சிக்கன் காய்கறி சால்னா

தேதி: February 17, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

எலும்பு சிக்கன் பீஸ் - கால் கிலோ
விரும்பிய காய்கறிகள் - கால் கிலோ
(கேரட், அவரை, உருளை, காலிப்ளவர்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம்மசாலா - கால் ஸ்பூன்
சில்லிபவுடர் - 1-2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 4
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
மல்லி, புதினா - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

சிக்கனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா, காய்கறிகள் கட் செய்து கொள்ளவும், தேங்காய் முந்திரிப்பருப்பு அரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் வதக்கி, இஞ்சிபூண்டு வதக்கி, கரம்மசாலா, தக்காளி, மல்லி, புதினா, மிளகாய், உப்பு போட்டு மசிந்தவுடன் சிக்கன் சேர்க்கவும். நன்கு கொதிவந்ததும் சிம்மில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
பின்பு காய்கறிகளை சேர்க்கவும். காய் வெந்தவுடன் தேங்காய் அரைத்தது சேர்த்து கொதி வந்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து இறக்கவும்.
சுவையான சிக்கன் காய்கறி சால்னா ரெடி. இதனை சப்பாத்தி, ப்ளைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.


சால்னாவில் உள்ள காய்கறிகள் சாப்பிட நன்றாக இருக்கும். காய் சாப்பிடாத குழந்தைகள் ,பெரியவர்கள் கூட இந்த காய்கறியை விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் கறிமசாலா சேர்ப்பவர்கள் சில்லி பவுடர் குறைத்து சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா,

இன்று இரவு டின்னருக்கு இந்த சிக்கன் காய்கறி சால்னா செய்தேன். சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா மேட்ச் ஆச்சு! நான் இதுவரை உருளைகிழங்குதவிர வேறு எந்த காயும் சிக்கனுடன் சேர்த்து சமைத்ததில்லை. இன்றுதான் முதல்முறையா இந்த காம்பினேஷனில் ஒரு அயிட்டம் செய்தேன். நன்றாக வந்தது. நான் உருளைகிழங்கு, கத்திரிக்காய், கேரட் மற்றும் காப்ஸிகம் போட்டு செய்தேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க மகிழ்ச்சி.சிக்கனோடு எந்தக்காயும் சூட் ஆகும்.நல்ல இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ஆசியா!

சிக்கன் காய்கறி சால்னா செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. பட்டர் சிக்கன் நேற்று செய்தேன். இதில் பல வகை குறிப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் தங்களின் ‘பட்டர்’ சிக்கன்’ வித்தியாசமான சுவையுடன் ருசியாக இருந்தது.

அக்கா என் குறிப்பு செய்து நல்ல பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.சார்ஜா வந்தாச்சா.அடுத்து உங்கள் குறிப்பு தானே சமைத்து அசத்தலாம் -11.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ஆசியா!

சில நாட்களுக்கு முன் நான் ஷார்ஜா வந்து சேர்ந்து விட்டேன். இனி எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.

நலமா?அந்த த்ரெட்டில் நம்பர் பார்த்து அழைகிறேன்.நேரில் பேசலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா உங்களின் சிக்கன் காய்கறி சால்னா இன்று செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நாங்கள் நெய்ச்சோறுடன் சாப்பிட்டோம். பொருத்தமாக இருந்தது. நன்றி ஆசியா
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் குறிப்புக்கள் செய்து பார்த்து பின்னூட்டம் அளித்து வருவதற்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.