இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

ரொம்ப நன்றி வனி

என் கணவரிடமும் இதைப்பற்றி பேசிய போது அவரும் நீ தான் யோசித்து முடிவெடுக்க வேண்டும். இதில் உன் பங்கு தான் அதிகம். நாளைக்கு அந்த குழந்தையையும் நீதான் பார்க்க வேண்டும். எனக்கு 2வது குழந்தைக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறிவிட்டார். அவருடைய வேலைப்பளுவிற்கு நடுவில் அவரை நம்பி நான் 2வது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அவரை சொல்லி குற்றமில்லைப்பா.. பாருங்க மணி 12.30 ஆச்சு இங்க. ஆனால் இன்னமும் வீடு திரும்பல. இன்னும் 1மணி நேரம் ஆகும் கிளம்பனு சொல்றாரு.. இப்படிப்பட்ட சூழ்நிலைமையில குழந்தை பெத்துக்கிட்டா அதை நான் தனியா தான் ஹேன்டில் பண்ணனும்.

இங்க எல்லாரும் ஒன்னே ஒன்னு சொல்லி ரொம்ப பயமுறுத்தறாங்க. அதாவது 2வது குழந்தை இப்போ பெத்துக்கிட்டா முதல் குழந்தையின் படிப்பில கவனம் செலுத்த முடியாது. ரொம்ப கஷ்டப்படுவீங்க. ரெண்டு குழந்தையையும் சரியா கவனிக்க முடியாதுன்னு சொல்றாங்கப்பா.... அப்படியா? சரியா கவனிக்க முடியாதா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நன்றி தனா...

இப்போ மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. குழப்பம் கொஞ்சம் குறைவா இருக்கு...

இது தான் நான் உங்க கிட்ட முதல் முறை பேசறேன்.ரொம்ப சந்தோஷம் பா.. உடனே என்னுடைய சந்தேகத்துக்கு தீர்வு சொன்னதுக்கு மிக்க நன்றிப்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

படிப்பு பற்றிலாம் கவலைபட இன்னும் காலம் இருக்குங்க... உண்மையில் ஒன்னும் பிரெச்சனை இல்லை... அவன் 10வது, 12வது படிக்கும் போது இவன் சிறுவனா இருப்பான்... நீங்க ஒருவரை நல்லா கான்சண்ட்ரேட் பண்ணலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓரளவுக்கு இப்போ கொஞ்சம் தெளிவாகிட்டேன்..

அப்படி எதாவது நடந்தா கூடிய சீக்கிரம் உங்களுக்கு சொல்றேன். கடவுள் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா நடக்கணும்.....எனக்கு டெலிவரி வரைக்கும் கூட ஹெல்ப் பண்ண போறது அறுசுவை தான... எனக்கும் டச் விட்டுபோச்சுல்ல.. எல்லாம் மறந்து போச்சு.... அட்வைஸ் கேக்க இங்க தான வரணும்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹலோ ராதா....என்னுடைய பெயரிலியே நீங்களுமா? நான் இதுவரை உங்களுடன் பேசியதில்லை.

இரண்டாவது குழந்தை ரொம்ப அவசியம்தான். என் பெண்ணுக்கு முதல் குழந்தைக்கு7 வயதாகிறது. இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று அடம் செய்தாள். பிறகு அவள் மாமியார், நானெல்லாம் சொல்லி இப்போ அவள் ஆசைப்பட்டபடி பெண் குழந்தை பிறந்து 7 மாதமாகிறது. முதலில் பையன். அவன் தங்கையிடம் காட்டும் பாசம் எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கு. பொஸ்ஸஸிவ்னஸ் இருக்குமோ என்று பயப்பட்டோம்.

ஒரு நாள் அவள் குழந்தை அழும்போது ரொம்ப இண்ட்ரஸ்டா T.V பார்த்துக் கொண்டிருந்தாள்.. கோவமாக வந்தவன் அவளைப் பார்த்து "உனக்கு பேபி முக்கியமா? T.V முக்கியமா? பேபி அழற்து பாரு' என்றான். அவன் பொறுப்பை பார்த்து எங்களுக்கெல்லம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

அடுத்து என் மாப்பிள்ளை இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் நான் அதைக் கவனிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். (இருவரும் டாக்டர்கள்..ரொம்ப பிஸி) இப்ப என்ன என்றால் குழந்தையை வீட்டில் இருக்கும் நேரம் முழுக்க அவர்தான் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். ஸோ நீங்கள் உங்கள் கணவர் பற்றி கவலைப் படாமல் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

சிங்கப்பூரில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

ராதாம்மா

நான் உங்க குறிப்புகள் அறுசுவைல பாக்கும்போதெல்லாம் நினைச்சுப்பென்.. ராதா ராணிக்கு அப்பறம் என் பேர்ல ராதா பாலுனு ஒருத்தர் இருக்காங்களே.. அவுங்ககிட்ட பேசணும்னு தோணும். இப்போ நீங்களே வந்து எனக்கு பதில் சொல்லிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்மா...

என் நிலைமை அப்படியே நீங்க படம் புடிச்ச மாதிரி சொல்லிருக்கீங்க. உங்க பெண்ணோட மனநிலைமை எப்படி இருந்துச்சோ அதே மாதிரி தான் இப்போ நானும் இருக்கேன். இவ்ளோ நாளா வேணுமா வேண்டாமானு இருந்த நான் இப்போ வேணும்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.

கூடிய சீக்கிரம் நல்ல செய்தி சொல்கிறேன். நீங்க எல்லாரும் எனக்கு துணையா இருக்கணும். வெளி நாட்டுல இருக்கற என்னை மாதிரி தோழிகளுக்கு அறுசுவை தான் அம்மா மாதிரி ஹெல்ப் பண்ணுது. எத்தனை தோழிகள் முன் வந்து அறிவுரை சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு..

நான் சிங்கப்புர் ல சிராங்கூன் ல இருக்கேன் மா.. நீங்க எங்க இருக்கீங்க?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா....ஒண்ணும் கவலைப் படாதீங்க. நான் சென்னைல இருக்கேன். என் பிள்ளை சிஙைல க்ளெமெண்டில இருக்கான். அடுத்த முறை வரப்போ மீட் பண்ணலாம்.

கண்டிப்பா மீட் பண்ணலாம் ராதாம்மா...

நீங்க எப்போ வருவீங்கனு முன்னாடியோ சொல்லுங்க. ஒரு நாள் ப்ளான் பண்ணி நம்ம அறுசுவை மக்கள் மீட் பண்ணலாம்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆனா உங்களை அறுசுவையில் பார்க்க முடியற்தில்லயே?

முதல் பாப்பாக்கு 14மாசம் ஆகுது. இப்போ 2மாசம் pregnant. பாப்பாக்கு இன்னும் motherfeed கொடுக்கிறேன். எப்போ நிறுத்தலாம்? பாப்பாவை தூக்காமல் இருக்க முடியவில்லை, அழுகிறாளே!? என்ன செய்ய? Weight தூக்கினால் யூட்ரஸ் வீக் ஆகிடும்னு சொல்கிறார்கள், உண்மையா ? Healthy ஆக இருக்க ஐடியா சொல்லுங்கபா pls.

மேலும் சில பதிவுகள்