நெல்லிக்காய் அல்வா

வழங்கியவர் : Vanitha Vilvaar...
தேதி : புதன், 18/02/2009 - 19:27
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- 1. நெல்லிகாய் (துருவியது) - 1 கப்
- 2. சர்க்கரை - 1 கப் - 1 1/4 கப்
- 3. ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
- பெரிய நெல்லிகாயை விதை நீக்கி துருவி வைக்கவும்.
- சர்க்கரை மூழ்கும் அளவுக்கு ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் (2 மேஜைக்கரண்டி) விட்டு, ஏலக்காய் தூள் போட்டு சர்க்கரை கரைய விடவும்.
- இதில் துருவிய நெல்லிகாய் சேர்த்து கிளரவும்.
- அல்வா பதம் வந்ததும் எடுத்து ஆரியதும் பாட்டிலில் போட்டு வைக்கலாம்.
Note:
விரும்பினால் ஒரு துண்டு பட்டை கூட சேர்க்கலாம். இதை ப்ரட்'கு ஜாம் போல் உபயோகிக்கலாம். தினமும் இதை கொஞ்சம் உணவில் சேர்த்தால் உடம்புக்கு நல்லது. கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
நெல்லிக்காய் அல்வா சூப்பர்.ஆனா எனக்கு துருவ 1 கப் வார அளவு கிடைக்கவில்லை .ப்ரெட் க்கு பூசி சாப்பிட்டேன்.குறிப்புக்கு நன்றி வனிதா
சுரேஜினி
சும்மா கொஞ்சமா செய்து பாருங்க அது பிடிச்சா நிறைய கிடைக்கும்போது செய்துக்கலாம். உங்களுக்கு இப்போ பெரிய நெல்லிக்காய் ரொம்ப நல்லது. நிறைய சேர்த்துக்கங்க. மிக்க நன்றி சுரேஜினி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா