இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

அடடடே செல்வியக்கா பதிவா இப்போ தான் பார்த்தேன்..கவனிக்கலை.சொல்லவே இல்லைங்கறீங்க நான் மத்தளம் ஒன்னு தான் பாக்கி அந்தளவுக்கு டமாரம் அடிச்சுகிட்டிருக்கேன்.
ஏன் ஊருக்கு வரலைன்னு எல்லோரும் கேட்டு அதுக்கும் சேத்து விளம்பரம் பன்னியாச்சு..நீங்க நல்லா இருக்கீங்களா?இப்ப உங்க அரிசி கஞ்சியை தேட தான் வந்தேன் சுரேஜினியின் அதே ஞானப்பல் பாடு எனக்கும்...கிராம்பு தைலத்தை வாங்கி வைக்கவா?
இப்பத்திக்கி பேச கூட மூட் இல்ல வலியை விட பயம் அதிகமா இருக்கு.இல்லாமலே இம்முறை எனக்கு தூக்கம் ரொம்ப கம்மி..ஒரு நாளைக்கு 5 மணிநேரம் கூட தூக்கம் வருவதில்லை இப்போ சுத்தம் 2 மணிநேரம் தான் தூக்கம்.தூக்கம் வர என்ன செய்யலாம் செல்வியக்கா

ஆமாம் ரேனுகா சிலருக்கு கர்பகாலம் ரொம்ப படுத்திவிடும்..ஆனால் அதுவே இரண்டாவதுக்கும் இருக்கும் என்றும் சொல்ல முடியாது..என்ன செய்வது நானும் அதே கேஸ் தான் யாராவது செய்தால் மனசுக்கு பிடிக்காது.....இருந்தாலும் முடியாதபோது கொஞ்சம் சமாதனப்படுத்திகிட்டு மாதம் 500 திர்ஹம்ஸுக்கு மெயிட் கிடைப்பார்கள்...அவங்களை வச்சுக்கலாம் ரொம்ப முடியாட்டால்..பைய்யன் ஸ்கூலுக்கு போக தொடங்கிட்டதால் பெரிசா ப்ரச்சனை வராது.சமையலுக்கு நீங்கள் எல்லாம் இந்த மாதிரி செய்யுங்கள் என்று சொல்லி செய்ய வைக்கலாம்.கூட்டி தொடைத்து பாத்திரம் கழுகி போக சொல்லலாம்..பிறகு துணி துவைக்க ஆடோமேடிக் மெஷின் போதுமே..சிசேரியன் ஆகியும் 1 வாரத்தில் வேலை செய்தீர்களா கஷ்டம் தான்.யோசித்து முடிவு பன்னுங்க.

இலா தந்த லின்க் பார்த்தேன் இப்படியெல்லாம் விஷயம் இருக்கான்னு இப்ப தான் தெரியுது..ஆனால் இன்னும் முழுசா விளங்கல பொறுமையா மெல்ல படிக்கனும்..தேன்க்ஸ் இலா

அன்பு தளிகா

மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி!

மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

அதிகம் பதிவு போட நேரமில்லை, உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அது என்னவோ குழந்தை உண்டாயிருக்காளே என்று பாவம் பார்க்காமல் இந்த பல் எல்லாரையும் படுத்துதே! எனக்கும் இரண்டாவது பிரசவத்தின் போது பயங்கர பல்வலி வந்தது. அதுவும் 8 மாசத்தில். அப்ப அம்மா கூட இருந்தாங்க. ஊரில் இருக்கிற, இல்லாத எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டாங்க. ஒரு 2 நாள் படுத்திட்டு போயிடுத்து.

இரண்டாவது குழந்தைக்கும் நல்லெண்ணை, மஞ்சள் தடவுங்கள். தளிகா ரீமாக்குட்டி பிறந்தது நார்மல் டெலிவரியா, சிசேரியனா?

வயது வித்தியாசம் எல்லாம் அவரவர் இஷ்டப்படி. என்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு முதல்பெண் காலேஜில் படிக்கிறாள். இரண்டாவது இன்னும் ஸ்கூலுக்கே கிளம்பவில்லை. பெரியவள் சின்னவளிடம் ரொம்ப அன்பாய் இருப்பாள். நன்கு பார்த்துக்கொள்வாள் என்றார் அவர்.

என் பையன் ரொம்ப ஏங்கிக்கொண்டிருந்தபோது பெண் பிறந்ததாலோ என்னவோ அவளிடம் ரொம்ப ஆசை. பள்ளியிலிருந்து வீட்டில் நுழையும் போதே செல்லக்குட்டி, வெல்லக்கட்டி என்று கொஞ்சிக்கொண்டுதான் நுழைவான். அடுத்து வரும் குழந்தை உனக்கே உனக்காக என்ற எண்ணத்தை முதலில் அதன் மனதில் ஏற்படுத்தவேண்டும்.

அதேபோல் பெண் பள்ளிக்குச்செல்ல ஆரம்பித்ததும் அவளுக்கு சாக்ஸ் மாட்டி, ஷூ போட்டு, பை எடுத்து வெச்சு எல்லாம் செய்வான்.

ஒருநாள் பையனுக்குப்பிறந்தநாள். அவன் கலர் ட்ரெஸ் போட்டுக்கொண்டான். பெண் சமர்த்தாக யூனிபார்ம் போட்டுக்கொண்டு அண்ணா சாக்லேட் டப்பா எடுத்துக்கோன்னு எடுத்துக் கொடுத்தாள். இப்ப அண்ணான்னு கூப்பிடறதில்லை டேய் ஸ்ரீநாத் தான்.

ஒரே குழந்தையுடன் நிறுத்துபவர்கள் கண்டிப்பாக இரண்டாவது பெற்றுக்கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று கண்டிப்பாக பிற்காலத்தில் வருத்தப்படுவார்கள்.

தளிகா, நல்லபடி குழந்தை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

வாழ்த்துக்கல் தாலிகா,
நானும் ட்ர்ய் பன்னினென்,இரண்டாவது குழந்தைக்கு,ஆனாலது நடக்கவில்ல்லை.ஏனென்றால் டென்சன்.எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்(31/2).அவள் இப்போதுLKG போறா.காலையில் அவளை
பள்ளீக்கு அனுப்புவது பெரிய பாடு.எனக்கு டைம் மேனேஜ்மென்ட் கொஞ்சம் சொல்லி கொடுங்கல்.அதனால் இட் கெட் அபார்சன்.ப்ளீஸ் எனக்கு உதவுங்கல்

சுரேஜினி, கொஞ்ச நாளாக என் மனதில் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் நேரில் கேட்கவும் தயக்கம், உங்களுக்கும் விஷேஷமோ? அப்படியாயின் என்னுடைய வாழ்த்துக்கள். எல்லாம் நல்லபடி நடக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தவறெனில் கோபித்திட வேண்டாம்.

சுதா, ஏன் டென்ஷனாகிறீங்கள். இதற்காக நிறைய ரிப்ஸ் இங்கே நிறைய இடங்களில் இருக்கிறது. நேரமுள்ளபோது தேடிப் பாருங்கள். இரவே குழந்தைக்கான உடையிலிருந்து சகலதையும் ஆயத்தமாக எடுத்து வைத்துவிடுங்கள். காலை உணவைக்கூட வெட்டும் வேலைகள் அப்படியானவற்றை இரவே செய்து வைத்துவிட்டால் டென்ஷன் இருக்காது. நீங்களும் வழமையை விட 1/2 மணித்தியாலமாவது சற்று முந்தி எழுந்துகொள்ளுங்கள். மனதை எந்த நேரமும் இலேசாக வைத்திருங்கள். உங்கள் உணவு விஷயத்திலும் கவனமாக இருங்கள். சீக்கிரமே குழந்தை தங்கிவிடும். எனது வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் பிரச்சனை புரிகிறது. ஆனால் வீட்டிலே உதவி காணாது என நினைத்து, யாரும் 2 வது குழந்தை வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். பெற்றோருக்கு ஒரு குழந்தை போதுமானதாக இருக்கலாம், ஆனால் பிள்ளைக்கு நிட்சயம் ஒரு துணை வேண்டும். என்னைப் பொறுத்து 4/5 பிள்ளைகள் இருந்தால்கூட நல்லதுதான்.

ரேணுகா நீங்கள் பயப்படும்படி ஒன்றும் பெரிய கஸ்டமில்லை. ஒருமாதம் கஸ்டப்படவேண்டும். அதற்கு ஊரிலிருந்து யாரையாவது கூப்பிட முடியாதா? அல்லது, அபுதாபியில் எப்போ ஸ்கூல் விடுமுறை கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு, அவ்விடுமுறையில் குழந்தை பிறக்கக்கூடியதாகப் பிளான் பண்ணலாம். எனது ஆண்டியிற்கு ஒரு மகள் 15 வயது. இப்போதான் அவர்கள் சரியாக் கவலைப்படுகிறார்கள், தன் மகள் தனித்துவிட்டாள் என்று. இப்போ கவலைப்பட்டு என்ன பலன்.

ஆயிரந்தான் இருந்தாலும் என்றைக்குமே சகோதரர்கள்தான் கைகொடுப்பார்கள். எங்கள் வீட்டில்கூட 2 வது மகன் பிறக்கும்வரை நானோ கணவரோ ஓரிடத்தில் இருக்க முடியாது, மூத்தவர் தன்னோடு விழையாட வரும்படி அழைப்பார்.. நாமும் அப்படியே அவரோடுதான் எமது பொழுது கழிந்தது. ஆனால் 2வது மகனின் பின்னர் இப்போ அவர்கள் ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்கமாட்டார்கள். எமக்கும் தொல்லை இல்லை. இருவரும் ஒரே குழந்தைகள்(ஆண்) என்பதால் அவர்கள் ரசனைகள் விழையாட்டுக்களும் ஒரே மாதிரியே இருக்கும். நான் விழையாடச் சொல்லிவிட்டு நித்திரையும் கொள்வேன். அந்தநேரம் சண்டையெதுவும் இல்லாமல் விழையாடுவார்கள். எனவே எப்பவும் குறைந்தது இரு பிள்ளைகள் வேண்டும். வயது வித்தியாசம் எதுவாயினும் பறவாயில்லை இரு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஆறுதல்.

தளிகா கூட பலமுறை சொல்லியிருக்கிறார், தான் கணவருடன் கதைக்கபதற்கே மகள் விடுவதில்லை என்று, இதற்கு காரணம் குழந்தைக்கு ஒரு துணை தேவைப்படுகிறது விழையாட அதனால் பெற்றோரை விடுவதாக இல்லை. அடுத்த குழந்தை பிறந்ததும் பாருங்கள், தளிகா உங்களை மகள் தொந்தரவு பண்ணமாட்டார்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் பிரச்சனை புரிகிறது. ஆனால் வீட்டிலே உதவி காணாது என நினைத்து, யாரும் 2 வது குழந்தை வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். பெற்றோருக்கு ஒரு குழந்தை போதுமானதாக இருக்கலாம், ஆனால் பிள்ளைக்கு நிட்சயம் ஒரு துணை வேண்டும். என்னைப் பொறுத்து 4/5 பிள்ளைகள் இருந்தால்கூட நல்லதுதான்.

ரேணுகா நீங்கள் பயப்படும்படி ஒன்றும் பெரிய கஸ்டமில்லை. ஒருமாதம் கஸ்டப்படவேண்டும். அதற்கு ஊரிலிருந்து யாரையாவது கூப்பிட முடியாதா? அல்லது, அபுதாபியில் எப்போ ஸ்கூல் விடுமுறை கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு, அவ்விடுமுறையில் குழந்தை பிறக்கக்கூடியதாகப் பிளான் பண்ணலாம். எனது ஆண்டியிற்கு ஒரு மகள் 15 வயது. இப்போதான் அவர்கள் சரியாக் கவலைப்படுகிறார்கள், தன் மகள் தனித்துவிட்டாள் என்று. இப்போ கவலைப்பட்டு என்ன பலன்.

ஆயிரந்தான் இருந்தாலும் என்றைக்குமே சகோதரர்கள்தான் கைகொடுப்பார்கள்(99% மும்). எங்கள் வீட்டில்கூட 2 வது மகன் பிறக்கும்வரை நானோ கணவரோ ஓரிடத்தில் இருக்க முடியாது, மூத்தவர் தன்னோடு விழையாட வரும்படி அழைப்பார்.. நாமும் அப்படியே அவரோடுதான் எமது பொழுது கழிந்தது. ஆனால் 2வது மகனின் பின்னர் இப்போ அவர்கள் ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்கமாட்டார்கள். எமக்கும் தொல்லை இல்லை. இருவரும் ஒரே குழந்தைகள்(ஆண்) என்பதால் அவர்கள் ரசனைகள் விழையாட்டுக்களும் ஒரே மாதிரியே இருக்கும். நான் விழையாடச் சொல்லிவிட்டு நித்திரையும் கொள்வேன். அந்தநேரம் சண்டையெதுவும் இல்லாமல் விழையாடுவார்கள். எனவே எப்பவும் குறைந்தது இரு பிள்ளைகள் வேண்டும். வயது வித்தியாசம் எதுவாயினும் பறவாயில்லை இரு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஆறுதல்.

தளிகா கூட பலமுறை சொல்லியிருக்கிறார், தான் கணவருடன் கதைப்பதற்கே மகள் விடுவதில்லை என்று, இதற்கு காரணம் குழந்தைக்கு ஒரு துணை தேவைப்படுகிறது விழையாட, அதனால் பெற்றோரை விடுவதாக இல்லை. அடுத்த குழந்தை பிறந்ததும் பாருங்கள், தளிகா உங்களை மகள் தொந்தரவு பண்ணமாட்டார்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளி எனக்கு பல்வலி போய்விட்டது ஆனாலும் உங்கள் நினைவாகவே இருக்கு.அரிசிபாயாசம் நல்லா இருந்தது தெம்பாவும் இருக்கும் குடியுங்கோ.இயலுமானவரை யூஸ் குடியுங்கோ.இப்போ சாப்பிட முடியாமல் இருக்கு என்று உங்கள் டாக்டரிடம் சொன்னால் ஏதாவது விட்டமின் தருவார்.நான் சாப்பாட்டுக்கு மனமில்லை அதோடு பல்லுவலி என்று சொன்னதுக்கு வைட்டமின் தந்தவர்.

அதிரா உடம்பு சுகமா?உங்களுக்கு வருத்தம் என்று சொன்னதும் நாந்தான் சமைக்கவில்லையே வந்து சுகம் மட்டும்கேட்டால் அடிப்பீங்களோ எண்டு விட்டுவிட்டேன்.ம் நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான்.நான் சொன்னதுபோல் 2009 என் கர்ப்பத்தை முன்னிட்டு எந்த பயணமும் இல்லை.உடுப்புக்கூட அடுக்கியபடி இருக்கிறது சூட்கேசுக்குள் இருந்து சிலதை எடுத்துப்போடுகிறேன்.
எங்கட அதிராக்கு மட்டும் அப்பப்ப ஞானக்கண்ல எல்லாம் தெரியுதோ?

சுரேஜினி

ஆ... சுரேஜினி
அதிராவின் வாழ்த்துக்கள் எப்பவுமே உண்டு. நான் முன்பு உங்கள் பதிவு ஒன்று பட்டிமன்றத்தில் பார்த்தேன், எனக்கு சரியான மனவருத்தமாக இருந்தது, எப்படியாவது குழந்தை கிடைத்திட வேண்டுமென நினைத்துக்கொண்டே இருந்தேன். கடவுள் கைவிடவில்லை. அம்மனுக்கு நன்றி சொல்லிட்டீங்களோ. எனக்கு கொஞ்ச நாட்களாக சந்தேகம் இருந்தது, ஆனால் கேட்பது சரியில்லை, சிலர் பப்ளிக்கில் சொல்வதை விரும்புவதில்லை என்பதால் விட்டுவிட்டேன்.

எனது குறிப்பிலும் இருக்கிறது அல்லது உங்களுக்கு பிடித்தபடி, புறோக்கோலி வாங்கிச் சாப்பிடுங்கள். சத்தும் அதிகம். நார்ச் சத்தும் உண்டு. ஆரோக்கியமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன். கண்டபடி ஸ்னோவில் திரியாமல் நல்ல பிள்ளையாக வீட்டில் இருங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சுரேஜினி நானும் இப்போ கிராம்பு தான் அடக்கிக்கிறேன் ஆனாலும் குறைந்தபாடில்லை..நாளை பார்த்து விட்டு போய்விடுவேன் மருத்துவரிடம்..இப்போ அந்த பல்லை கண்டாலே பயமாக இருக்கு..சுற்றிலும் வெள்ளை வெளேர் என்று..கிராம்பு தைலம் தேய்த்து வாய் வேற வெந்து விட்டது..வேறென்னவெல்லாம் செய்தீங்கோ?அரிசி கஞ்சி தேடி கிடைக்கவே இல்லை எங்கென்று சொல்லுவீர்களா?ஒரு பக்கமாக எப்படியோ சாப்பிடுகிறேன்...பரவாயில்லை உங்களுக்கு மாறினதை கேட்டதும் எனக்கும் நம்பிக்கை எனக்கும் மாறுமென்று..நல்லபடியாக கர்பகாலத்தை ஒரு கஷ்டமும் இல்லாமல் அனுபவிக்க என்னுடைய ப்ராத்தைனைகள்
சுரேஜினி நானும் உங்களை போல ஊர் போக எல்லாம் அடுக்கி முந்தைய நாள் விவரம் தெரிந்ததும் கேன்செல் பன்னிவிட்டோம்..உடுப்புகளை வெளிYஎ எடுத்தாச்சு..எல்லோருக்கும் வாங்கின கிஃப்டுகள் தான் பெட்டியில் கிடக்கிறது..அதை அடுத்த முறை செல்லும்போது கொண்டுபோகனும்.

மேலும் சில பதிவுகள்