தக்காளி சாதம்

தேதி: February 18, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
கடுகு - தாளிக்க


 

முதலில் அரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். சாதத்தினை ஆறவிடவும்.
வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியினை நீளமாக நறுக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
பூண்டினை நசுக்கி கொள்ளவும். கொத்தமல்லியை பொடிதாக அரிந்து வைக்கவும்.
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் நசுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
மீதமான தீயில் தட்டு போட்டு மூடி வேகவிடவும். (தண்ணீர் ஊற்ற கூடாது)
கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
இப்பொழுது வேகவைத்து உள்ள சாதத்தில் இதனை சேர்த்து கிளறி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான தக்காளி சாதம் ரெடி.
இத்துடன் தயிர் பச்சடி, அவித்த முட்டை அல்லது சிப்ஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கீதாஆச்சல் நலமாக இருக்கீங்களா. உங்க தக்காளிச்சாதம் செய்து உடனே பின்னூட்டம் தருகிறேன். (சாதம் இருந்தது) சூப்பர் டேஸ்ட். நன்றாகவும் வந்திருந்தது. சீக்கிரமாகவும் செய்யமுடிந்தது. ரெம்ப நன்றி. அன்புடன் அம்முலு.

அம்முலு,
மிகவும் நன்றி.
எப்படி இருக்கிங்க? நாங்கள் எல்லோரும் நல்லா இருக்கோம் பா..
செய்தவுடன் பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் சந்தோசம் பா…ஆமாம் மிகவும் சீக்கிரமாக செய்துவிட முடியும். நானும் இப்படி தான் அடிக்கடி செய்வேன்.
இப்படி செய்யும் தக்காளி தொக்கினை சாப்பத்தி, தோசையுடன் கூட சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா ந்லமா?பொன்னு எப்படி இருக்கா?பொன்னு பேரு என்ன?இன்று மதியம் இந்த சாதம் தான் செய்தேன்,நல்லெல்னெய் ஊற்றி தாளித்தேன்,சுவையாக இருந்த்து,எங்க வீட்டில் இப்படி தான் இருக்கும்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிகவும் நன்றி ரேணுகா.
ஆமாம் நல்லெண்ணெய் ஊற்றி சமைக்கும் பொழுதே சுவை வித்தியாசமாக நன்றாக இருக்கும்.
என்னுடைய பொண்ணு பெயர் அக்ஷ்தா(Akshata)…இந்த மாதம் கடைசியில் அவளுக்கு 2 வயது ஆக போகின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா உங்கள் தக்காளிசாதம் செய்தேன். செய்வதற்கு ஈஸியாக சுவையாக இருக்கு. நன்றி!

மிகவும் நன்றி மாலி.
நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தால் இப்படி தான் செய்து சாப்பிடுவேன்…இதற்கு சிப்ஸ், ராய்தா, அல்ல்து முட்டை என்று ஏதவாது கூட சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாச்சல் தக்காளி சாதம் செய்தேன் மிகவும் நன்றாகயிருந்தது. இன்றுதான், முதன்முறையாக தனியாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்துச் செய்தேன், வித்யாசமான சுவையோடு, நன்றாகயிருந்ததுப்பா .

அன்புடன்:-)..........
உத்தமி:-)

கீதாஆச்சல் உங்க தக்காளி சாதம் நல்லா வந்தது.நன்றி.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

உத்தமி அக்கா,
முதல் தடவையாக இப்படி செய்கின்றாங்களா..மிகவும் சந்தோசம்…எப்படி இருந்த்து…அம்மா எப்பொழுதும் இப்படி தான் செய்வாங்க…..நான் கலேஜிக்கு கொண்டு போனால் ப்ரேக் டைமிலே எல்லாம் காலியாகிவிடும்…
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

உத்ரா,
எப்படி இருக்கிங்க…என்ன ஆளயே கானும்…
மிகவும் நன்றி பா.
அன்புடன்,
கீதா ஆச்சல்