எல்லா வசதிகளும் இருக்கு, இருந்தாலும் நாம் எல்லாம் வெளிநாட்டில் இருந்து
பழகிவிட்டதால் முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், நம்ம இந்தியர்கள் செய்யும் எல்லாவகையான கைவத்தியங்கள்
பார்த்தால் கண்டிப்பா அதில் ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு எது ஒத்துபோகுகிறதோ அதை தொடருங்கள்.

நல்ல சத்தான உணவுகள சாப்பிடவும். சிலருக்கு ஒரே டைம்மில் சாப்பிட பிடிக்காது,
கொஞ்சம் இடைவெளி விட்டு சப்ப்பிடவும். தனியாக சாப்பிடா பிடிக்கவில்லை என்றால்
பக்கத்து தோழிகள், அல்லது முடிந்தவரை ஏதாவது மனதுக்கு பிடித்த பாட்டு, சினிமா
போன்றவற்றை பார்த்து கொண்டும் சாப்பிடலாம். நேரத்திற்க்கு சரியாக சாப்பிடவும்.
6 வது மாத்ததில் இருந்து நிறைய்ய பூன்டு உணவில் சேர்க்கவும். காஸ் ப்ராப்ளாம்
கண்டிப்பா மாறும்.
துவரம் பருப்பு காஸ்டிக், காலிப்ளவ்ர், கிழங்கு வகைகள், நிறய்ய மசாலா இவற்றையெல்லாம்
குறைத்து கொள்ளவும். அசிட்டிக்கிற்க்கு மசாலா கூட ஒரு காரனம்.

என் டெலிவரி அனுபவத்தை இங்கு சொல்லவேண்டும் என்றால் ஒரு பெரிய கதை.
இருந்தாலும் . போரடிக்கமால் கொஞ்சமா சொல்கிறேன்.

எனக்கு முதல் குழந்தை ப்ரகன்ஸிப்ப எனக்கு வெள்ளை சாதத்தை கண்டால் பிடிக்காது.
அதுவும் குக்கர் திறந்தால் என்னால் நிற்க்க கூட முடியாது அந்தளாவுக்கு என்க்கு வாமிட்
சென்ஷேனன் சாப்பிடவே பிட்க்காது.
என் ஹஸ் தான் தினமும் வேலக்கு போகும் முன் சாதம் வடித்து ஒரோ ஒரோ நாள்
ஒரோ கலந்த சாததம் செய்து குடுப்பார்.
எனக்கு ஊறுகாய் என்றால் ரொம்ப பிடிக்கும் ஆனால் அசிட்டி ப்ராப்ளம் இருந்ததினால்
சாப்பிடமால் இருந்த்தேன். அதே மாதிரி காப்பி கண்டிப்பா வேணும் இப்பவும் எப்பவும்
காப்பி இல்லாமல் இருக்க முடியாது, இப்பவும் சில சமயம் ப்ரேக்பாஸ்ட் கூட் ஸ்கிப்
அயிடும் அதற்க்கு பதில் 2 தடவை காப்பி தான். இங்கு டாக்டர் கொஞ்சமா காப்பி
குடிக்கலாம் என்று சொன்னதினால் நான் கொஞ்சமா குடிப்பேன்.
தளிகா ஆசிட்டிக்கு இங்கு டாக்டர்கள் சொல்வது ஜிஞ்சர் ஆல் என்று ஒன்று கிடைக்க்கும்
அது சாப்பிட சொல்வார்கள்.
கத்தரிக்காய் சாப்பிடுவதை கொஞ்சம் நிறுத்திகோங்க. வயிரு அரிப்பை கூட குறைக்க
வாய்ப்பு இருக்கு.
கிழங்கு வகைகள் குறயுங்க காஸ் ட்ரபில் குறையும்.

நிறய்யவே எழுதிட்டென்.
என் முதல் குழந்தைப்ப எனக்கு எல்லாமே நார்மலாக தான் இருந்தது,
காலையில் 7 மனிக்கு ஹாஸ்பிட்டலுக்கு போனது ராத்திரி 11.30க்கு தான் குழந்தை
பிறந்தது. பெயின் பெயின்.. தாங்க முடியல்ல. எப்பிட்யூரல் எடுக்காமல் இருந்து
நான் எவ்வள்வோ ட்ரை செய்தும் கடைசியில் வேறு வழியில்லாமல் எடுக்க வேண்டி
ஆயிடுச்சு. பிறகு எல்லாம் ரொட்டின் ஸ்டிச்சஸ்... எல்லாம்.

எல்லாவற்றயும் விட ப்ரகன்ஸியில் கடைசி செமஸ்டர் ரொம்ப மோசமானது
எப்படா டெலிவரி ஆகும் என்று வந்துவிட்டது. அந்தமாதிரி
எனக்கு பேக் பெயின் என்னால் நிற்க முடியாது உட்கார முடியாது ரொம்ப கஷ்டப்ட்டுட்டேன்.
டாக்டர் என்னை வாக் வாக் என்று சொல்லி வாக் தான் செய்தேன்.
எனக்கு 6 மாததில் இருந்து கொட்டாவி விட்டால் என்னால் முழுதும் வாய் திற்ந்து
விட முடியாமல் ரொம்ப கஷ்டப்ட்டேன். டாக்டரிடம் கேட்டால் குழந்த்தையின்
தலை வந்து இடிக்கிறது அது தான் டெலிவரிக்கு பிறகு சரியாகிடும் என்று சொல்லியே
என்னை கடைசிவரை இழுத்தடித்தார்கள்.
எனக்கு வந்தது பான் கிர்யாடிக்க் டைடஸ் வந்து 1 மாதம் ஹாஸ்பிட்டலி தான் இருந்தேன்.
குழந்தையை கூட தினமும் பார்க்காமல் 3 நாட்களுக்கு ஒரு முறை நான் பார்த்தேன்
ஏங்கியது இன்றும் நினைத்தாலும் மறக்க முடியல்லை.
இதை எல்லாம் பார்த்து தான் நாங்கு முடிவு செய்தோம் இனியொரு குழந்தக்கு
வாய்ப்ப்பே இல்லை என்று.6 வருட இடைவெளிக்கு பிறகு கன்சிவ் ஆனேன்.
அதுவும் எல்லாரும் என் குடும்பத்தினரும் ஒரே குழந்தை என்றால் பிற்காலத்தில்
அது ஏங்கும் நமக்கு ஒரு தம்பி, தங்கச்சி இருக்க கூடாத என்று சொல்லி சொல்லியே
எல்லாரும் என்னை 2 வது குழந்தை அவசியம் என்று சொல்லி 2 வது குழந்தை ப்ரகன்ஸியிலும்
எந்த கஷ்டமில்லாமல் டெலிவரை ஆக வேண்டும் என்று ரொம்ப வேண்டினேன்.
டெலிவரை கடைசிவரை எல்லாம் நார்மல் என்று சொல்லி ட்யூ டேட் வர
பெயின் வராமல் பிறகு லைட்டா பெயின் வந்தவுடன் ஹாஸ்பிட்டலில் அட்மிட்
காலையில் 7 மனிக்கு சென்று இரவு 11.55 க்கு சிசேரியன். என் பெற்றோர்களுக்கு
விசா கிடைக்கவில்லை, மாமியாருக்கும் கிடையாது. முதல் குழ்ந்தையோடு+ ஹஸ்
எல்லாவற்றையும் எனக்கு செய்தார். என் தோழிகள் எல்லாரும் தினமும் ஒரோ ஒருத்தர்
சாப்படு செய்து கொண்டுவந்து கொடுப்பார்கள். என் ஹஸ் எனக்கு மட்டும் வீட்டில்
சமைத்து குடுத்தார். ரொம்பவே கஷ்டப்ப்ட்டு சமாளித்தோம்.
இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம்.

நான் ப்ரக்ன்ஸியானவுடனேயே என் முதல் பென்னிற்க்கு எல்லாமே புரிய வைத்து அவளே அவளின் தேவையாவற்றை செய்துகொள்ள கற்று கொடுத்தேன். அதனால் எனக்கு ரொம்ப எளிதாக இருந்த்தது. கொஞ்சம்மா சின்ன வேலைகளை அப்பாகிட்டே கொடுத்து அப்பாகூட இருக்குமாரு பழக்க படுத்திடுங்க தளி.

உங்க டெலிவரி ஸ்டோரி படிச்சேன்பா.அதென்னமோ உண்மை.முதலில் நமக்கு ஒன்னு ரொம்ப படுத்திட்டு போச்சுன்னா.யப்பா இனிமேல் நம்மால் முடியாதுன்னு நினைப்போம்.அப்புறம் மனசு கேக்காம மறுபடியும் ட்ரை செய்ய நினைப்போம்.மனிதனின் மன்சே அப்படி தான் போலும்.

முதல் டெலிவரி இந்தியாவில் இருந்தீங்களா?ஏன்னா இரண்டாவது டெலிவரிக்கு அம்மா பக்கத்தில் இல்லைஎன்று சொன்னீங்க அதான் கேட்டேன்.2வது டெலிவரி எந்த ஊரில் பார்த்தீங்க.ஏன்னா சில ஊரில் சில மாதிரி இருக்கு.இங்க துபாயில் பார்த்தீங்கன்னா,எவ்வளவு நேரம் என்றாலும் நார்மலுக்கே முயற்சி செய்வாங்க.முடியாவிட்டால் தான் சிசேரியன் செய்யறாங்க.

நம்ம இந்தியாவில் சிசேரியேன் எந்த கிழமையில் செய்யலாம்னு முடிவே எடுத்துடுறாங்க.அதுக்காக நான் ஒட்டுமொத்தமா குறை சொல்லலை.அதிலும் அரசு ஆஸ்பத்திரிகளில் நார்மல் டெலிவரி அதிகமா செய்றாங்க(ஆனால் நர்சுகள் திட்டுவதை கேள்விப்பட்டுள்ளேன்,இந்த வலிக்கு இப்படியா கத்துவீங்கன்னு).தனியார் அஸ்பத்திரிகளில் நான் பார்த்தவரை சிசேரியன் தான்.எப்படியோ உங்க அனுபவத்தை பகிர்ந்ததுக்கு நன்றிபா.

விஜி இரண்டாவது சிசேரியன் ஆகிவிட்டதில் எனக்கும் வருத்தம்.
இருந்தாலும் சிலது எனக்கு சரியாக புரியவில்லை..அதாவது எதனால் அப்படி வாயை திறந்து கொட்டவை கூட விட முடியவில்லை என்றீர்கள்?
பிறகு என்னவோ பேர் எழுதிநீங்களே ஆங்கில பெயரில் அதனை ஆங்கிலத்திலேயே எழுத முடியுமா..ப்ரவுஸ் seidhu பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
" பான் கிர்யாடிக்க் டைடஸ் "அதை ஆங்கிலத்தில் எழுதுங்களேன்.
பிறகு ஏன் 3 நாள் குழந்தையை பார்க்க விடவில்லை அதனை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
எனக்காக இவ்வளவு நேரம் ஒதுக்கி எழுதினது கண்டு மகிழ்ச்சி..என்ன அனுபத்திருந்தாலும் ரெண்டு குட்டிகளும் நல்ல சுட்டிகளாகிவிட்டார்கள்..சந்தோஷம் தான்
பின் இன்னொரு சந்தேகம் எதனால் இரண்டாவது சிசேரியன் ஆனது..அதுவும் தெரிந்து கொள்ள ஆவல்...அவர்கள் முயற்சித்தும் பிரசவமாகாமல் அப்படி செய்தார்களா அல்லது குழந்தையின் இதயதுடிப்பு குறைவது அல்லது கார்ட் சுற்றிக் கொள்வது போன்ற எதுவாவது ப்ராப்லம் இருந்ததா.
எனக்கு முதல் குழந்தை நல்லபடியாக பிஅந்தது கர்பகாலத்திலும் பெரியதாக ப்ராப்லம் இல்லை..இதுவும் ஏறக் குறைய அப்படி தான் இருக்குமென்று நினைக்கிறேன்..என்ன அசிடிடி ப்ராப்லம் இருந்தாலும் சிலர் படும் கஷ்டத்திற்கு எனக்கு எதுவுமே இல்லை என்று சமாதானப்படுவேன்.
எல்லோரும் மாறி மாறி சாப்பாடும் தந்து கணவர் இருவரையும் பார்த்துக் கொண்டார் என்றீர்களே அது தான் கேட்க சந்தோஷமாக இருக்கிறது..மிகப்பெரும் பாகியம் தான்

விஜி சொல்லி இருப்பது pancreatitis என நினைக்கிறேன்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹலோ தாளிகா அக்கா,
எப்படியிருக்கீங்க? உங்களுக்கும் ரீமாவுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஆமாம் ரொம்பவே கஷ்டப்பட்டேன். Pancreatitis இது தான் அந்த நோய். ஆனால் இது நார்மலா தண்ணி அடிக்கிறவங்களுக்கு வரும் அல்லது கால் ஸ்டோன், ஆனால் எனக்கு ஏன், எதனால் வந்தது என்று டாக்டர்களுக்கு தெரியல்லை ஒரு டாக்டர் மட்டும் சொன்னார், உங்களுக்கு கால் ஸ்டோன்ஸ் இருந்திருக்கலாம் அது டெலிவரி டைம் அது தானாக போயிருக்கு, என்று அதனால் தான் கொட்டாவி விடும்போது வலி+உங்களால் விட முடியாமல் அவஸ்தை பட்டிங்க என்று. குழந்தயை காண்பித்தார்காள்.குழந்தைக்கும் வயிறு ஏதோ பெரிதாக இருக்கு அதற்க்கு எதோ டெஸ்ட் என்று சொன்னார்கள் ஆனால் இதை எனக்கு தெரிய படுத்தல்லை தெரிந்தால் மேலும் நான் ரொம்ப அப்ஸ்ட் ஆகிவிடுவேன் என்று. மற்றபடி குழந்தைக்கு ஒன்றும் இல்லை.
குழந்தைக்கு இதய துடிப்பு குறைக்கிறது அதனால் 4 டாக்டர்கள் வந்து பார்த்து பிறகு தான் சர்ஜரி செய்தார்கள். ஆனால் எனக்கு பார்த்த டாக்டர் ரொம்ப நல்லவர், முடிந்தவரை நான் நார்மல்லுக்கு தான் ட்ரை செய்வேன், அதுவும் இங்கு சிசேரியன் அவ்வளவு சிக்கிரம் செய்யவே மாட்டார்கள்.எனக்கு ஒரு ஹோல் டே ட்ரை செய்து கடைசியில் தான் குழந்தைக்கு ஹார்ட் பீட் குறவதை பார்த்து முடிவில் தான் சிசேரியன். என்னால் சிசேரியின செய்வதை பார்க்கலாம், இங்கு அப்படிதான் அன்ஷ்திஷ்யா புல்லா குடுக்க மாட்டர்கள். நம்க்கு அவங்க என்ன செய்றாங்க என்று தெரியும் பாதி திரை தான் போட்டு செய்வார்கள். அதே மாதிரி எத்தனை டாக்டர்ஸ்+நர்ஸ்,என்ன டூல்ஸ் யூஸ் செய்கிறார்கள் என்று எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்கள். என் கனவரையும் கூட இருக்க சொல்வார்காள்., அவருக்கும் யூனிபார்பம் போட்டு விடுவார்கள். அதனால் நம்க்கு எந்த பயமும் இல்லை. அசிட்டி,கேஸ்ப்ராப்ளம், அடிக்கடி யூரின் போவது, பர்ப்யும் ஸ்மல் எனக்கு சுத்தமா பிடிக்காது எங்காவது வெளியே போகும் போது யாராவது போட்டிருந்தால் எனக்கு அப்படியே வாந்தி வரும். பிறகு 4 மாததிற்க்கு பின் ஒரே பேக் பெயின். இன்றைக்கு நினைத்தாலும் அந்த பெயின் ரொம்பவே கஷப்பட்டேன், எப்படா டெலிவரி ஆகும் என்று ஏங்கிவிட்டேன், நல்ல கனவர்+நல்ல தோழிகள் எனக்கு கிடைத்த கிப்ட் நான் என்றென்றும் கடவுளிடம் வேண்டுவது எப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
தளிகா முடிந்தவரை நிறய்ய வாக் போங்க, என் தோழிக்கு டாக்டர் சொன்னது ஸ்விம்ங் போங்க ஒரு வலியில்லாமல் குழந்த பெறுவிங்க என்று 100 க்கு100 உண்மை ஒரே வலியில் 2 வது குழந்தை பெற்றுடுத்தாள். அதே மாதிரி பாட்டி வைத்தியங்கள் எல்லாம் நம்ம ஊரில் தான் மற்றபடி வெளிநாட்டில் அதேல்லாம் கிடையவே கிடையாது, அதனால் அதையும் பார்த்துகுங்க. என்ன தளி இந்தியாவிலா, இல்லை இங்கா டெலிவரி , யாரு அம்மா வருவாங்களா,ஏன் கேட்கிறேன் என்றால் 2 வது குழந்தைக்கு அவசியம் உதவி தேவை. இல்லை என்றால் இப்போதிலில் இருந்து முதல் குழந்தையை டே கேர் அல்லது பேபி சிட்டர் இந்தா மாதிரி எல்லாம் பழக்க படுத்தவும். நாங்க அப்படிதான் என் பெற்றோர்களுக்கு விசா கிடைக்கல்லை என்று முடிவாகும் முன்பே என் கனவர் எதற்க்கு நாம் எல்லாமே ரெடியாக இருப்பது நல்லது என்று நாங்க ஷப்ப்பிங்க் போகும் போது பேபிசிட்டரிடம் விட்டு ட்ரையல் செய்தோம் ஒத்து போனது, கடைசியில் அதுதான் ரொம்ப உபயோகமா இருந்தது. எப்படியோ இன்று குழந்தைகள் கடவுள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறார்கள். எனக்கு தான் இப்பவும் அந்த 2 எப்பிட்யூரல் எடுத்ததினால் பேக் பெயின் இருந்து கொண்டு இருக்கு. மற்றபடி சிசேரியன் ஆகி 15 வது நாளிலுந்து எல்லா வேலையும் செய்ய துடங்கிவிட்டேன், எவ்வளவு நாள் அவருக்கு லீவு கொடுப்பார்கள், அதன் பிறகு நானே ஸ்டார்ட் செய்ய தொடங்கிட்டேன் இன்று வரை ரெஸ்ட் என்பதற்க்கு இடமே இல்லாமல் ஆகிட்டது. ஏன்னா முதல் குழந்தைக்க்கு ஸ்கூல்+ ஸ்கேட்டிங்க்,ஸ்விம்மிங், பியானோ இப்படி எல்லா க்ளாஸ்சும் இருப்பதினால் எனக்கு இந்தியாவும் போக முடியாமல் அப்படியே போய்விட்டது. அதன் பிறகு ஸ்கூல் வேக்கெச்ஷனில் தான் போனேன். பெரிய கதை தளி. அதே மாதிரி முதல் குழந்தைக்கு தான் எப்பவுமே முதல் மரியாதை, அவளிடம் எப்பவும் சொல்லி கொண்டிருப்போம், எல்லாம் ஷேர் செய்யனும், டிஸ்டர்ப் செய்ய கூடாது, என்று என் பொன் ரொம்ப ஸ்மார்ட், எந்த வித ப்ராப்ளமும் கொடுக்கல்லை, என்ன வாங்கினாலும் முதலில் அவள்ளுக்கு தான், எனக்கு தெரியாது என்ன குழந்தை என்று பிறக்கும் வரை அதனால் அவளிடம் பேபி ப்ரதர், அல்லது பேபி சிஸ்டர் ஒ.கே வா என்று ஆனால் அவ 2 ம் வேணும் என்று சொல்வா, ரொம்ப போரடித்துட்டேனா. வேறு எதாவது சந்தேகம் இருந்தால் அவசியம் கேளுங்க. குட் லக். டேக் கேர்.

ஆமாம் சுகன்யா, நிங்க சொல்வது உண்மை.
நான் முதல் டெலிவரி+2 வதும் எல்லாம் இங்கு அமெரிக்காவில் தான். முதல் டெலிவரிக்கு மாமியார் வந்து இருந்தார்கள். என் சிஸ்டருக்கு கல்யானத்துக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருந்தார்கள் அவங்களா வரமுடியல்லை. 2 வதுக்கு என் பெற்றோர்களுக்கு விசா கிடைக்கல்லை, மாமியாருக்கு நாங்க அப்ளை செய்யவில்லை, குழந்தை பிறந்தபின் என் பெற்றோர்களுக்கும்+ என் இன்லாஸ்ஸுக்கும் விசா கிடைத்தது, 8 மாதம் ஆன பின் என் அம்மா மட்டும் வந்து எனக்கு இப்பாவது ரெஸ்ட் எடு என்று சொல்லி வந்து உதவி செய்தாங்க. அமெரிகாவிலும் கடைசி வரை நார்மலுக்கு தான் எல்லா வழியிலும் போரடுவாங்க, குழந்தைக்கு ஹார்ட் பீட் குறைகிறது என்று தெரிந்தவுடன் தான் சிசேரியன் செய்தார்கள். எனக்கு பார்த்தவங்க ரொம்ப நல்ல டாக்டர். உணமயிலே அவங்க கடவுள் தான்.

மேலும் சில பதிவுகள்