வாழ்த்து அட்டை செய்முறை - 6

தேதி: February 18, 2009

4
Average: 3.5 (2 votes)

இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை. இப்போது இலகுவான முறையில் எம்போஸிங் மற்றும் teabag folding முறையில் வாழ்த்து அட்டைகள் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

 

வெறும் வாழ்த்து அட்டைகள் & உறைகள் (blank cards & envelopes)
வர்ண கடதாசிகள் (scrappingbooking papers)
டிசைனர் கத்தரிக்கோல்கள்
கத்தரிக்கோல்
போம் (Foam) / Mouse pad
குந்தன் (Color stones)
செயற்கைப் பூக்கள்
பெயிண்ட்கள்
ரப்பர் ஸ்டாம்புகள் (Rubber stamps- eg:- 'Happy Birthday', 'Happy Anniversary', etc.)
சிறிய ஸ்பாஞ் துண்டு (spong piece)
பசை/கோந்து (glue)
அடிமட்டம் (Ruler)
ஸ்டைலஸ் டூல்(Stylus tool) - எம்போஸிங் செய்ய (for embossing)
ஸ்டென்ஸில்ஸ் (Stencils)

 

மவுஸ் பாட்/போம் ஷீட்: - இதன் மேல் வைத்து எம்போஸிங் செய்யும் போது தெளிவான pop-up effect கிடைக்கும். Teabag Folding Tiles பேப்பர்கள்:- Teabag Folding என்பது வர்ண கடதாசிகளை கொண்டு செய்யப்படும் ஒரு அழகியற்கலை ஆகும்( ஒரிகமி-Origami போல). இதற்கெனவே செய்யப்பட்ட வர்ண கடதாசிகள் கடைகளில் கிடைக்கும். அல்லது சாதாரண வர்ண கடதாசிகள், பரிசுபொருட்கள் சுற்ற பயன்படும் காகிதங்கள். scrapbooking கடதாசிகள் என்பவற்றையும் பயன்படுத்தலாம்.
ஸ்டென்ஸில்ஸ் (Stencils):- இது பலவிதமான வடிவங்களில் கிடைக்கும். பூக்கள், கரைகள், இலைகள், பூச்சிகள், விலங்குகள் என பலவிதமாக கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு தேவையான ஸ்டென்ஸில்களை நீங்களே செய்தும் கொள்ளலாம். பிடித்தமான ஒரு படத்தை ஒரு மட்டை அல்லது போமில் வரைந்து பிளேடால் வெட்டியும் ஸ்டென்ஸில் செய்யலாம். இவ்வாறு நாமே ஸ்டென்ஸில் செய்யும் போது எமக்கு பிடித்தமான படங்களை செய்து கொள்ளலாம்.
ஸ்டைலஸ் டூல் (Stylus tool) :- இதுதான் எம்போஸிங் செய்வதற்கு பிரதானமாக தேவைப்படும் உபகரணமாகும். இது ஒரு பென்ஸில் வடிவில் இரு பக்கமும் சிறிய அழுத்தமான உலோக குமிழ்கள் பொருத்தியது போல இருக்கும். அனைத்து எம்போஸிங் வேலைகளுக்கும் பயன்படும். இது இல்லாதவர்கள் நன்கு அழுத்தமான வளைந்த முனையுள்ள ஏதாவது உபகரணங்களை பாவிக்கலாம். ஆனால் சிறிய நுணுக்கமான எம்போஸிங் வேலைகளுக்கு இதுதான் சிறந்தது.
டிசைனர் கத்தரிக்கோலால் வாழ்த்து அட்டையின் ஓரங்களை வெட்டவும்.
பின்னர் வாழ்த்து அட்டையை விரித்து ஒரு மவுஸ் பாடின் மேல் அல்லது போம் ஷீட்டின் மேல் வைத்து உள்புறமாக வேண்டிய இடத்தில் விரும்பிய ஸ்டென்ஸிலை வைத்து ஸ்டைலஸ் டூலினால் சிறிது அழுத்தமாக வெளி ஓரங்களை முதலில் வரையவும். பின்னர் ஃபில்லிங் செய்வது போல அதே டூலினால் அழுத்தமாக உள்ளே தேய்க்கவும்.
இப்போது வாழ்த்து அட்டையின் வெளிப்புறத்தில் தெளிவான pop-up effect உடன் படம் பதிந்திருக்கும்
பின்னர் படங்களுக்கு பிடித்த வர்ணத்தை கவனமாக தீட்டவும். படத்தின் மீது மீண்டும் ஸ்டென்ஸிலை வைத்து ஒரு ஸ்பொஞ்சால் சிறிது பெயிண்டை தொட்டு பூசினால் சீராகவும், அழகாகவும் இருக்கும்
வர்ண கடதாசியில் ஒரு அங்குல சதுர துண்டுகள் எட்டு வெட்டவும்.
பின்னர் ஒரு துண்டை எடுத்து இரு மூலை விட்டங்களினது வழியே மடித்து பின்னர் விரித்து இரண்டு எதிரெதிர் மூலைகளில் பிடித்து சேர்த்து மடிக்கவும்.
இவ்வாறு அனைத்து துண்டுகளையும் மடித்து கரைகளை டிசைனர் கத்தரிக்கோலால் நறுக்கி விடவும்.
பின்னர் ஒரு சிறிய துண்டு கடதாசியில் பசை பூசி அதன் மேல் மடித்த கடதாசிகளை ஒன்றுக்குள் ஒன்று சொருகி பூப் போல அடுக்கவும்.
பின்னர் நடுவில் ஒரு குந்தனை அல்லது சம்கியை வைத்து ஒட்டி, வாழ்த்து அட்டையின் நடுவில் இதை வைத்து ஒட்டவும். பின்னர் ரப்பர் ஸ்டாம்பின் உதவியால் விரும்பிய வாழ்த்தினை பதிக்கவும் அல்லது வர்ண பேனாவினால் வாழ்த்தை எழுதவும். அழகான வாழ்த்து அட்டை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

க்ராப்ட் டிச்சர் என்னங்க இது உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியல்லை, வார்த்தைகள் இல்லை.
ரொம்ப நன்றாக இருக்கு நானும் என் சின்ன பென்னிற்க்கு ஸ்க்ராப் புக் செய்ய வேண்டும் என்று நினத்தடோடு சரி. இதுவரை அதற்க்கான ஸ்டெப்ஸ் ஏதும் எடுக்கல்லை. பார்க்கலாம். ரொம்ப நன்றாக இருக்கு.

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு,உங்களோட ஒவ்வொரு கிராப்ட் ஒர்க்கும் ரொம்ப நல்லா இருக்கு,என் பையன வச்சுக்கிட்டு செய்து பார்க்க முடியல,ஆனால் எல்லாத்தயும் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கிட்டேன்,நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன் பா..வாழ்த்துக்கள் பா..

நர்மதா எப்பவும் Craft/Beading work செய்து Mind-ஐ பிஸியாக வைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் நர்மதா,
வாழ்த்து அட்டை அழகாக இருக்கிறது. டீ பாக் ஃபோல்டிங் செய்து காட்டியதற்கு நன்றி. :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நர்மதா,
வாழ்த்து அட்டை அழகோ அழகு. இன்னும் பதிவுகள் போடுங்கள்.
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta