இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

வாழ்த்துக்கள் தளிகா,ரொம்ப சந்தோசம் .பல் வலிக்கு என் அம்மா,அரிசியை வலி உள்ள இடத்தில் அடக்கி வய்த்தால் குறையும் என்பார்கள்.ட்ரை பன்னுங்கள்

ஹாய் தளிகா,
வலி இப்ப எப்படி இருக்கு என்று கேட்க மாட்டேன்.எப்படியும் அந்த வலி குறைந்த பட்சம் 5 நாளாவது இருந்துட்டு தான் போகும்.பல் லேசா வெளியே தெரிய ஆரம்பிக்குதா..ஆம் அந்த பல்லின் ஈரை சுத்தி வெள்ளை வெள்ளையா தான் இருக்கும்.ஏன் என்றால் கிராம்பு வைப்பதால் தான் இருக்கும் என்பது என் கணக்கு(ஏன்னா எனக்கு அதில் அனுபவம்பா).அது ஒன்றும் பெரிய விஷயமில்லை,நான் கூட முதலில் பயந்தேன்.நாளைடைவில் அது சரியா போய் விடும்.அதை பார்த்து பார்த்து பயப்படாதீங்க.நாளைக்கே நீங்க டாக்டர்க்கிட்ட போனீங்கன்னா கூட அவங்க மருந்து தர மாட்டாங்க.

நீங்க ப்ரெக்னன்டா இருக்கும் போது அப்படி மருந்து எடுப்பது நல்லதும் இல்லை.நம்ம ஊர்(இந்தியாவில்)மருந்தே கொடுக்க மாட்டாங்க.ஏன்னா கருவில் இருக்கும் குழந்தையை காக்க தான்.இலவங்கம்(கிராம்பு) வைத்து மெல்லும் போது அந்த சாறை நாக்கில் படாமல் முழுங்கிடுங்க.லவங்கம் உடம்புக்கு நல்லது தான்.நைட் படுக்க போகும் முன்,நல்லா நம் வாய் பொறுக்கும் அளவு,1 கப் சுடு நீரில் 2 தேக்கரண்டி உப்பு போட்டு(வாயில் வைக்க முடியாத அளவு உப்பு போடனும்,அது தெரியாம் இருக்க தான் சூடான் நீர்,ரொம்ப குமட்டினா உப்போட அளவை கொஞ்சம் குறைச்சுக்கோங்க)நல்லா அந்த பல்லில் படுகிற வரை வாயில் சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளித்து விடுங்கள்.முழுங்கிடாதீங்க.

இந்த மாதிரி ஒரு நாளைக்கு எப்பவெல்லாம் ரொம்ப வலி தாங்க முடியலையோ(எப்பவும் ஒரே வலின்னு சொல்றீங்க தானே)அப்போதெல்லாம் செய்ங்க.அதிகபட்சம் பார்த்தீங்கன்னா,7 நாள் வலிக்கும்.கொஞ்சம் பல்லு தெரிஞ்சுதுன்னு சொல்றீங்கல்ல..அது நல்ல அறிகுறிதான்.வலி சீக்கிரம் சரியாகிவிடும் அறிகுறி தான்.அப்புறம் இந்த ஞானப்பல்,இவங்களை படுத்தினது போதும்னு போய்ட்டு,கொஞ்ச நாள் இடைவெளி விட்டு மறுபடியும் இந்த பக்கம் முளைக்கும்(ஏற்கனவே உங்களுக்கு முளைச்சதால் ப்ரச்சனை இல்லை).ஏற்கனவே கொஞ்சம் பல் வளர்ந்த இடத்தில் திரும்பவும் வலி வந்து(இந்த முறை ஒரு 3 நாள் தான்)கொஞ்சம் வளரும்.சில மாசத்துக்கு ஒரு தடவை வரலேன்னா அதுக்கு தூக்கமே இருக்காது தளிகா(ஏன்னா அப்பப்ப எனக்கு வந்து டாட்டா..பை பை..சொல்லும் அதான்)இப்ப கூட பாருங்க சுரேஜினிக்கு பதிவு போட்டு கொஞ்ச நேரம் கூட ஆகலை,உடனே அன்றைக்கு வந்துட்டு ரொம்ப படுத்தி எடுக்குது.அப்புறம் சரியாக கொஞ்ச நாளாகும்.சரிப்பா உடம்பை பார்த்துகோங்க.இந்த லிங்கை தான் தேடுறீங்களான்னு தெரியலை.எனக்கு தெரிந்து இது தான் கிடைச்சது.http://www.arusuvai.com/tamil/node/10630

ஹாய் கீதா ஆச்சல்..நான் நல்லா இருக்கிறேன் ..வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்கள் குட்டிப்பெண் மிகவும் அழகு.ஆமாம் கீதா எனக்கும் பலமுறை தளத்தை திறக்க சிரமமப்பட வேண்டியதா இருக்கு.மீண்டும் பேசுவோம்
ஹாய் சீதாலக்ஷ்மி ஆன்டி..பரவாயில்லை நீங்கள் மனம் நிறைந்து வாழ்த்தியதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீங்கள் வேலையெல்லாம் முடிந்து மெல்ல நேரம் கிடைக்கும்போல் வந்து பதிவு போடுங்கள்..உங்கள் ஒவ்வொரு பதிவும் ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும்.
ஜெ இது வந்ததும் ரொம்ப பயந்தேன் ஆனா இப்போ பாத்தா ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கு இந்த ப்ரச்சனை போல..ரீமா நார்மல் டெலிவெரியால் பிறந்தவள் தான்..ஆனால் போன முறை எதுவும் தெரியவில்லை இம்முறை உடம்பெல்லம் லேசா அரிப்பு போல எப்பவாவது .அதான் நல்லெண்ணை தேய்த்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்..பிறகு சுடுநீரால் குளிக்கலாம் தானே சோப்பு தேய்த்து?எனக்கு சுடுதண்ணி குளியல் ரொம்ம்ப இஷ்டம்
அதே தான் ஒத்தைப் பிள்ளையை நினைத்தால் எனக்கும் என்னவோ ஒத்துவராது..எனக்கு இப்போல்லாம் ஒரு சின்ன மனநிம்மதி ஒரு குழந்தை வந்திவிட்டால் என் மகளுக்கும் விளையாட ஆள் ஆகிடுச்சு என்று.
இனி வெளியே போனால் மற்ற குழந்தைகளுக்காக ஏங்குவது குறையும் என்று நினைக்கிறேன்..இரண்டு நாள் முன்பு தெரிந்தவரின் இரண்டு மாத குழந்தையின் தொட்டிலை கிட்டத்தட்ட 1 மணிநேரம் ஆட்டியிருக்கிறாள்...சொன்னால் கேட்காமல் கைவலிக்க கைய்யை மாற்றி மாற்றி ஆட்டு தான்.வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெ.

ஹாய் சுதா ..வாழ்த்துக்களை கண்டு மகிழ்ந்தேன்..நீங்கள் வேலைக்கு போகிறீர்களா?இல்லையென்றால் வீட்டில் டைம் மேனேஜ்மென்ட் ரொம்பவும் ஈசி தான்...அழகா டைம் டேபில் போட்டா தினம் கொஞ்ச நேரம் மிஞ்சும்
முதலில் சமையல் இன்னின்னது சமைப்பேன் என்று முந்தைய இரவே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் அத்ற்கான பொருட்கள் உண்டா என்றும் அன்றே செக் பன்னி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்..இல்லையென்றால் ஒன்று தக்களி கறிவேப்பிலைக்கெல்லாம் அன்னேரத்தில் ஓடனும் அல்லது வேற எதுவாவது செய்யலாம் என்று ப்லான் மாறி யோசிக்கவே ரொம்ப நேரம் போகும்.மனோஹரி அவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உணவு த்ரெட்டில் நிறிய டிப்ஸ் உண்டு...அதன்படி குழந்தைக்கு சாப்பிட வைக்க கூடினால் 20 நிமிடம் போதும்.
இன்னும் முடிந்தால் முந்தைய நாள் இரவே ப்ரேக்ஃபாஸ்டுக்கான சில பேசிக் விஷயங்களை செய்து வைத்து விட்டு படுக்கலாம்..காலை எழுந்ததும் பல் விளக்கினதோடு அடுப்பில் தயார் பன்ன தொடங்கலாம்..உதாரணத்திற்கு நான் உப்புமா என்றால் தாளித்து விட்டு குளிர் நீர் ஊற்றி மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைப்பேன்..அடுத்த நாள் கொதிக வைத்து ரவை சேர்த்து கிளறி இறக்குவது சுலபம்..ப்ரேக்ஃபாஸ்ட் என்றால் கட்டாயம் முந்தைய நாள் இரவே செய்து வைத்து விடுவேன்..
இடியப்பம் செய்தால் இரண்டு நாளைக்கு சேர்த்து செய்யலாம்..இடி தட்டில் போட்டு எடுத்தால் புதுசு தான்..அல்லது முந்தைய நாளைய புட்டு இடியப்பம் போன்றவை அடுத்த நாஅளுக்கு விதவிதமா உப்புமா உண்டக்க்கலாம்..அல்லது தோசை இடி என சாப்பிடுபவரானால் அது இன்னும் ஈசி..சாம்பார் பருப்பை முதைய நாளே வேக வைத்துக் கொள்ளலாம்..சமையலில் சில சமயம் 5 நிமிடம் எடுக்கும் விஷயம் தான் ஏன் என்று தெரியாமல் இழுத்தடித்து லேட்டாகி விடும்..நீங்களே யோசியுங்கள் எதையெதை எப்படி செய்யலாம் என்று.
மாலையில் டிவி பார்க்கும் நேரத்தில் கூட சும்மா இருக்காமல் சப்பாத்தி செய்வது.காய்கறி நறுக்கும் வேலை செய்யலாம்..கூடினால் 2 சீரியல் மட்டும் பாருங்கள்..அப்போ நிறைய டைம் கிடைக்கும்.துவைப்பது ஆடோமேட்க் வாஷிங் மஷின் என்றால் வேலையே இல்லை அது இல்லையென்றால் தினம் காலை எல்லோரும் வீட்டை விட்டு கிளம்பியதும் செய்யுங்கள்.எந்த வேலையும் அப்பப்ப செய்து வைத்தால் பாதி வேலை கம்மி...பின் முக்கியமா வீட்டிலுள்ள அங்கத்தினர் சின்ன சின்ன காரியங்களை அவங்களே செய்து கொண்டால் நமக்கும் சுலபம்..ஷூவை கழட்டி அதே இடத்தில் வைப்பது,,சாக்ஸ் ட்ரெஸ் போன்றவையை சரியாக துவைக்க போடுவது,சாப்பிட்டால் உடனே பாத்திரங்களை சினிகிற்கு கொண்டு வருவது மீந்த பொருட்களை மூடி போட்டு வைப்பது போன்ற வேலையை அவர்களும் சரியாக செய்தால் நமக்கு வேலை கம்மி..உடம்பால் கஷ்டப்பட்டாலும் மனதால் அதிகம் ஸ்ட்ரெஸ்ட் அவுட் ஆகாதீங்க.நிச்சயம் நல்ல செய்தியோடு வருவீர்கள் என ப்ராத்திக்கிறேன்.

ஹாய் சுகன்..நான் நிச்சயம் நல்லா இருக்கேன்.வலி ஒருபக்கம் உண்டு ஆனால் அது தவிற நான் ரொம்ம்ம்ப சந்தோஷமா இருக்கேன் வலி தான் அனுபவிக்க விடுவதில்லை.ஆனால் கூட ரொம்ப குறைந்து விட்டது நேற்று உறங்கினேன் அதுவே ஒரு நல்ல சைன்.இங்கேயும் இந்திய மருத்துவர்களிடம் போவேன் அதனால் மருந்து எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் அதே சமயம் கூடினால் கட்டாயம் மருந்து எடுக்க வேண்டும் என்றார்.நேற்று தான் செல்வியக்கா சொல்லி கிராம்பு வைக்க ஆர்ம்பித்திருக்கேன்..ஆனா எங்கே வைப்ப்பது என்று தான் கன்ஃபியூஷன்..அந்த பல் வலியில்லை அதை சுற்றியுள்ள கம்ஸ் தான் சரியான வலி..அதில் பட்டு விடுமோ என்று பயம்..பக்கத்து பல்லால் கடித்து பிடித்து 1 மணிநேரம் படுத்தேன் பின் தூக்கத்தில் முழுங்கிடுவேன் என்று பயந்து துப்பி விட்டேன்..ஐஸ் கட்டி கவரில் கட்டி கண்ணத்தில் வைத்து செல்வியக்கா படுக்க சொன்னாங்க..நான் கூட பெட்டில் ஆகாதோ என்றெல்லாம் யோச்த்தேன் ஆனால் அப்டியே தூங்கினது தெரியலை அவ்வளவு சுகமாக இருந்தது.
நல்ல வேள சொன்னீங்க நான் பேருக்கு 1/4 ஸ்பூன் உப்பு போட்டு கார்கில் பன்னிகிட்டிருந்தேன்.பல்லு வெளியே வந்தது தான் பாதி ஆனால் இப்போ என்னமோ அதுக்கு கிறுக்கு..நீங்கல்லாம் சொன்னப்ரம் தான் தெளிவாகியிருக்கேன்..பயந்துட்டிருந்தேன்.தேன்க்ஸ் சுகன்

முதல் குழந்தைக்கு இங்கிருந்து இந்தியா சென்றவுடன் டிடி வேக்சின் எடுத்துக் கொண்டேன்..இது இம்முறையும் தேவைப்படுமா?
நம் ஊரில் குழந்தைகளுக்கு டயபர் கட்டிவிடுவது பற்றி என்ன அபிப்ராயம்?முதல் குழந்தைக்கு முதல் பல மாதங்களுக்கு டயபர் போடவில்லை..இங்கு வந்தபின் தான் ஆரம்பித்தேன்..ஆனால் தூங்காமல் குழந்தை இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.
இம்முறை டயபர் பழக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..இந்தியாவில் அது எவ்வளவு சாத்தியம் நமது க்லைமேடுக்கு ஏற்ப?எனக்கு டியூ செப்டெம்பரில் இருக்கும்

அன்பு தங்கை தளிகா எப்படி இருக்கீங்க? பதிவுகளுக்கு பதில் எழுதவே நேரம் அமைவதில்லை,இன்றாவது அது முடிகின்றதா என்று பார்க்கலாம். நீங்க புதியதாய் முளைத்த பல் வலியிலிருந்து இப்போது விடுபட்டிருப்பீங்கன்னு நம்புகின்றேன்.உங்களுக்கு இப்ப நல்லா பசி எடுக்கின்றதா? நல்லா சாப்பிட முடிகின்றதா? உங்க சின்ன வயது அனுபவத்தை படித்தேன் பாவம் நீங்க...அந்த டெய்லரின் பயமுறுத்தலுக்கு ரொம்ப பயந்துட்டீங்க போல் உள்ளது, இப்படியும் குழந்தைகளை பயப்படுத்துவார்களா! என்று தான் தோன்றியது. அந்த அனுபவத்தால் நீங்க ரீமா செல்லத்துக்கு "//அதனால் என் மகளிடம் என்றுமே கவனமாக மனதில் எதுவும் பதிந்து விடாத அளவுக்கு பார்த்து பார்த்து தான் செய்வேன்//" என்று கூறியது ரொம்ப டச்சிங்கா..... இருந்தது. இது தான் தாய்மையின் உச்சக்கட்ட பாசம் என்பதோ?!!!, கேட்க்கவே ஆனந்தமாய் இருந்தது.

மேலும் குழந்தையை அவங்க அப்பாவுடனே சேர்ந்து சாப்பிட பழக்கி விடுங்க, அது தான் ரொம்ப முக்கியம். பிறகு TT தடுப்பூசி போடனுமா என்று கேட்டிருந்தீங்க, நிச்சயமாக போடவேண்டும். குழந்தைகளின் இடைவெளியை அனுசரித்து கொடுக்கப்படும் அளவுகள் தான் வித்தியாசப்படும். அதில் ஒரு டோஸ் எடுத்தாலும் அதை எட்டு மாசத்திற்குள் போட்டுவிட வேண்டும் இல்லையென்றால் சிசு நன்றாக வளர்ந்த பிறகு அந்த தடுப்பு மருந்தால் எந்த பலனும் குழந்தையை சென்றடையாது., மற்றபடி இதைக் குறித்து உங்க மருத்துவரின் ஆலோசனையைப் பின் பற்றுவது தான் சரி. மேலும் குழந்தைகளுக்கு டைபர்ஸ்ஸை பொருத்தவரை நூறு சதவீதம் காட்டன் துணியால் தைத்த சாதாரண டைபர்ஸ் தான் சிறந்தது, மற்றபடி குழந்தை தூங்கும் நேரத்திலும் மற்றும் வெளியில் செல்லும் நேரத்திலும் மட்டும் அசம்பாவிதங்களைத் தடுக்க ரெடிமேடான டைபரை பயன் படுத்துவது நல்லது என்பது என் கருத்து. ஒகே டியர் மீண்டும் மற்றொரு முறை வந்து உங்களை சந்திக்கின்றேன் நன்றி.

அன்பு மனோஹரி அக்கா
உங்கள் பதில் கண்டு மகிழ்ச்சி.அப்பப்பா பல் வலியை துரத்திட்டோம்ல.எல்லா ஹோம் ரெமெடியும் செஞ்சு ஓட்டியாச்சு..பசி தான் இன்னமும் வந்தபாடில்லை..எல்லாமே அறுவறுப்பாக இருக்கு.நான் வெஜ் என்ற ஒன்றை கண்ணால் காண சஹிக்கவில்லை.இத்தனை காலம் இதையா சாப்பிட்டோம் என்பது போல் உள்ளது.
அது எப்படி காட்டன் துணியால் டயபரை தைப்ப்ர்ர்கள்.எங்கள் வீட்டில் மகளுக்கு வெள்ளை காட்டன் நேப்பி துணி என்று கிடைக்கிறது ஓரம் அடிக்கப்பட்ட துணி அதனை தான் உபயோகித்தோம் 1 வயது வரை.ஆனால் அதனை மடித்து பேபி பேன்டியினுள் வைத்து விடுவோம்..இந்த தைக்கும் முறை கொஞ்ச நல்லா இருக்கும் போலிருக்கே.நேரம் கிடைத்தால் சொல்லி தந்திடுங்க.
தற்பொழுது கீழ் முதுகுதண்டில் நடுவே வலிக்கிறது..எல்லோருக்கும் இப்படி இருக்குமா?1 வாரத்துக்கு பிறகு டாக்டரிடம் சந்தேகம் கேட்கலாம் என்றிருக்கிறேன் இருந்தாலும் தோழிகள் சொன்னால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

தளிகா, வாழ்த்துக்கள். நான் வாழ்த்துவதற்கு கொஞ்சம் லேட்டாகி விட்டது குறை நினைக்க வேண்டாம். எனக்கும் உங்களைப் போல் முதுகு வலி பிள்ளை பிறக்கும் வரை இருந்தது. எனக்கு டாக்டர் சொன்னது எனது உயரம் தான் காரணம் என்று. நான் எதோ 6 அடி உயரம் என்று கற்பனை செய்து விட வேண்டாம். நான் 5'2'' தான்.
வாணி

அப்படியா..எனக்கு இப்ப தான் கொஞ்சம் சமாதானமா இருக்கு..நான் உயரம் தான் அதனாலாக இருக்கலாம் என இப்போ சமாதானமாக இருக்கு..இன்னும் ஒரு கேள்வி அடிக்கடி ரெஸ்ட் ரூம்ச இருக்கிறதே எல்லோருக்கும் இருக்குமா?
ஆனால் அந்தளவு தண்ணீரும் அதிகப்படி குடிக்கும் பழக்கமும் உண்டு எனக்கு ஆனால் சிறுநீர் சம்மந்தமாக வலியோ வேறு கஷ்டமோ இல்லை இருந்தாலும் இரவில் தூக்கம் கெடுகிறது மணிக்கொருதரம் எழ வேண்டியதாக உள்ளது
thank u so much..i feel releived

மேலும் சில பதிவுகள்