இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

I read about this in a magazine yesterday. Here is the link

http://www.ehow.com/how_2106730_buy-bpa-free-baby-bottles.html

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மூன்று நாளாக மெல்ல தொடங்கிய விஸ்டம் டூத் வலி இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது..மருத்துவரை கூப்பிட்டு பேசினேன் இரண்டு நாள் உப்பு கலந்த நீரால் அடிக்கடி கார்கில் பன்னிவிட்டு குறையவில்லையென்றால் ஆன்டிபயாடிக் சாப்பிட்டே ஆக வேண்டும் எஙிறார்..எனக்கு கொஞ்சம் டென்ஷனாக உள்ளது..-உங்களுக்கு யாருக்காவது இந்த அனுபவம் உண்டா?இன்றே என்னால் முழுமையாக எல்லாத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை

ஐயோ தளி உங்களுக்கும் அதே தண்டனையா?குறையாவிட்டால் கட்டாயம் டாப்ளட்ஸ் சாப்பிட்டே ஆகவேணும்.அது நீங்கள் பாவிக்ககூடியதுதான்.இலாவும் ஒரு டாக்டரிடம் கேட்டு இது பாவிக்கலாம் என்று சொன்னார்.நானும் அதை எடுக்காமல் என்னென்னமோ செய்துபார்த்தேன் குறையவில்லை.கொஞ்சம் குறையும் பிறகு தொடங்கிவிடும்.

தளி இந்த நேரத்தில் நமக்கு முரசு சரியான மென்மையா மாறுமாம் அந்தநேரம் பாத்து பல்லில் பிரச்சனை வருமாம்.
எனக்கு ஐஸ் ஒத்தடமும் பரவாயில்லாமல் இருந்தது.
சாப்பிட்ட உடன வாயைக்கொப்பிளியுங்கோ.

சுரேஜினி

ஞானம் காலமில்லாத காலத்தில வருது இல்லை ரூபி!!! பாவம் நீ ப்ரெக்னென்ட் இல்லைன்ன... நல்லா சிரிச்சு இருப்பேன் :))

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அய்யோ சுரேஜினி சத்தியமா உங்களை தான் நெனச்சேன் ..ஓரளவுக்கு ஒரு பக்கமே போனாலும் கண்டுகுள்ளாமல் இதெல்லாம் என்ன என்று விட்டுவிடுவேன்..ஆனால் இது துவக்கமே ஒரு மாதிரி இருக்கே..வாயை திறக்கவும் கஷ்டம் சாப்பிடவும் கஷ்டம் இல்லாமலே சாப்பாடு ரொம்ப லட்சனமா இருக்கு..பசியில்லாத அவஸ்தையில இது வேற..டாக்டர் அது சாப்பிடலாம் பரவால இது சாப்பிடலாம் பரவால எஙிறார்..எனக்குத் தான் பயமா இருக்கு..ரெண்டு நாள் பார்க்கலாம்..என்ன சுரேஜினி செய்ரீங்க?எப்படி சமாளிக்கறீங்க..முன்னபோல என்னால் நினைத்த நேரத்தில் படுத்துக்க முடியாது என் மகள் பல்லிலேயே குத்தி விடுவாள்

ஹஹஹா..இலா சிரிங்க ஒன்னும் ப்ரச்சனையில்ல இப்ப கூட..பேரை பாரு விஸ்டமாம் விஸ்டம்

பல் வலியா?அய்யோ எனக்கு என் மகள் ஆறு மாதத்தில் இதே விஸ்டம் டூத் பயங்கர வலி,தாங்கவே முடியலை,என்னோட டார்ச்சரால் டாக்டர் அந்த பல்லை புடுங்கியே விட்டார்.ஆறுமாதக்கர்ப்பிணியே என்று வீட்டில் தான் அனைவரும் பயப்பட்டார்கள்.நீ எதற்கும் டாக்டர் சொல்லை பொறுமையாக கேள்.அம்மா இங்கு பேர்காலத்திற்கு வந்தால் மிகவும் வசதி.ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.எல்லாம் நல்ல படியாக நடக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தளி பாவம் நீங்க என்ன செய்றீங்கள் எண்டு பாக்கத்தான் அவசரமா ஓடிவந்தனான்.

நான் செல்வி அக்கா குறிப்பில இருக்கிற அரிசிக்கஞ்சிகஞ்சி ,பாயாசம் என்று ஒரே நீராகாரம்தான்.[கராம்புதான் அதிகம் சாப்பிட்டேன்]எனெண்டா கடினமானதை கடிச்சா இந்த நேரத்தில வீங்கி இன்னும் வலிக்குமாம்.டாக்டர் சொன்னவர்.2நாள் சமாளிச்சு பாருங்கோ கூடிக்கொண்டு போகுதா குறைஞ்சுகொண்டுபோகுதா எண்டு பாத்துட்டு கர்ப்பமா இருக்கிறவர்கள் பாவிக்கிறதுக்கு டாப்ளட்ஸ் இருக்கு .வாங்கி பாவியுங்கோ.ஏனெண்டா இந்த நேரத்தில கொப்பிளிக்க எடுக்கிற மருந்துகளும் குமட்டும்.
மகள்வேற பல்லில குத்துற அளவுக்கு குறும்பா?போச்சு.
இன்னொண்டு சொன்னாரே டாக்டர்.ஓ நாக்கால் இந்த ஈறை ஒரே உரச வேண்டாம்.
என்னத்தை சொல்லுறது தளி எனக்கு உங்களை நினைக்க நினைக்க கஷ்டமா இருக்கு.

சுரேஜினி

ஆசியாக்கா ஆமாம் மாட்டிகிட்டேன் ..4 மாதம் முடிந்தால் கூட எதுவும் செய்யலாம் ஆனால் இப்போ மருந்தை தரவே யோசிக்கனும் எஙிறார் மருத்துவர்.இருந்தாலும் பல் வலி வந்து படுத்தினால் அதுவும் குழந்தைக்கு நல்லதல்ல என்பதால் ஆன்டிபயாடிக் எடுங்க எஙிறார்..கர்பமல்லாதப்பவே பிடுங்க கஷ்டம் அந்த பல் என்பதால் இப்போ சுத்தமா வேண்டாம் எஙிறார்...இந்த விஸ்டம் டூத்துக்கு அறிவே இல்ல தொண்டைகிட்ட மொளச்சிருக்கு..

சுரேஜினி ஒரே அழுகைய வருது..இப்போ இருக்கும்வலியை விட கொடுமை படுத்தால் தான் இருக்கு..2 மணிநேரம் கூட தூங்கல ஒரே குயீயீயீ ந்னு வலி.நாளை எப்படி தூங்காமல் மகளை சமாளிப்பேன் என்று இப்பவே பயமா இருக்கு.நாளை எப்படியும் டாக்டர்ட போவேன்.மவுத் வாஷால் வாஷ் பன்னி வாந்தியே வந்துடுச்சு.உன்களுக்கு இப்போ மாறி விட்டதா சுரேஜினி.அந்த பல்லை சுற்றி கம்ஸ் லேசான வெள்ளை நிறத்தில் வீங்கி பல்லை விட்டு எழுந்தது போல் உள்ளது

தளிகா,
எப்படி இருக்கிங்க? உங்களுக்கு வாழ்த்துகள். உடம்பினை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். நான் எப்பொழுது இந்த் தெர்டினை ஒப்ன் செய்தவுடன் நெட் ஸ்லோவாகிவிடும். மிகவும் சந்தோசம் பா…
அன்புடன்,
கீதா ஆச்சல்

மேலும் சில பதிவுகள்