ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர்

தேதி: February 17, 2009

பரிமாறும் அளவு: (3- 4) நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஐஸ் ஆப்பிள் (நுங்கு) - 10
இளநீர் - 3
தேசிக்காய் (எலுமிச்சம் பழம்) - 2
நன்னாரி சிரப் (சர்பத்) - அரை கப்
தண்ணீர் - 2 டம்ளர்
ஐஸ் கட்டி - தேவையான அளவு


 

ஐஸ் ஆப்பிளை(நுங்கை) தோல் சீவி கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று சுற்றி அதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
இளநீரிரை சீவி வழுக்கையுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். தேசிக்காயை(எலுமிச்சம் பழுத்தை) பிழிந்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நுங்கு, இளநீர், எலுமிச்சம்பழசாறு (தேசிக்காய்சாறு), தண்ணீர், நன்னாரி சிரப்(சர்பத்) ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
கலக்கியவற்றை அழகிய கிளாஸ்களில் ஊற்றி ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.


ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர் மிக மிக சுவையானது. வெயில் காலங்களுக்கு ஏற்றதும், சத்துள்ளதும் ஆகும். கவனிக்க வேண்டிய விசயங்கள்- ஜஸ் ஆப்பிளை(நுங்கை) தோல் சீவி கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று சுற்றி அதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும், இளநீரிரை சீவி வழுக்கையுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். எச்சரிக்கை- ஐஸ் ஆப்பிள்(நுங்கு) அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி பருகவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் நுங்கு இளநீர் இன்று செய்தேன்.சென்னை வெயிலுக்கு ரொம்ப இதமாக இருந்தது.அருமையான் பானம் குறிப்புக்கொடுத்த உங்களுக்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்கள் நுங்கு இளநீர் இன்று செய்தேன்.சென்னை வெயிலுக்கு ரொம்ப இதமாக இருந்தது.அருமையான் பானம் குறிப்புக்கொடுத்த உங்களுக்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்கள் நுங்கு இளநீர் இன்று செய்தேன்.சென்னை வெயிலுக்கு ரொம்ப இதமாக இருந்தது.அருமையான் பானம் குறிப்புக்கொடுத்த உங்களுக்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா ஜில் ஜில் ஜஸ் அப்பிள் இளநீர் செய்து பார்த்து பின்னோட்டம் அனுப்பியதிற்கு உங்களுக்கு எனது நன்றி.

இப்படிக்கு
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"