சிக்கன் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)

தேதி: February 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பன் - 1 (லாங் பன்/சின்ன பன்)
மயோனிஸ் - 2 தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - பாதி (விதை நீக்கியது)
ஸ்பினாச்(அ)சாலட் கீரை - 2 இலை
சமைத்த சிக்கன் துண்டு - அரை கப் (உங்களுக்கு பிடித்தது போல் சமைத்து வைக்கவும்)


 

பன்னை இரண்டாக நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
அதில் நெய் தடவி தோசை கல்லில் போட்டு வாட்டி எடுத்து வைக்கவும்.
ஒரு பாதியில் மயோனிஸ் தடவவும். மறு பாதியில் டொமேட்டோ கெட்சப் தடவவும்.
ஒரு பாதி பன் மேல் தக்காளி துண்டுகள் வைத்து, மற்றொரு பாதி மேல் கீரை வைக்கவும்.
அதன் மேல் சிக்கன் துண்டுகள் வைத்து, மறு பாதி பன்னை மேலே வைத்து மூடவும்.
சுவையான சுலபமாக செய்யக்கூடிய சிக்கன் சாண்ட்விச் தயார்.
கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அடடா இன்னும் மதிய சமையல் முடியலை. அதற்குள் ஒரு விசிட் பண்ணலான்னு வந்தா. அழகு வனிதா குறிப்புடன் போட்டோவும். அடடா! என்ன ஒரு அழக்கான சிரிப்பு வனிதா.
இன்று வெஜ் சமையல்தான். நாளை கண்டிப்பா இது செய்திட்டு பின்னூட்டம் அனுப்பறேன். விக்னேஷ்க்கு ரொம்ப பிடிக்கும்!

வனிதா, நிசமாவே நீங்கதானா? ஏதோ எட்டாங்கிளாஸ் பொண்ணு மாதிரி இருக்கீங்க!!
உங்கள் பதிவுகளிலிருந்து உங்களை ஒரு 30 வயதுப் பெண்ணாகக் கற்பனை செய்திருந்தேன்.

வெரி வெரி சாரி வனிதா!!!!!!

indira

வு ஹூ சான்ஸே இல்லை எட்டாங் கிளாஸ் தான்.

நல்ல குறிப்பு, இனி வனிதாவின் முகத்தை பார்த்து கொண்டே பேசலாம்.

ஜலீலா

Jaleelakamal

சாய் கீதா... அந்த பொண்ணு பாவம்... அதுக்கு 20 வயசு தான் ஆகுது. பேரு ஸ்ருதி. இலங்கை பெண். என்னிடம் வேலை பார்க்கிறாள். அவளுக்கு நம்ம அறுசுவை'ல படம் வரணும்'னு ரொம்ப ஆசை, அதான் அனுப்பினேன். :)

திருமதி. ஹுசேன்... நீங்க சொல்றது சரி... எனக்கு வயசு அதையும் தான்டிடுச்சு. ஹிஹிஹீ.... இது சத்தியமா நானில்லை. ;)

இந்திரா... கண்டிப்பா பேசினது இந்த பொண்ணு இல்லை.... அதனால் மறக்காதிங்க பேசினதை.

ஜலீலா... நீங்க கூடவா இதை நான்னு நினைச்சுடீங்க??!!! நம்ப முடியவில்லை.... வில்லை... இல்லை. நானில்லை நானில்லை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹே..... வனிதா... அழகுக் குட்டிப் பொண்ணு உங்க சிஸ்டர் வாணி தானேப்பா!...... அப்படியில்லாமல் நீங்களாயிருந்தால், நம்பவே முடியலப்பா! இந்த பால் வடியற முகத்தோட இருக்கிற குட்டிப்.... பொண்ணா! அவ்வளவு குறும்பு பண்ணுது!.... (சும்மா தமாசுக்குப்பா.....:)

அன்புடன்:-)........
உத்தமி:-)

உத்தமி நீங்க எல்லாருக்கும் ஒரு படி மேல... அது யாரு என் சிஸ்டர் "வாணி"??!!! வனிவசு 'னு இருக்கும் என் பெயர். வனி நான் தான். வசு என் தங்கை பேரு. குழப்பம் தீர்ந்ததா?! நான் குட்டி பொண்ணு இல்ல, கொஞ்சம் சுட்டி பொண்ணு. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,அட்மின் ஏதோ பதிவில சின்ன வயசுல எடுத்த போட்டாவெல்லாம் அனுப்பகூடாதுனு சொல்லியிருந்தாரே நீங்க அதை படிக்கலையா?:-)

போங்கப்பா, கடைசீல எங்க எல்லாரையும் இப்படி ஏமாத்தீட்டீங்களேப்பா! கா...மெடி பண்ணீட்டீங்களேப்பா......

நல்லவேளை, இப்பவாவது தெளிவு படுத்தினீங்களே. உங்கள் தங்கை பெயர் வாணிவாசு என நிணைத்தேன். (பாவம், அவங்க யாரோ, எங்கிருக்காங்களோ?) பார்த்தீங்களா... இந்த ஆங்கிலம் நம்மையெல்லாம், எப்படி குழப்புதுன்னு. இப்பத்தான் அட்மின் ஏன் தமிழில் டைப் பண்ணுங்கோனு சொல்றாருனு புரியுதுப்பா:)

அன்புடன்:-).....
உத்தமி:-)

கவி, உத்தமி... நான் இந்த படத்தை இந்த குறிப்பு கூட அனுப்பலை, வேர குறிப்பு கூட அனுப்பி இருந்தேன். நேற்று இந்த குறிப்பு அனுப்பி ரொம்ப நாள் ஆச்சுன்னு அட்மின் அண்ணா'க்கு நினைவு படுத்தி மெயில் அனுப்பினேன்.... அண்ணா தான் விளையாடிட்டார். :( கவி நான் சின்ன வயசுல கூட இவ்ளோ அழகா இருந்தது இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்களா அது இல்ல அட்மின் போட்டோவை மாத்தி போட்டுட்டாரா.ஆட்டோகிராப் மல்லிகா மாதிரி இருக்கிங்க.அப்போ நிஜமாவே நீங்க ஒத்துக்கிறீங்களா நீங்க அழகு இல்லைன்னு.இருந்தாலும் நீங்க சின்ன வயசுல எடுத்த போட்டோலாம் குடுத்திருக்க கூடாது வனி.

வனி சொன்னாப்பல சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க... நானும் வேற மாதிரி கற்பனை செய்து வச்சிருந்தேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அட பாவமே... நான் அழகா இருப்பேன்னு நான் சொல்லவே இல்லையே. :( இது நானில்லைன்னு தானே சொல்றேன். உண்மைய சொன்னா கூட நம்ப மாட்டங்கறாங்கப்பா.

U TOO ILA ??!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இருந்தாலும் இவ்ளோ அப்பாவியா இருக்கக்கூடாது வனிதா.எல்லாம் இது தான் Chance-னு கலாய்க்கறாங்க.

இந்த காலத்துல இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே வனிதா??Ha ha

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

பொறுத்தது போதும் பொங்கி எழுங்க:-))

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

சிக்கன் ஸான்ட்விச் சூப்பராக இருக்கு.இதை நாளை கண்டிப்பாக செய்வேன்.தாங்க்ஸ் வில்வராணி.ஸ்ருதி சூப்பராக இருக்காங்க.

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

வனிதா,
சிக்கன் சான்ட்விச்தானே நமக்கு எதுக்குன்னு பாக்காம இருந்தேன். அப்புறம் பாத்தா அழகு பொண்ணோட போட்டொ. ஆஹா வனிதா போட்டோவை மிஸ் பண்ணியிருப்பமேன்னு பாத்தா , அது நீங்க இல்லன்னு அடிச்சு சொல்ரீங்க. உங்க போட்டோவும் சேத்து போட்டுருக்கலாமே??
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

நான்கூட பார்த்ததும் வனிதா மல்லிகா மாதிரி இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். இல்லையா? ஏமாற்றி விட்டீர்கள். :-( ஸ்ருதி அழகாக இருக்கிறார்.

‍- இமா க்றிஸ்

உத்ரா... பாவம் சின்ன பிள்ளைங்க, ஏதோ ஆசை கின்டல் பண்ணி விளையாடறாங்க. hihiii... ;) இதுக்குலாம் தேவை இல்லாம பொங்ககூடாது. சரியா?! சமத்தா இருக்கனும் என்னை மாதிரி. :D

செய்து பார்த்து சொல்லுங்க ஷஹுல, எப்படி இருந்துசுன்னு. :) ஸ்ருதி'ட உங்க எல்லாருடைய கமன்டும் சொல்லிட்டேன்.

கிருத்திகா, என் படத்தை பாக்காம இருக்கும் போது இருக்கும் ச்வாரச்யம் பார்த்தா போயிடுமில்ல... அதான் போடல. ;)

இமா, அவ நேரில் இன்னும் அழகா இருப்பா... போட்டோ 'கு பயந்துகிட்டே நிக்கறா. நீங்க சொன்னதையும் அவகிட்ட சொல்லிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நலமா?போப்பா நானும் ஆர்வத்துடன் பார்த்தேன் அட நம்ம வனிதா இதுவான்னு கீழே படிச்சதும் புஷ் ந்னு போச்சு :(

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi vanitha neega entha vilvaarani unga district ethu

எப்படி இருக்கீங்க? ...வனி எனக்கே இப்பதான் நியாபகம் வந்தது என்ககு அந்த பொண்ணு தெரியும் ஆனால் பெயர் செல்வின்னு நியாபகம் என் சொந்தகாரர் இலங்களையில் இருந்தப்ப அவங்க வீட்டில் வேலை பார்த்தாள்...நல்ல பொண்ணு பேசுவதே அருமையாக இருக்கும் 95% அதே பொண்ணுதான் பெயரை கேட்டதும் கொஞ்சம் சந்தேகம் அந்த பொண்ணிடம் கேளுங்க காயல்பட்டிணம் தெரியுமா வந்தது உண்டா என ஆமாம் என்றால் என் பெயரையும் சொல்லுங்க....நன் நினைக்கும் அதே பொண்ணு என்றால் ரொம்ப சந்தோச படுவேன்...இனி அவளை பார்க்க முடியாது என நினைத்தேன் பார்கலாம்!

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் சுமிதா... உங்க பதிவை ரொம்ப தாமதமா பார்க்கிறேன். என் பெயர் கதை அறுசுவையில் அங்க அங்க இருக்கே. சிரியா பகுதியில் பாருங்க, என் சொந்த ஊர், பெயர் காரணம் எல்லாம் இருக்கு :) கூடவே ஏன் கேட்டீங்கன்னு தெரிஞ்சுக்க ஆசை... சொல்லுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா... எத்தனை வருஷம் கழிச்சு பார்க்கிறேன் ;( இப்போ நான் அவளை எங்குட்டு போய் தேட?? அவ சிரியாவிலேயே இருக்காளோ இல்லையோ... பாவம் ஊருக்கு போயிடனும்னு புலம்பிட்டே இருப்பா. பெயர் எல்லாம் குழப்பிக்காதீங்க... இலங்கை வாசிகள் பெயர் வாயில் நுழையாதுன்னு அவங்க பாஸ்போர்ட்ல ஒரு பெயர் இருக்கும், வீட்டில் ஒரு பெயர், வெளியே சொல்வது ஒன்னுன்னு 10 பேர் வெச்சிருப்பாங்க. நான் ஒருவரிடம் வேலைக்கு சேர்த்து விட்டு வந்தேன், ஆனா அவங்களும் இப்போ வேறு ஊருக்கு போயாச்சு, இப்போ யாரிடம் எங்க இருக்கான்னு தெரியல. என் தோழி அவங்க கணவரை பார்க்க டமாஸ்கஸ் போனா விசாரிக்க சொல்லி தெரிஞ்சா கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா