இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

இன்றிருக்கும் காலகட்டத்தில் ஒரு குழந்தை இருந்தால் போதுமா?
அல்லது இரண்டு குழந்தைகளா???? எனக்கு 2 வயதில் ஆண்குழந்தை இருக்கிறான்...என்க்கு விருப்பம் இல்லை ஆனால் என்னவருக்கு விருப்பம் ஒரு பெண்குழந்தை வேண்டுமென்று..தோழிகளே உங்கள் ஆலோசனை plsssssss..

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

கண்டிப்பா குறைந்தது இரண்டு வேண்டும் என்பேன்.

ஹலோ தோழிகளே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க....ரொம்ப நாளாச்சு அறுசுவைக்கு வந்து. எப்போ மனசுக்கு குழப்பமா இருந்தாலும் அறுசுவை தான் பல நேரங்கள்ல எனக்கு தீர்வா இருந்திருக்கு. இப்பவும் அப்படி தான் நினைச்சு அறுசுவைக்கு வந்தேன். எனக்கு ஹெல்ப் பண்ணுங்கப்பா...

தளிகா நான் ஏகப்பட்ட மனக்குழப்பத்துல இந்த த்ரெட் எடுத்து ஓபன் பண்ணி பாத்தேன். இப்போ குழப்பம் இன்னும் அதிகம் ஆகிடுச்சுப்பா...

குறைந்த பட்ச இடைவெளி தான் இரண்டு குழந்தைகளுக்கும் இருக்கணும்னு எல்லாரும் சொல்லிருக்கீங்க..

நான் முதல்ல இரண்டாவது குழந்தை வேண்டாம் என்ற முடிவோடவே இருந்துட்டேன். இப்போ எல்லாரும் ஒரு பையனா வளக்காதனு ரொம்ப திட்டுறாங்க. எனக்கும் முதல்ல இரண்டாவது குழந்தை வேண்டாம்னு தோணினதால இத்தனை நாள் அதைப்பத்தி யோசிக்கல. ஆனால் இப்போ இரண்டாவது குழந்தை வேண்டும் என்று என் பையனும் மிகவும் ஆசைப்படுறான். எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலைப்பா.. இப்போ என் பையனுக்கு 6 வயது முடிஞ்சுருக்கு. இப்போ நான் இரண்டாவது குழந்தை பெத்துக்கிட்டா கண்டிப்பா 7 வருட வித்தியாசம் வரும். இது சரியா? எனக்கு யாராவது தீர்வு சொல்லுங்கப்பா. கடந்த ஒரு வாரமா நான் ரொம்பவே டென்ஷனா இருக்கேன். ஜெயந்தி மாமி கூட அவுங்க பசங்களுக்கு நடுவுல 6 வருட இடைவெளினு போட்டிருக்காங்க... இவ்ளோ இடைவெளில குழந்தை பெத்துக்கிட்டா என்ன மாதிரி கஷ்டம் வரும். இதுக்கு இன்னோரு குழந்தை பெத்துக்காமலே இப்படியே இருந்துடலாமானும் தோணுது.

யாராவது ஹெல்ப் பண்ணுங்கப்பா.. ப்ளீஸ். தளிகா கண்டிப்பா இதை பாத்து பதில் போடுவீங்கனு நினைக்கிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இத்தனை வருடத்துக்கு பின் இன்னொரு பிள்ளை தப்பில்லை... உங்க பிள்லையே இன்னொரு குழந்தைக்கு ஆசைப்படும் போது பெருசா ஏதும் பிரெச்சனை இருக்காது. ஒன்னே ஒன்னு தான் கவனிக்கனும்.. உங்க மகன் இதுவரை அவன் ஒருவனே எல்லா பாசமும் அனுபவிச்சான், இப்போ அடுத்த குழந்தைன்னு வரும் போது பங்கு போட அவனுக்கு மனசு வரனும். அவன் வருந்தாம பார்த்து நீங்க எல்லாம் செய்யனும். அது தான் முக்கியம். பெரியவனுக்கு உரிய அன்பு எப்பவும் குறைவதாக அவன் நினைத்திடாம பார்த்துக்குறது தான் முக்கியம். மற்றபடி இரண்டாவது குழந்தை வளர்ப்பதில் ஏதும் பிரெச்சனை இல்லை. அவன் பள்ளி சென்ற பின் நீங்க இரண்டாவது குழந்தையை நன்றாக கவனிக்கலாம். பயம் வேண்டாம். அவனுக்கு தனியா போரடிக்கும் இல்லையா... விளையாட துணை கிடச்சா மகிழ்ச்சி தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளலாம் வனி சொன்னது போல தான் அவனது மேல் உள்ள பாசம் குறைவதாக அவன் நினைக்க கூடாது முதல் பையனிடம் சொல்லுங்கள் நீ தான் தம்பி பாப்பாவை நல்லா பார்த்துக்கணும் நீ தான் எல்லாம் சொல்லி தரனும் என்று கூறுங்கள் அவன் தனக்கு தம்பி வேண்டும் என்று கேக்கும் போது எதும் பிரச்சனை வராது நீங்க பயம் கொள்ள தேவை இல்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா சொன்ன மாதிரி... நீ தானே பாப்பா கேட்ட, அப்போ நீ தான் பார்த்துக்கனும் பத்திரமான்னு தாஜா பண்ணீடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி

நலமா இருக்கீங்களா? ரொம்ப நன்றிப்பா. நான் கேட்டதும் எனக்கு உடனே பதில் போட்டதுக்கு.

ஆமாம் பையனுக்கு ஒரு பொசசிவ்னெஸ் வந்துடக்கூடாது. அதுவும் சரி தான். ஆனால் அவனைச்சுற்றி நண்பர்கள் வட்டத்திலும் சரி. உறவினர்கள் வீட்டிலும் சரி எல்லாம் 2 குழந்தைகள். இவன் மட்டுமே ஒருவனா தனித்து வளந்துட்டு இருக்கான். அதுனால அவனுக்கு இன்னோரு பாப்பா நம்ம வீட்லயும் இருக்கணும்மா. ஏன் நம்ம வீட்ல மட்டும் இல்லைனு கேட்க ஆரம்பிச்சுட்டான். எனக்கு இருக்கும் ஒரே பயம் இவ்ளோ நீண்ட இடைவெளி பிரச்சனையா போயிடுமோனு பயம் தான்.

ஆனால் எனக்கும் என் அண்ணனுக்கும் 7வயது வித்தியாசம். எனக்கு ஒரு அக்கா பிறந்து இறந்ததனால் இந்த வித்தியாசம். ஆனால் நான் என் அண்ணாமேல ரொம்ப பாசமா இருந்தேன். ஆனால் இருவரும் கூடி விளையாடியது கிடையாது. என்னை நல்லா ஜாக்கிரதையா பாத்துக்கிடாங்க என் அண்ணா.

என்னால இந்த விஷயத்தை அறுசுவைக்கு வந்து உங்க கிட்ட கேக்கறத தவிர வேற எதுவும் முடியல. அம்மாக்கிட்ட கேட்டாலோ மாமியார் கிட்ட கேட்டாலோ பெத்துக்கோனு தான் சொல்றாங்க. தோழிகள் கிட்ட கேட்டா அவுங்க அனுபவமும் சேர்ந்து பதிலா கிடைக்கும்னு தான் உங்ககிட்ட கேக்கறேன்.

மறுபடியும் தேங்க்ஸ் வனி.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ரொம்ப நன்றி தனா

என் கணவருடைய அண்ணா பொண்ணை அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிறு குழந்தைகள் என்றால் அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வான். நான் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது உறுதியாகி விட்டால் கண்டிப்பாக அவனிடம் இதைத்தான் சொல்வேன். எனக்கு என் பையன் இந்த விஷயத்தில் ஹெல்ப் பண்ணுவான்னு நம்பிக்கை இருக்குப்பா.. இப்பவே எனக்கு எல்லா வேலைலயும் ஹெல்ப் பண்றான். அவனுக்கு இப்போ வீட்ல பாப்பா வேணும். தனிமை அவனுக்கு பிடிக்கல. போர் அடிக்குது. என் வருத்தம் இந்த நீண்ட இடைவெளி தான். அதுதான் 1 வாரமா துாக்கமே வராம தவிச்சுக்கிட்டு இருக்கேன்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அப்பறம் என்ன... பயமே வேணாம்... மகனிடம் நல்லபடியா புரிய வெச்சுட்டா வேலை சுலபம் தான் :)

அன்பில் குறைவிருக்காது வயது வித்தியாசம் அதிகம் இருக்கும் போது. சகோதர அன்பை விட, பிள்ளை போல அன்பு வரும், பொறுப்பா பார்ப்பாங்க. பயப்பட வேண்டாம். இத்தனை வருட தனிமையை விட்டு இனி ஒரு உறவோடு வீட்டில் இருக்க அவன் மனதளவில் தயாரா இருந்தா போதும். தன் பெற்றோர் தனக்கு கொடுத்த இடத்தை யாரும் பிடிங்கினதா நினைச்சுடாம பார்த்துகிட்டா வேற ஏதும் பிரெச்சனை வர வாய்ப்பு இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பையன் இந்த அளவுக்கு புரிந்து கொண்டு இருக்கும் போது நீங்க பயம் கொள்ள தேவை இல்லை நீங்கள் கண்டிப்பாக குழந்தை பெற்று கொள்ள லாம் அவனுக்கும் ஒரு துணை வேண்டும் வீட்டில் விளையாட இரண்டு குழந்தை தேவை தான்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்